நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்... மேற்கு வங்கம் அருகே நடந்த அரிய சம்பவம்
மேற்கு வங்க மாநிலம் துர்காபூரை நோக்கி வந்த விமானம் ஒன்று டர்புலன்ஸை சந்தித்தது. இதனால் விமானத்தில் பயணித்த பயணிகள் 11 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த முழு விபரங்களை கீழே காணலாம் வாருங்கள்

கடந்த மே மாதம் 1ம் தேதி மும்பையிலிருந்து, மேற்கு வங்கம் துர்காபூர் வரை பயணித்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானம் ஒன்று மும்பையிலிருந்து கிளம்பிய 2 மணி நேரத்தில் துர்காபூர் விமான நிலையத்திற்கு சுமார் 200 கி.மீ தொலைவில் பறந்து கொண்டிருந்த போது திடீரென நடுவானில் விமானத்தில் டர்புலன்ஸ் ஏற்பட்டது.

இதனால் அந்த விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டது. பலர் தங்கள் சீட்டில் அமர முடியாமல் தள்ளாடினர். இதில் பயணிகளுக்குப் பலருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் நல்லவேளையாக அந்த விமானத்தை இயக்கிய விமானி துரிதமாகச் செயல்பட்டு அந்த விமானி பத்திரமாகத் தரையிறக்கினார்.

இந்த விமானத்தில் பயணித்த 11 பயணிகளுக்குக் காயம் ஏற்பட்டது. அதில் 2 பயணிகளுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் விமானம் தரையிறங்கியதும் ஸ்பைஸ் ஜெட் நிர்வாகம் காயமடைந்த பயணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முடிவு சிவில் ஏவியேஷன் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையில் இந்த கடும் டர்புலன்ஸ் ஏற்பட்டதற்கான காரணங்கள் தெரியவரும்.

அந்த விசாரணை அறிக்கை வரும் முன் நாம் விமானங்களில் ஏன் டர்புலன்ஸ் ஏற்படுகிறது. அப்படி டர்புலன்ஸ் ஏற்படுவதை நாம் எப்படி உணர முடியும்? அதனால் ஏன் பயணிகள் காயமடைந்தார்கள்? இப்படியாக டர்புலன்ஸ் ஏற்படும் போது அதிலிருந்து பயணிகள் எப்படி தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தகவல்களை விரிவாகக் காணலாம்

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது தீடிரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் காற்று மாறி மாறி வீசி விமானம் ஆட்டம் காணும், பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து விமானம் காற்றின் தன்மைக்கு ஏற்பட்ட தடம் மாற துவங்கும். இதைத் தான் டர்புலன்ஸ் என அழைக்கிறார்கள். இப்படியாக விமானம் நடுவானில் டபுலன்ஸில் சிக்குவது என்பது மிகவும் அரிதாக நடக்கக்கூடிய விஷயம் தான். இந்த டர்புலன்ஸ் ஏற்பட வானிலையில் அதிகமான வாய்ப்புகள் இருப்பதால் தான் மோசமான வானிலைக்காக விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது.

இந்த டர்புலன்ஸ் ஏற்படும் போது விமானத்திற்குள் இருப்பவர்களுக்குச் சாதாரண நிலையில் இருக்க முடியாது. அவர்கள் இருக்கும் இடம் எல்லாம் கடுமையாக ஆட்டம் காணும் அவர்கள் அமர்ந்திருந்தாலும் பேலன்ஸ் தவறும். பயணிகள் நின்று கொண்டிருக்கும் போது டர்புலன்ஸ் ஏற்பட்டால் அவர்கள் கீழே விழுந்துவிடுவார்கள். இப்படியாகப் பயணிகள் பேலன்ஸ் தவறி விழும்போது அவர்கள் விமானத்தில் ஏதாவது ஒரு இடத்தில் மோதி காயமடைய வாய்ப்பு உள்ளது.

இந்த டர்புலன்ஸ் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் மோசமான வானிலை தான் பொதுவாக விமானங்கள் பறக்க அதன் இறக்கைகளுக்கு கீழேயும் மேலேயும் காற்றின் அழுத்தம் சீராக இருக்க வேண்டும். காற்றின் அழுத்தம் மாறுபட்டால் இந்த டர்புலன்ஸ் ஏற்படும். அது மட்டுமல்ல விமானத்தின் இன்ஜினில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலும் டர்புலன்ஸ் ஏற்படும். அதே போல வெப்ப மண்டலம் காரணமாகவும் டர்புலன்ஸ் ஏற்படலாம்

டர்புலன்ஸ் என்பது பல படிநிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.சில டர்புலன்ஸ்கள் மிக லேசானதாக இருக்கும், சில டர்புலன்ஸ் மிக மோசமானதாக இருக்கும், பெரும்பாலும் விமானம் டர்புலன்ஸ்க்குள் சிக்கும் முன்பே விமானிகளுக்கு அது தெரிந்துவிடும். அதனால் பெரும்பாலான நேரத்தில் விமானிகள் பயணிகளுக்கு டர்புலன்ஸ் குறித்து முன்னேரே அறிவித்து அவர்களைச் சீட்டில் அமர வைத்த சீட்பெல்டை போடச் சொல்லிவிடுவார்கள்

இந்த டர்புலன்ஸ் வானிலைக்கு ஏற்ப எவ்வளவு நேரம் இருக்கும் என்பது மாறுபடும் சிறிய அளவிலான வானிலை மாற்றத்தால் டர்புலன்ஸ் ஏற்பட்டால் விமானி அதை மிக விரைவாகச் சரி செய்ய முடியும். விமானிகளுக்குக் காற்றில் மாற்றம் தாங்கள் பறக்கும் உயரத்தில் எவ்வளவு தூரம் இருக்கிறது என்பது தெரியும் அதற்கு ஏற்றார் போல விமானம் பறக்கும் உயரத்தை மாற்றி டர்புலன்ஸில் விமானத்தைச் சிக்க வைக்காமல் தடுத்துவிடுவார்கள் சில டர்புலன்ஸ்கள் தவிர்க்க முடியாத நிலையிலும் இருக்கும்

டர்புலன்ஸ் ஏற்பட்டதால் விமானங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமா? விமானங்கள் வெடிக்குமா என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. ஒரு விமானம் டர்புலன்ஸில் சிக்கினால் விமானங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவது என்பது 99 சதவீதம் நடக்காது. ஆனால் விமானத்திற்கு உள்ள இருப்பவர்களுக்கு அசௌகரியம் ஏற்படும் விமானம் ஆடுவதைப் பார்த்து அவர்களுக்கு உயர் பயம் கூட வரும்.

ஆனால் டர்புலன்ஸிலிருந்து விமானம் கடந்து வந்த பின்பு மீண்டும் விமானம் சீராகப் பறக்கத் துவங்கும். இந்த டர்புலன்ஸில் விமானம் சிக்கும் போது பயணிகள் செய்ய வேண்டிய ஒரே விஷயம் அவர்கள் விமானங்களில் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் அமர்ந்து சீட்பெல்டை போட்டுக்கொள்வது மட்டும் தான்.


Click it and Unblock the Notifications








