ஒரு விமானத்தின் டிக்கெட்டை மற்றொரு விமான நிறுவனம் மூலம் வாங்கலாம்.. அப்படி செய்வதால் நமக்கு என்னநன்மை?

விமான நிறுவனங்களுக்கு இடையே கோட் ஷேரிங் முறையில் ஒரு விமானத்தின் டிக்கெட்டை மற்றொரு நிறுவனம் மூலம் புக் செய்யும் வசதி உள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ஒரு விமானத்தின் டிக்கெட்டை மற்றொரு விமான நிறுவனம் மூலம் வாங்கலாம்.. அப்படிச் செய்வதால் இவ்வளவு விஷயம் நமக்குக் கிடைக்குமா ?

விமான நிறுவனம் என்பது பல்லாயிரம் கோடிகளை முதலீடுகளாகக் கொண்டு துவங்கப்படும் தொழில், நம்மிடம் சில லட்சங்கள் இருந்தால் கார்களை வாங்கி டிராவல்ஸ் நடத்திவிடலாம். சில கோடிகள் இருந்தால் பஸ்களை வாங்கி டிராவல்ஸ் நடத்தலாம். ஆனால் விமானம் நிறுவனம் நடத்துவது அப்படி அல்ல அதற்கு பல்லாயிரம் கோடி முதலீடு வேண்டும். அப்படி இருக்கும் போது ஒரே நிறுவனமே உலகில் உள்ள எல்லா விமான நிலையங்களையும் இணைக்கும் வகையில் விமானங்களை இயக்க முடியாது.

ஒரு விமானத்தின் டிக்கெட்டை மற்றொரு விமான நிறுவனம் மூலம் வாங்கலாம்.. அப்படிச் செய்வதால் இவ்வளவு விஷயம் நமக்குக் கிடைக்குமா ?

ஆனால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு விமான நிறுவனமாகப் பார்த்து எந்த நிறுவனத்தின் விமானம் எங்குச் செல்கிறது. நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு எப்படிச் செல்லவேண்டும் எனத் தேடித் தேடி திட்டமிட முடியாது. இதை மனதில் வைத்து பயணிகள் தாங்கள் கிளம்பும் இடத்திலிருந்து செல்லும் இடத்திற்கு ஒரே டிக்கெட்டில் வேறு வேறு விமானங்களில் பயணிக்க அனுமதி வழங்குகிறது.

ஒரு விமானத்தின் டிக்கெட்டை மற்றொரு விமான நிறுவனம் மூலம் வாங்கலாம்.. அப்படிச் செய்வதால் இவ்வளவு விஷயம் நமக்குக் கிடைக்குமா ?

இது ஒரே நிறுவனத்தின் விமானமாக இருந்தாலும் சரி வேறு வேறு நிறுவனத்தின் விமானமாக இருந்தாலும் சரி ஒரே டிக்கெட்டில் பயணிக்க முடியும். ஒரே நிறுவனத்தின் விமானத்திற்கு ஒரே டிக்கெட் என்பது எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியது தான். ஆனால் வேறு வேறு நிறுவனத்தின் விமான பயணம் எப்படி சாத்தியம் ஒரு விமானத்தின் டிக்கெட்டை எப்படி வேறு விமான நிறுவனம் விற்பனை செய்ய முடியும் என்ற சந்தேகம் வரலாம்.

ஒரு விமானத்தின் டிக்கெட்டை மற்றொரு விமான நிறுவனம் மூலம் வாங்கலாம்.. அப்படிச் செய்வதால் இவ்வளவு விஷயம் நமக்குக் கிடைக்குமா ?

