கடலூர் பள்ளி பஸ் மீது ரயில் மோதியதற்கு இது தான் காரணம்! இது இருந்தா உசுர காப்பாத்தியிருக்கலாம்!
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்கும் போது பள்ளி வேன் ஒன்று ரயிலில் அடிபட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 2 குழந்தைகள் பலியான நிலையில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் யார் மீது தவறு இருக்கிறது என பேச்சு மக்கள் மத்தியில் இருக்கிறது.
இந்த சம்பவத்தில் வேன் டிரைவராக இருந்தவர் படு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன்படி அவர் வரும் போது கேட் அடைக்காமல் இருந்ததாகவும், ரயில் வரும் சத்தம் எதுவும் கேட்கவில்லை என்பதாலும் ரயில் வருவது குறித்து தெரியாதததால் தான் ரயில் பாதையை கடக்க முயன்றதாக குறிப்பிட்டுள்ளார்.

ரயிலில் பயணித்த சிறுவன் ஒருவன் அளித்த பேட்டியிலும் இப்படியாக தான் பேசியுள்ளார். ஆனால் சிலர் ரயில்வே கேட் கீப்பர் கேட்டை அடைக்க முயன்றதாகவும், அப்பொழுது வேன் டிரைவர் தனது வாகனத்தை மட்டும் அனுமதிக்கும்படி கேட்டதாகவும் அதனால் தான் வாகனம் விபத்தில் சிக்கியதாகவும் கூறுகின்றனர்.
இந்த பிரச்சனைகளுக்கு ரயில்வே நிர்வாகம் தீர்வு ஒன்றை வைத்துள்ளது. ஒவ்வொரு மேனுவல் கேட் பகுதிக்கும் அருகில் உள்ள சிக்னல் பகுதிக்கும் ஒரு லிங்க் வைத்திருக்கிறது. எப்பொழுது எல்லாம் கேட் அடைக்கப்பட்டிருக்கிறதோ அப்பொழுது மட்டுமே ரயில் அந்த வழியாக பயணிக்க கிரீன் சிக்னல் இருக்கும். கேட் திறக்கப்பட்டிருந்தால் ரெட் சிக்னல் இருக்கும் இதை பார்த்து ரயில்கள் நின்றுவிடும்.

ரயில்வே கேட்டிற்கும் சிக்னலுக்கும் இருக்கும் இந்த லிங்கிற்கு இண்டர்லாக்கிங் சிஸ்டம் என்று பெயர். கேட் கீப்பர் மேனுவலாக கேட்டை அடைத்தால் மட்டுமே அந்த பகுதி வழியாக ரயில் பயணிக்க முடியும். ஆனால் குறிப்பிட்ட இந்த சம்பவம் நடந்த இடத்தில் இந்த இன்டர்லாக்கிங் சிஸ்டம் பொருத்தப்படவில்லை என தெரிகிறது.
இது தான் விபத்திற்கான காரணம் என தெரிகிறது. விபத்தை நேரடில் பார்த்த சிலர் விபத்து நடக்கும் முன் கேட் கீப்பர் கேட்டை அடைக்கவே இல்லை என்றும் கூறுகின்றனர். இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடந்ததால் தான் நடந்தது என்ன என்பது தெளிவாக தெரியும். இது குறித்த விசாரணை தற்போது நடந்து வருகிறது.

இதற்கிடையில் ரயில்வே கேட்டில் இருந்த கேட் கீப்பர் பணியில் போது மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தமிழ் தெரியாததாலும் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ரயில் வருவது குறித்து தமிழில் அறிவிப்பு வந்திருந்தால் அது தெரியாமல் இவர் ரயில்வே கேட்டை அடைக்காமல் இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது முழமையான விபரம் விபத்து குறித்து விசாரணை நடந்து முடிந்த பின்ரே தெரிய வரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பல இடங்களில் மேனுவல் ரயில்வே கேட் தான் இருக்கிறது. ஆட்டோமெட்டிக் ரயல்வே கேட் இருந்தால் எந்த பிரச்சனை இருக்காது ரயில் வரும் போது தானாக கேட் லாக்காகி விடும். ஆனால் மேனுவல் கேட் இருக்கும் பகுதியில் இன்டர் லாக்கி்ங சிஸ்டம் இருந்தால் தான் கேட் லாக் ஆகும்.


Click it and Unblock the Notifications









