ரயில்கள் விபத்தில் சிக்காமல் இருக்க இப்படி ஒரு டெக்னிக்கா? இப்ப இதை எல்லோரும் மறந்துட்டோம்...

ரயில் நிலையங்களில் முன்பு இன்ஜின் டிரைவர்கள் வட்டமாக ஒரு ரிங்கை மாற்றுவார்களே இது ஏன் தெரியுமா? இந்த சிஸ்டத்திற்கு பெயர் என்ன? இதனால் என்ன பயன் கிடைக்கும்? முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ரயில்கள் விபத்தில் சிக்காமல் இருக்கப் பிரிட்டிஷ் காலத்திலேயே இப்படி ஒரு டெக்னிக்கா? இன்னிக்கு இதை எல்லோரும் மறந்துட்டோம் . . .

இந்த உலகில் ரயில் பயணத்தில் கிடைப்பது போன்ற ஒரு அனுபவம் வேறு எந்த பயணத்திலும் கிடைப்பதில்லை. ஒரு பஸ்சில் பயணம் செய்கிறோம் என்றால் அந்த பஸ்சின் முழு கண்ட்ரோலும் டிரைவரிடம் தான் இருக்கும். ஒரு விமானத்தில் பயணம் செய்தாலும் விமானிகள் தான் அந்த விமானம் எப்படிச் செல்ல வேண்டும் எங்கு செல்ல வேண்டும் போன்ற முடிவுகளை எடுப்பார்கள் விமானம் முழுவதும் கேப்டனின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆனால் ரயில் பயணம் அப்படி அல்ல. ரயிலை தனி மனிதனால் இயக்க முடியாது. இது கூட்டு முயற்சியில் இயங்கும் போக்குவரத்து வசதியாகும்.

ரயில்கள் விபத்தில் சிக்காமல் இருக்கப் பிரிட்டிஷ் காலத்திலேயே இப்படி ஒரு டெக்னிக்கா? இன்னிக்கு இதை எல்லோரும் மறந்துட்டோம் . . .

ஒருவர் அவர் வேலையை செய்யவில்லை என்றாலோ சரியாகச் செய்யவில்லை என்றாலே ரயில் செயல்படாது அல்லது விபத்தில் சிக்கும். ஆனால் தினமும் ஆயிரக்காண ரயில்கள் இந்தியாவில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இத்தனை ரயில்களில் பணியாற்றுபவர்களும் சரியாக வேலை செய்வதால்தான். இந்திய ரயில்வேயில் விபத்துகள் மிகக்குறைவாக நடக்கிறது.

ரயில்கள் விபத்தில் சிக்காமல் இருக்கப் பிரிட்டிஷ் காலத்திலேயே இப்படி ஒரு டெக்னிக்கா? இன்னிக்கு இதை எல்லோரும் மறந்துட்டோம் . . .

ரயில்வே ஊழியர்களின் திறன் மட்டுமல்ல ரயில்வேயில் பயன்படுத்தப்படும் தொழிற்நுட்பமும் இதற்கு முக்கியமான காரணம் ரயில்வேயில் நடக்கும் விபத்து அபாயங்களை அறிந்து அந்த விபத்தைத் தடுக்கும் வகையில் தொழிற்நுட்ப கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பதிவில் லேட்டஸ்டாக ரயில்களில் பயன்படுத்தப்படும் தொழிற்நுட்ப கருவிகள் பற்றி நாம் பார்க்கப்போவதில்லை மாறாக சில ஆண்டுகள் முன்பு வரை ரயில் நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட விபத்தைத் தவிர்க்கும் தொழிற்நுட்பம் பற்றித் தான் காணப்போகிறோம்.

ரயில்கள் விபத்தில் சிக்காமல் இருக்கப் பிரிட்டிஷ் காலத்திலேயே இப்படி ஒரு டெக்னிக்கா? இன்னிக்கு இதை எல்லோரும் மறந்துட்டோம் . . .

