விமானத்தில் இப்படி ஒரு சீட் இருப்பது யாருக்குமே தெரியாது... ஏன் ரொம்ப ரகசியமாக வச்சிருக்காங்க தெரியுமா?
விமானத்தில் காக்பிட் உள்ளே ஜம்ப் சீட் எனப்படும் விமானி துணை விமானி போக மற்றொரு சீட் ஒன்று இருக்கும் இதில் யார் பயணிப்பார்கள்? எதற்காக இந்த சீட்? முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

நாம் எல்லோரும் வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பயணித்திருப்போம். பலருக்கு விமானத்தில் பயணிக்கும் போது விமானத்திற்குள் ஏறும் தருணம் மிக பிரம்மிப்பாக இருக்கும். விமானத்தில் அமர்ந்திருக்கும் போது விமானி அமர்ந்து விமானத்தை ஓட்டும் இடம் எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும்.

இதனால் விமானத்தை விட்டு இறங்கும் போது விமானி அமர்ந்திருக்கும் பகுதியில் வெளியிலிருந்தே ஏதாவது தெரகிறிதா? என எட்டி எட்டி பார்த்துவிட்டுச் செல்லுவோம். சிலர் விமானப்பணிப்பெண்களிடம் விமானியின் அறையைப் பார்க்க அனுமதி கூட கேட்பார்கள். ஆனால் பயணிகளுக்குப் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானிகளின் அறையைக் காண அனுமதி கிடையாது.

ஆனால் ஒரு விமானி அமர்ந்திருக்கும் அறை எப்படி இருக்கும் எனப் புகைப்படங்களும், வீடியோக்களும் பொது வெளியிலேயே அதிகமாகக் கிடைக்கிறது. அதை நாம் பெரும்பாலும் பார்த்திருப்போம். விமானிகள் அறையில் இரண்டு விமானிகள் அமரும் இருக்கை இருக்கும். அதைச் சுற்றிலும் பட்டன்கள் நாப்கள் எல்லாம் இருக்கும்.

இது எல்லாம் பார்க்கும் போது நமக்கே குழப்பமாக இருக்கும் ஒரு விமானம் பறப்பதற்கு இத்தனை விஷயங்கள் தேவைப்படுகிறதா? என நமக்கே வியக்க வைக்கும். ஆனால் இதில் நமக்குத் தெரியாத ஒரு ரகசியம் இருக்கிறது. நாம் எல்லோரும் விமானிகள் வாகனத்தை இயக்கும் அறையில் விமானி மற்றும் துணை விமானிக்கான சீட்கள் மட்டுமே இருக்கும் என நினைத்திருப்போம்.

ஆனால் இது இல்லாமல் ரகசியமாக 3வது சீட் ஒன்றும் இருக்கும் இது அனைத்து விதமான விமானங்களிலும் இருக்கும் ஆனால் பலருக்கும் இந்த சீட் குறித்துத் தெரியாது. இந்த சீட்டிற்குப் பெயர் ஜம்ப் சீட் இந்த சீட் விமானத்தின் காக்பிட் உள்ள சில நேரம் விமானிகளைத் தவிர வேறு யாராவது பயணிக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டால் இந்த ஜம்ப் சீட்டில் அமர்ந்து தான் பயணிப்பார்கள். இந்த ஜம்ப் சீட்டிலும் அனைத்து விதமான பாதுகாப்பு வசதியும் இருக்கும்.

விமானத்தின் ஜம்ப் சீட் பொதுவாக ரகசியமாக இருக்கும் சாதாரணமாகப் பார்த்தால் இப்படி ஒரு சீட் இருப்பதே நமக்குத் தெரியாது ஆனால் விமானிகள் தேவை ஏற்படும் போது மட்டும் இந்த சீட்களை பயன்படுத்திக் கொள்வார்கள். இது விமானத்தில் சில நேரம் விமான நிறுவனத்தின் அதிகாரிகள், அல்லது அரசு அதிகாரிகள் ஏதேனும் சோதனைக்காக காக்பிட்டிற்குள் பயணிக்க வேண்டிய சூழ்நிலைகள் வரும் போது அவர்கள் அமர்வதற்காக இந்த சீட்டை பயன்படுத்துவார்கள்.

இது போக நீண்ட தூரம் பயணம் செய்யும் 2க்கும் மேற்பட்ட விமானிகள் விமானத்தில் இருப்பார்கள் அவர்களில் 2 விமானிகள் மட்டும் செயல்படுவர் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு விமானிகள் மாறுவார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் விமானத்தை இயக்காமல் இருக்கும் விமானிகள் அமர இந்த சீட்டை பயன்படுத்திக்கொள்வார்கள்.

இந்த சீட் விமானிகள் அறையில் மட்டுமல்ல கேபின்களிலும் இருக்கும். இந்த சீட்களை கேபின் க்ரூ எனப்படும் விமான பணியாளர்கள் இந்த விமானத்தின் டேக் ஆஃப் மற்றும் லேண்ட்டிங்கின் போதும் பயன்படுத்துவார்கள். அவர்கள் பயன்படுத்தாத போது அதை மடக்கி வைத்துக்கொள்ளலாம். இப்படியாக வடிவமைக்கப்பட்ட இந்த சீட்டிற்கும் ஜம்ப் சீட் என்று தான் பெயர்.


Click it and Unblock the Notifications