ரொம்ப காசு குடுத்து பிஸ்னஸ் கிளாஸ் டிக்கெட் எடுத்தாலும் சில சமயங்களில் எகானமிக் கிளாஸில்தான் பயணிக்க வேண்டும்
விமானங்களில் பிஸ்னஸ் வகுப்பில் டிக்கெட் எடுத்தாலும் சில நேரம் அவர்களுக்கு எகானமிக் வகுப்பில் தான் சீட் ஒதுக்கப்படும். இதற்கு என்ன காரணம்? இதனால் என்ன நடக்கும்? முழு விபரங்களை இங்கே காணுங்கள்.

நாம் எல்லோருக்கும் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் சிலருக்கு அந்த ஆசை நிறைவேறியிருக்கும். சிலருக்கு இன்றும் நிறைவேறாத ஆசையாக இருக்கும். எப்படி இருந்தாலும் விமானப் பயணம் என்பது ஒரு சிறப்பான அனுபவம் தான். இந்த அனுபவம் குறித்து புதிது புதிதாக தெரிந்து கொள்ள தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகமாக தான் இருக்கும்.

அப்படியாக இன்று நாம் புதிதாக ஒரு விஷயத்தை பற்றித் தெரிந்து கொள்ளப்போகிறோம். பொதுவாக விமானங்களில் பயணிகளின் இருக்கைகள் வகுப்பு வாரியாக பிரிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக எகானமிக் வகுப்பு, பிரிமியம் எகானிக் வகுப்பு, பிஸ்னஸ் வகுப்பு, முதல் வகுப்பு என பொதுவாக பிரிவுகள் உள்ளன.

இதில் எகானமிக் மற்றும் பிரிமியம் எகானமிக் வகுப்பில் மட்டுமே டிக்கெட் விலை ஓரளவுக்குக் குறைவாக இருக்கும். ஆனால் பிஸ்னஸ் மற்றும் முதல் வகுப்பில் டிக்கெட் விலை அதிகமாக இருக்கும் ஒரே விமானத்திற்குள் ஏன் இப்படி வேறுபாடு என்றால் இரண்டு டிக்கெட்டிற்கும் வழங்கப்படும் வசதிகள் வேறு வேறாக இருக்கும்.

எகானமிக் வகுப்பில் சிறிய சீட், சொகுசு வசதிகள் இருக்காது, உணவுவழங்கப்படாது உள்ளிட்டவைகள் இருக்கும் ஆனால் பிஸ்னஸ் மற்றும் முதல் வகுப்பு டிக்கெட்களில் அப்படி அல்ல போதுமான இட வசதிகளுடன் சீட், தேவையான உணவுகளும் வழங்கப்படும். இதன் காரணமாகவே இதற்கு அதிக விலையும் இருக்கிறது.

இது மட்டுமல்ல பொதுவாக இந்தியாவில் ஓடும் பெரும்பாலான விமானங்கள் விமானம் புறப்படும் போத எகனாமிக் சீட்டில் 90 சதவீதத்திற்கும் அதிகமான சீட்கள் ஃபில் ஆகிவிடும். ஆனால் பிஸ்னஸ் அல்லது முதல் வகுப்பு சீட்கள் அவ்வளவு சீக்கிரம் நிரம்பாது. விமானம் கிளம்பும் கடைசி நேரம் வரை இந்த சீட்களை முன்பதிவு செய்ய முடியும்.

இதனால் கடைசி நிமிடத்தில் பயணத்தைத் திட்டமிடுபவர்கள் அதிகம் செலவானாலும் குறிப்பிட்ட இடத்திற்கு உடனே செல்ல வேண்டும் என நினைப்பவர்கள் இந்த பிஸ்னஸ் வகுப்பு டிக்கெட்களை எடுத்து பயணம் செய்வார்கள். அதிக டிமாண்ட் உள்ள டிக்கெட் என்பதாலும் இந்த டிக்கெட்டின் விலை அதிகமாக இருக்கிறது.

ஆனால் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? என்னதான் பிஸ்னஸ் அல்லது முதல் வகுப்பு டிக்கெட் எடுத்திருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் அந்த வகுப்பு டிக்கெட் எடுத்தவர்களை எகனாமிக் வகுப்பு டிக்கெட்டிற்கு மாற்றும் அதிகாரம் விமான நிறுவனங்களுக்கு இருக்கிறது. ஆனால் இப்படியான சம்பவம் நிகழ்வது அரிது தான் என்றாலும் இதற்கு விதிமுறைகளும் அனுமதிக்கிறது.

அதாவது குறிப்பிட்ட சில காரணங்களுக்காக மட்டுமே இந்த முடிவு எடுக்கப்படும். அதாவது கடைசி நேரத்தில் பிஸ்னஸ் வகுப்பைச் செயல்படுத்த முடியாதபடி விமான நிறுவனங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் இந்த முடிவை எடுக்கலாம். பிஸ்னஸ் வகுப்பு / முதல் வகுப்பு டிக்கெட் எடுத்தவர்களை எகனாமிக் வகுப்பிற்கு மாற்றலாம்.

அவசர நிலை காரணமாக நாட்டின் தலைவர்கள், அமைச்சர், முதலமைச்சர்கள், ராணுவ அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்டவர்கள் வேறு வழியில்லாமல் குறிப்பிட்ட அந்த விமானத்தில் பயணித்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை வரும் போது அவர்களுக்கான பாதுகாப்பு கருதி பிஸ்னஸ் அல்லது முதல் வகுப்பு முழுவதும் அவர்களுக்கு ஒதுக்கப்படும். அந்த நேரத்தில் அந்த டிக்கெட்களை புக் செய்திருந்தவர்கள் எகனாமிக் வகுப்பிற்கு மாற்றப்படுவார்கள்.