நீங்கள் சிறு வயதில் ரயிலில் பயணித்திருந்தால் ஒரு ரயில் நிலையத்திற்குள் ரயில் வரும் போது ரயில் ஓட்டுநர் தன் கையில் வட்ட வடிவில் ஒரு பொருளை வைத்திருப்பார் ரயில் மெதுவாக ரயில் நிலையத்திற்குள் நுழையும் போது அவர் அந்த வட்டத்தை அங்கிருக்கும் ஒரு ஊழியரிடம் கொடுத்துவிட்டு வேறு அந்த ஊழியர் தன் கையில் வைத்திருக்கும் வட்டத்தை வாங்கிக்கொள்வார். இந்த வட்டத்தைப் பரிமாறும் முறைக்கு சிங்கிள் லைன் டேக்கன் பிளாக் சிஸ்டம் எனப் பெயர் இது எப்படி வேலை செய்கிறது என்பதற்கு முன்பு நாம் ரயில் தண்டவாள கட்டமைப்புகளை பற்றிதெரிந்து கொள்வோம்.

ரயில்கள் விபத்தில் சிக்காமல் இருக்கப் பிரிட்டிஷ் காலத்திலேயே இப்படி ஒரு டெக்னிக்கா? இன்னிக்கு இதை எல்லோரும் மறந்துட்டோம் . . .

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரயில் நிலையங்களில் மட்டும் தான் ரயில்கள் நிறுத்தி வைக்க தனித்தனியாக பிளாட்பாரங்கள் இருக்கும். ரயில், ரயில் நிலையத்தைத் தாண்டியதும் இந்த தண்டவாளங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே தண்டவாளமாகத் தான் தான் இருக்கும். அதாவது ஒரு வழிப்பாதை. இந்த பாதை வழியாக ஒரு ரயில் மட்டுமே செல்ல முடியும். ஒரு ரயில் நிலையத்திலிருந்து மற்றொரு ரயில் நிலையத்தை ஒரு ரயில் கடக்கும் வரை மற்ற ரயில் காத்திருக்க வேண்டும்.

ரயில்கள் விபத்தில் சிக்காமல் இருக்கப் பிரிட்டிஷ் காலத்திலேயே இப்படி ஒரு டெக்னிக்கா? இன்னிக்கு இதை எல்லோரும் மறந்துட்டோம் . . .

இப்படியான நேரங்களில் குழப்பம் நேராமல் இருக்கவே இந்த சிங்கிள் லைன் டோக்கன் பிளாக்கிங் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டது. இது ஒருவகையான கருவி இந்த கருவியில் டெலிஃபோன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த கருவிக்கு பெயர் நீல் பிளாக் கருவி ஒரு ரயில் நிலையத்திற்கு X மற்றும் Y ஆகிய 2 பாதைகள் இருக்கும் X ஒரு ரயில் நிலையத்தையும் Y மற்றொரு ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

ரயில்கள் விபத்தில் சிக்காமல் இருக்கப் பிரிட்டிஷ் காலத்திலேயே இப்படி ஒரு டெக்னிக்கா? இன்னிக்கு இதை எல்லோரும் மறந்துட்டோம் . . .

அதில் ஒரு ரயில்நிலையத்திற்கு X பாதை வழியாக ஒரு ரயில் வர வேண்டும் என்றால் அதற்கு முந்தைய ரயில் நிலைய அதிகாரி இந்த ரயில் நிலைய அதிகாரிக்கு போன் செய்து X பாதையை பிளாக் செய்யச் சொல்லுவார் அந்த பாதை பிளாக் செய்யப்பட்டால் இந்த ரயில் நிலையத்திலிருந்து அந்த பாதை வழியாக ரயிலை அனுப்ப அனுமதி கிடைக்காது. முந்தைய ஸ்டேஷனில் ஒரு வட்டமான ரிங்கில் நீல் பிளாக் கருவியில் உள்ள குண்டையோ அல்லது பிளாக்கையோ அந்த ரிங்கில் இணைத்திருப்பார்கள்.

ரயில்கள் விபத்தில் சிக்காமல் இருக்கப் பிரிட்டிஷ் காலத்திலேயே இப்படி ஒரு டெக்னிக்கா? இன்னிக்கு இதை எல்லோரும் மறந்துட்டோம் . . .

