விமானத்திற்குக் கொம்பு மாதிரி இருக்கும் இந்த கருவி மட்டும் சரியா ஒர்க் பண்ணலேனா விஷயம் விபரீதம் ஆகிடும் !
விமானங்களில் பிடாட் டியூப் என்ற கருவி பொருத்தப்பட்டிருக்கும்.
Recommended Video
இந்த கருவி விமானத்திற்கு எந்த அளவிற்கு முக்கியம், இதெப்படி வேலை செய்கிறது. எதற்காக இது விமானங்களில் பொருத்தப்படுகிறது? இதனால் என்ன நடக்கும்? இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்த உலகிலேயே வியக்க வைக்கும் போக்குவரத்து வசதி என்றால் அது விமான போக்குவரத்து வசதி தான். ஒரு விமானம் இயங்க லட்சணக்கான அறிவியல் விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். அந்த இதற்குப் பின்னால் கோடிக்கணக்கான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே தான். இருக்கிறது. ஒரு விமானம் இயங்குவதற்கு விமானத்திற்குள் லட்சக்கணக்கான உதிரிப் பாகங்கள் இருக்கின்றன. இப்படியானவற்றில் முக்கியமான ஒன்று பிட்டாட் டியூப்

இந்த பிட்டாட் டியூப் என்பது எல்லா விமானிகளிலும் இருக்கும் ஒரு கருவி இந்த கருவி விமானத்திற்கு வெளியே இருக்கும். ஸ்டாக்நேஷன் பிரஷர், மற்றும் ஸ்டாடிக் பிரஷர் ஆகியவற்றை அளவீடு செய்யும் கருவி. இந்த கருவி விமானத்திற்கு எவ்வளவு முக்கியம் ஸ்டாக்நேஷன் பிரஷர், ஸ்டாடிக் பிரஷர் என்றால் என்ன? இது இல்லை என்றால் விமானத்தில் என்ன நடக்கும் தெளிவாகக் காணலாம் வாருங்கள்

பிடாட் டியூப் என்பது காற்றை வைத்து அளவிடும் ஒரு கருவி, இது ஏவியேசன் துறையில் மட்டுமல்ல படகுகள், இன்டஸ்ட்ரியல் மிஷினரி, ஃபார்முலா 1 ரேஸ் ஆகிய இடங்களில் இந்த கருவி பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக பிடாட் டியூப்பில் முன்புறம் ஒரு ஓட்டை இருக்கும் இது ஸ்டாக்நேஷன் பிரஷரை மட்டும் தான் அளவீடு செய்யும். ஆனால் விமானத்தில் பயன்படுத்தப்படும் பிடாட் டியூப்பில் முன்புறம் ஒரு ஓட்டையும், பக்கவாட்டு பகுதியில் ஒரு ஓட்டையும் இருக்கும். இது பிடாட் மற்றும் ஸ்டாடிக் டியூப்களாக செயல்படும் இதிலேயே ஸ்டாக்நேஷன் பிரஷர் மற்றும் ஸ்டாடிக் பிரஷர் ஆகியவற்றை அளவீடு செய்யும். ஒரே டியூபில் இரண்டும் செய்வதால் தனியாக ஸ்டாடிக் டியூப் பொருத்தப்பட வேண்டியதில்லை என்பதால் இப்படி டிசைன் செய்துள்ளனர்.

முதலில் நாம் ஸ்டாடிக் பிரஷர் என்றால் என்ன? ஸ்டாக்நேஷன் பிரஷர் என்றால் என்ன? என்பதைப் பற்றிப் பார்ப்போம். இதற்கு நாம் ஒரு விஷயத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு பெரிய குழாயின் உள்ள தண்ணீர் வேகமாகச் செல்கிறது. இப்பொழுது நீங்கள் தவறி அதில் விழுந்துவிட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்த குழாய் உள்ள தண்ணீரில் வேகத்தில் அடித்துச் செல்லப்படுவீர்கள்.