இதற்கு தான் விமானத்துறையில் கோட் ஷேரிங் என்ற ஒப்பந்தம் இருக்கிறது. ஒரு விமான நிறுவனம் தங்களால் எந்தெந்த விமான நிலையங்களுக்கு சர்வீஸ் வழங்க முடியவில்லையோ அந்தந்த விமான நிலையங்களுக்கு சர்வீஸ் வழங்கும் மற்ற விமான நிறுவனங்களுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைப் போடுகிறது. அதன்படி முதல் விமான நிறுவனம் இரண்டாம் விமான நிறுவனம் செயல்படும் ரூட்களுக்கான டிக்கெட்களை விற்பனை செய்யவும், இரண்டாம் விமான நிறுவனம் முதல் விமான நிறுவனம் செயல்படும் ரூட்களில் டிக்கெட்களை விற்பனை செய்யவும் ஒப்பந்தம் செய்கிறார்கள்.

ஒரு விமானத்தின் டிக்கெட்டை மற்றொரு விமான நிறுவனம் மூலம் வாங்கலாம்.. அப்படிச் செய்வதால் இவ்வளவு விஷயம் நமக்குக் கிடைக்குமா ?

அதன்படி பயணி ஒருவர் குறிப்பிட்ட விமான நிலையத்திற்குச் செல்ல டிக்கெட் புக் செய்ய முயற்சி செய்கிறார் என்றால் முதல் விமான நிறுவனம் அவரிடம் நேரடியாகக் குறிப்பிட்ட விமான நிலையத்திற்கு விமானம் இல்லை ஆனால் குறிப்பிட்ட விமான நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து வேறு விமானம் மாறி செல்லலாம் எனத் தெரிவிப்பார்கள். அதன் படி ஒரே விமான டிக்கெட்டிலேயே இரண்டு விமானத்திலும் குறிப்பிட்ட நபர் பயணிக்கலாம்.

ஒரு விமானத்தின் டிக்கெட்டை மற்றொரு விமான நிறுவனம் மூலம் வாங்கலாம்.. அப்படிச் செய்வதால் இவ்வளவு விஷயம் நமக்குக் கிடைக்குமா ?

இதற்காக நீங்கள் கட்டும் பணத்தை டிக்கெட் விலை ரீதியில் பிரித்துக்கொடுக்கப்படும். இரு நிறுவனங்களும்

இந்த டிக்கெட் விலையை பங்குபோட்டுக்கொள்ளும். இப்படியாக நீங்கள் வாங்கிய விமான டிக்கெட் கோட் ஷேரிங் முறையில் வாங்கப்பட்டது என்றால் அது உங்கள் விமான டிக்கெட்டில் "Operated By" என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் மூலம் எந்த நிறுவனத்துடனான கோட் ஷேரிங் முறையில் நீங்கள் பயணிக்கிறீர்கள் எனத் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு விமானத்தின் டிக்கெட்டை மற்றொரு விமான நிறுவனம் மூலம் வாங்கலாம்.. அப்படிச் செய்வதால் இவ்வளவு விஷயம் நமக்குக் கிடைக்குமா ?

இந்த கோட் ஷேரிங் பயணத்தால் பயணிகளுக்கு நன்மையும் தீமையும் கலந்தே இருக்கிறது. அதன்படி ஒருவர் இப்படியா கோட் ஷேரிங் முறையில் டிக்கெட் வாங்கினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என பார்க்கலாம். இப்படியாக கோட் ஷேரிங் முறையில் டிக்கெட் வாங்கும் போது அவருக்குத் தான் செல்ல வேண்டிய இடத்திற்குக் குழப்பம் இல்லாமல் ஒரே டிக்கெட்டில் பயணிக்க முடியும். அதே போல அவரது லக்கேஜ் தானாகவே அடுத்த விமானத்திற்கு மாறிவிடும்.

ஒரு விமானத்தின் டிக்கெட்டை மற்றொரு விமான நிறுவனம் மூலம் வாங்கலாம்.. அப்படிச் செய்வதால் இவ்வளவு விஷயம் நமக்குக் கிடைக்குமா ?