முன்பு சொன்னது போல முந்தைய ஸ்டேஷனிலிருந்து X பாதை வழியாக வரும் ரயில் அடுத்தாக Y பாதை வழியாகச் செல்ல வேண்டும் என்றால் ரயிலின் இந்த ரயில் நிலைய அதிகாரி அடுத்த ரயில் நிலையத்திற்கு போன் செய்து இவரது Y பாதையை அந்த ரயில் நிலையத்தில் பிளாக் செய்யச் சொல்ல வேண்டும். அப்படி பிளாக் செய்யப்பட்டவுடன் இங்கிருக்கும் அதிகாரி Y பாதைக்காக கிளியரிங் டோக்கனை நீல் டோக்கன் கருவிலிருந்து எடுக்க இவரிடம் உள்ள ரிங் பவுச்சில் வைத்து ரயில் வருவதற்கு முன்பாக ஊழியரிடம் அதை எக்ஸ் சேஞ்ச் செய்ய அனுப்பி விட வேண்டும்.

ரயில்கள் விபத்தில் சிக்காமல் இருக்கப் பிரிட்டிஷ் காலத்திலேயே இப்படி ஒரு டெக்னிக்கா? இன்னிக்கு இதை எல்லோரும் மறந்துட்டோம் . . .

ரயில் ஸ்டேஷனிற்குள் வந்ததும். முந்தைய ஸ்டேஷனில் கொடுக்கப்பட்ட X பாதைக்கான டோக்கனை ரயில் ஓட்டுநர், ஸ்டேஷன் ஊழியரிடம் கொடுப்பார். அவரிடமிருந்து Y பாதைக்கான டேக்கனை பெற்றுக்கொள்வார். X பாதையில் ரயில் வந்ததற்கான டோக்கனை பெற்றுக்கொண்ட அதிகாரி அதை நீல் டேக்கன்கருவியில் செலுத்திய பின்பு தான் அடுத்தாக வேறு டோக்கனை அந்த X பாதைக்கு எடுக்க முடியும்.

ரயில்கள் விபத்தில் சிக்காமல் இருக்கப் பிரிட்டிஷ் காலத்திலேயே இப்படி ஒரு டெக்னிக்கா? இன்னிக்கு இதை எல்லோரும் மறந்துட்டோம் . . .

இப்படியாக ஒரு ரயில் தான் அடைய வேண்டிய இலக்கை அடையும் வரை. இப்படியா ரிங்கை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த சிஸ்டம் விபத்து நடப்பதைத் தவிர்ப்பதற்காகப் பின்பற்றப்பட்டது. ஆனால் நவீனக் காலத்தில் தொழிற்நுட்ப வளர்ச்சியால் இந்த சிஸ்டம் தேவையில்லாமல் சென்றுவிட்டது. இன்றும் வெகு சில ரயில் நிலையங்களில் இது பின்பற்றப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுவும் வெகு விரைவில் மாற்றப்பட்டுவிடும். இன்று ரயில் விபத்துக்களைத் தவிர்க்கப் பல நவீன தொழிற்நுட்பங்கள் வந்துவிட்டதால் இது கிட்டத்தட்ட மறைந்துவிட்டது என்றே சொல்லலாம்.

ரயில்கள் விபத்தில் சிக்காமல் இருக்கப் பிரிட்டிஷ் காலத்திலேயே இப்படி ஒரு டெக்னிக்கா? இன்னிக்கு இதை எல்லோரும் மறந்துட்டோம் . . .

90ஸ் கிட்ஸ் எல்லாம் கிட்ஸ்களாக இருந்த போது இப்படியாக ரயில் நிலையத்தில் ரிங்க் மாற்றப்படுவதை வேடிக்கை பார்த்திருப்பார்கள். அவர்களுக்கு எல்லாம் இது மலரும் நினைவுகளாக இருந்திருக்கும். ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு இப்படி ஒரு சிஸ்டம் இருந்தது என்றே பெரும்பாலானோருக்குத் தெரியாது. இந்த சிஸ்டத்திற்காக பயன்படுத்திய கருவிகள் எல்லாம் இன்று மியூசியத்திற்கு சென்றிருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What is single line token block system how it is useful to indian railways
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X