அப்படி என்றால் தண்ணீர் என்ன வேகத்தில் செல்கிறதோ அதே வேகத்தில்தான் நீங்களும் செல்வீர்கள். இந்த பிரஷருக்கு பெயர் ஸ்டாடிக் பிரஷர், இதுவே உங்கள் கை அல்லது கால் குழாய் பகுதியைப் பிடித்துவிட்டால் உங்கள் உடன் அந்த இடத்தை விட்டு நகராது ஆனால் உங்களைச் சுற்றி தண்ணீர் சென்று கொண்டு தான் இருக்கும். அப்பொழுது உங்கள் உடல் அதிகமா பிரஷரை கொடுத்து அந்த தண்ணீரின் அழுத்தத்தைத் தாங்க வேண்டும். அந்த பிரஷர் தான் ஸ்டாக்நேஷன் பிரஷர்.

இந்த தகவல்களை வைத்து விமானத்தில் விமானம் என்ன வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது எவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது என்பதைக் கணக்கிட முடியும். இந்த பிடாட் டியூப் வழியாக வரும் காற்றின் அழுத்தத்தை வைத்துத் தான் விமானிகள் முன்பு இருக்கும் காஜ்களில் விமானத்தின் வேகம், மற்றும் உயரத்தைக் கணக்கிடும் கருவி வேலை செய்கிறது. அதனால் விமானங்களுக்கு இந்த கருவி மிகவும் முக்கியம். இந்த கருவியின் மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்துத் தான் விமானிகள் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என முடிவு செய்வார்கள்.

விமானத்தின் இந்த பிடாட் டியூபில் உள்ள முன்பக்க பகுதியில் உள்ள ஓட்டை ஸ்டோக்நேஷன் பிரஷரை கணக்கிடும், பக்கவாட்டு பகுதியில் உள்ள ஓட்டை ஸ்டாடிக் பிரஷரை கணக்கிடும். இந்த இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் தான் டைனமிக் பிரஷர் எனக் கணக்கிடப்படுகிறது. இதை வைத்துத் தான் விமானத்தின் வேகத்தைக் கணக்கிடுகின்றனர்.

விமானங்கள் மிகக் குறைவான வேகத்திலும் பறக்க முடியாது. அப்படிப் பறந்தால் கவிழ்ந்துவிடும். அதே போல அந்த விமானம் தாங்கும் அளவிற்கும் அதிகமான வேகத்தில் பறந்தாலும் அபாயமான சேதாரங்கள் விமானங்களுக்கு ஏற்படும். அதனால் இந்த கருவியிலிருந்து கிடைக்கும் தகவல்களை வைத்தே விமானத்தின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த கருவி மட்டும் வேலை செய்யவில்லை என்றால் உடனடியாக எமர்ஜென்ஸி லேண்டிங் தான்.

பல நேரங்களில் இந்த கருவிகள் வேலை செய்யாததால் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. சில நேரம் விமானம் நடுவானில் பறக்கும் போது இந்த கருவியைச் சுற்றி ஐஸ் உருவாகி இந்த கருவி வேலை செய்யாமல் போய்விடும். அப்பொழுது விமானத்தின் உயரத்தைக் குறைத்து அந்த ஐஸை உருக வைப்பார்கள். தற்போது எல்லாம் இந்த கருவியை ஹீட் செய்து ஐஸை உருக வைக்கும் தொழிற்நுட்பம் வந்துவிட்டது. இது ஃபெயிலியர் ஆனாலும் விமானம் தரையிறக்கப்படும்.

அதே போல நீண்டகாலமாக விமானத்தைத் தரையிலேயே நிறுத்தி வைத்திருந்தால் இந்த கருவின் முன் மற்றும் பின்பகுதியில் உள்ள ஓட்டையில் சில பூச்சிகள் கூடுகட்டிவிடும். இதைத்தடுக்க விமானத்தை பார்க் செய்யும் போது இந்த கருவியை மூடி வைப்பார்கள். மூடி வைக்க மறந்துவிட்டு பூச்சிக் கூடு கட்டியதற்காக விமானத்தைத் தரையிறக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன. சில நேரம் இந்த கருவி சரியாக வேலை செய்யவில்லை என்றாலும் அந்த விமானம் உடனடியாக தரையிறக்கப்படும்.


Click it and Unblock the Notifications