தனித்தனியாக டிக்கெட் எடுத்தால் முதல் விமானத்திலிருந்த இறங்கியதும் லக்கேஜை பெற்றுக்கொண்டு அடுத்த விமானத்திற்கு செக் இன் செய்ய வேண்டும். ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் போதுலக்கேஜை கடைசி விமான நிலையத்தில் கன்வெயர் பெல்டில் பெற்றுக்கொள்ளலாம். அதுவரை லக்கேஜ் குறித்த கவலை வேண்டாம். அதேபோல காலதாமத்தால் விமானத்தை தவர விடக்கூடிய வாய்ப்பும் இருக்காது.

ஒரு விமானத்தின் டிக்கெட்டை மற்றொரு விமான நிறுவனம் மூலம் வாங்கலாம்.. அப்படிச் செய்வதால் இவ்வளவு விஷயம் நமக்குக் கிடைக்குமா ?

ஒரே டிக்கெட்டில் புக் செய்தால் முதல் விமானம் தாமதம் ஆனால் அதற்குத் தகுந்தார் போல இரண்டாவது விமானம் முதல் விமானத்திலிருந்து வரும் குறிப்பிட்ட பயணிகளுக்காகக் காத்திருக்கும். ஆனால் தனித்தனியாக டிக்கெட் எடுத்தால் முதல் விமானம் தாமதமானால் இரண்டாவது விமானம் அந்த பயணிக்காகக் காத்திருக்காது. இந்த வசதியை ஒரே ரீதியிலான டிக்கெட் எடுக்கும் போது பெற முடியும்.

ஒரு விமானத்தின் டிக்கெட்டை மற்றொரு விமான நிறுவனம் மூலம் வாங்கலாம்.. அப்படிச் செய்வதால் இவ்வளவு விஷயம் நமக்குக் கிடைக்குமா ?

இதில் நடக்கும் தீமை என்னவென்றால் முதல் விமானத்தில் நாம் முதல் வகுப்பில் டிக்கெட் புக் செய்திருந்தால் இரண்டாவது விமானத்தில் அது சாதாரண வகுப்பு டிக்கெட்டாக மாறக்கூடும். அதே போல முதல் விமானத்தில் சாதா டிக்கெட் எடுத்து இரண்டாவது விமானத்தில் அது முதல் வகுப்பு டிக்கெட்டாக மாறும் அதிசயமும் நடக்கும். ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது இது பயணிகளின் நலன் மற்றும் நன்மையை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு நிறுவனம் தனது சேவையை விரிவுபடுத்திக்கொள்ள முடியும். தனது வாடிக்கையாளர்களுக்கும் பலன் கிடைக்கும்.

ஒரு விமானத்தின் டிக்கெட்டை மற்றொரு விமான நிறுவனம் மூலம் வாங்கலாம்.. அப்படிச் செய்வதால் இவ்வளவு விஷயம் நமக்குக் கிடைக்குமா ?

மிக முக்கியமான பலன் ஒன்றும் இருக்கிறது. பொதுவாக விமான நிறுவனங்கள் பயணிகள் தனது நிறுவன விமானத்தில் எவ்வளவு நேரம் பறந்துள்ளனர். என்பதை வைத்து அடுத்த விமான டிக்கெட் முன்பதிவில் சலுகை வழங்கும். அப்படியாக நாம் இந்த கூட்டு விமான டிக்கெட்டில் பயணிக்கும் போது நாம் டிக்கெட் புக் செய்த நிறுவனத்திலேயே இரண்டாவது விமான பயண நேரமும் சேர்க்கப்படும். அதாவது இரண்டாவது விமானம் 6 மணி நேரப் பயணம் முதல் விமானம் 4 மணி நேரப் பயணம் என்றால் மொத்தம் 10 மணி நேர விமான பயணமாகக் கணக்கில் கொள்ளப்படும். இது அடுத்த டிக்கெட் புக்கிங்கின் போது சலுகை விலையில் டிக்கெட் பெற உதவும்.

More from DriveSpark

Article Published On: Friday, July 8, 2022, 14:04 [IST]
English summary
What is code sharing in aviation how it work
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+