கடைசியாக விமான நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச மைல்ஸ் என்ற ஒரு சலுகையை வழங்குகிறது. அடிக்கடி விமானச் சேவையைப் பயன்படுத்தியவர்கள் எவ்வளவு தூரம் விமானச் சேவையைப் பயன்படுத்தியுள்ளார்களோ அதற்குத் தகுந்தார் போல அவர்களுக்கு பாயிண்ட் வழங்கப்படும்.

அந்த பாயிண்ட்ஸ் மூலம் யாராவது கடைசி நேரத்தில் பிஸ்னஸ் வகுப்பை புக் செய்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு பணம் கொடுத்து புக் செய்தவர்கள் எகனாமிக் வகுப்பிற்கு மாற்றப்படுவர். ஆனால் பெரும்பாலும் விமானங்களில் பிஸ்னஸ்/ முதல் வகுப்பு நிரம்பாததால் இது நடப்பதற்குச் சாத்தியம் மிக மிகக் குறைவு தான். இருந்தாலும் இதற்கு விதிமுறை இருக்கிறது.

இப்படியாக எந்தக் காரணத்திற்காக ஒரு பயணியின் பிஸ்னஸ் / முதல் வகுப்பு டிக்கெட் டவுண் கிரேடு செய்யப்பட்டாலும் அவர்களுக்கு ஏற்கனவே கட்டிய பணத்தில் ரீஃபண்ட் செய்ய வேண்டியது விமான நிறுவனத்தின் பொறுப்பாகும். குறிப்பிட்ட அந்த பயணிக்கு எவ்வளவு ரீஃபண்ட் கொடுக்க வேண்டும் என சிவில் ஏவியேசன் ஆணையம் ஒரு வரைமுறையை வகுத்துள்ளது.

இப்படியாக டவுண்கிரேடு செய்யப்பட்ட டிக்கெட்டின் பயண தூரம் 1500 கி.மீ உள்ளாக இருந்தால் 30 சதவீதமும், 1500-3500 கி.மீ தூரம் வரை இரந்தால் 50 சதவீதமும், 3500 கி.மீ அதிகமாக இருந்தால் 75 சதவீதக் கட்டணமும் திரும்ப வழங்கப்பட வேண்டும். என சிவில் ஏவியேஷன் ஆணையம் விதிமுறைகளை வகுத்து வைத்துள்ளது.

அதுவும் இந்த ரீபஃண்டை பயணம் முடிந்த 7 நாட்களுக்குள் டவுண் கிரேடு செய்யப்பட்ட பயணிகளுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இப்படியாக நீங்கள் பிஸ்னஸ்/ முதல் வகுப்பில் பயணிக்கும் போது டவுண்கிரேடு செய்யப்பட்டால் நீங்கள் பயணம் முடிந்ததும் நீங்கள் உங்கள் விமான நிறுவனத்திற்கு நீங்கள் ஏன் டவுண்கிரேடு செய்யப்பட்டீர்கள் என்ற விளக்கத்தைக் கேட்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. விமான நிறுவனமும் அதற்கான விளக்கத்தைக் கட்டாயம் தெரிவித்தே ஆக வேண்டும்.

அதுமட்டுமல்ல உங்களுக்கு 7 நாட்களுக்குள் ரீஃபண்ட் வரவில்லை என்றாலும் இதற்கான விளக்கத்தையும் ரீஃபண்ட் எப்பொழுது வரும் என்ற கேள்வியை உங்களால் நேரடியாக விமான நிறுவனத்திற்கே கேட்க முடியும். இந்த ரீஃபண்ட் பணத்தை விமான நிறுவனங்கள் தர மறுத்தால் உங்களால் அந்நிறுவனம் மீது வழக்குத் தொடரவும் முடியும்.

நடைமுறையில் சீவில் ஏவியேஷன் சொன்ன பரிந்துரையை விட இப்படியா சம்பவம் நடக்கும் போது பெரும்பாலான விமான நிறுவனங்கள் பயணிகள் பிஸ்னஸ் / முதல் வகுப்பு எவ்வளவு பணம் கட்டினார்களோ அதில் எகனாமிக் வகுப்பிற்கான டிக்கெட் விலையைக் கழித்துவிட்டு மீதம் உள்ளத் தொகையை அவர்களுக்கு ரீஃபண்ட் செய்துவிடுகின்றனர். இதன் மூலம் டவுண் கிரேடு செய்த வாடிக்கையாளர்களிடமும் நல்ல பெயரை எடுக்க விமான நிறுவனங்கள் முயற்சிக்கின்றன.

இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. நீங்கள் பிஸ்னஸ்/ முதல் வகுப்பு டிக்கெட்டை புக் செய்யும் போது அந்த டிக்கெட்டிற்கான விலைக்கு ஏற்ற வரியையும் சேர்த்து கட்டியிருப்பார்கள். இதையும் விமான நிறுவனங்கள் திரும்பத் தர வேண்டும். இப்படியாக விமானங்களில் டிக்கெட்டில் டவுண்கிரேடு நடப்பதை பெரும்பாலும் விமான நிறுவனங்கள் தவிர்த்துவருகின்றனர். வேறு வழியில்லாத சூழ்நிலையிலேயே இந்த டவுண் கிரேடு நடக்கிறது. இப்படியாக நீங்கள் விமானப் பயணம் செய்யும் போது உங்கள் டிக்கெட் டவுண்கிரேடு செய்யப்பட்டால் எப்படி உணர்வீர்கள்? உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications