இது பெயர் கூட பாதி பேருக்கு தெரியாது! பார்க்க நல்லா இருக்குதுன்னு கொடுத்திருக்கிறதா நினைச்சிட்டு இருக்காங்க!

சில கார்களில் உள்ள அம்சங்களைப் பார்க்கும் போது அதில் ஸ்கிட் பிளேட் இருப்பதாகக் குறிப்பிட்டிருப்பார். சில கார்களில் ஃபால்ஸ் ஸ்கிட் பிளேட்டை ஒரு அழகுபடுத்தும் அம்சமாகக் குறிப்பிட்டிருப்பார்கள். கார்களில் உள்ள இந்த ஸ்கிட் பிளேட் என்றால் என்ன? இது எதற்காகப் பயன்படுகிறது. இதனால் ஏற்படும் நன்மை என்ன விளக்கமாகக் காணலாம் வாருங்கள்.

இன்று கார்களின் பாதுகாப்பிற்காக ஏராளமான அம்சங்கள் வந்துவிட்டது கார்களின் பிரேக்கிங் முதல் அதன் வெளிப்புறத்தோற்றம், உட்புறத்தில் உள்ள பார்ட்ஸ் சேதமாவதைத் தடுக்கும் கருவிகள் என ஏகப்பட்ட விஷயங்கள் வந்துவிட்டது. இப்படியாக கார்களுக்கு மற்றுமொரு பாதுகாப்பு கருவி தான் இந்த ஸ்கிட் பிளேட், கார்கள் சாலைகளில் செல்லும் போது சாலையில் இருக்கும் கற்கள், வேகத்தடை, இப்படியான விஷயங்கள் காருக்கு அடியில் உரசும், காரை விரும்பி வாங்கிய காதலர்களுக்கு இந்த சத்தம் கேட்டால் அவ்வளவு தான் அவர்கள் இதயத்திலேயே உரசியதை போல உணருவார்கள்.

இது பெயர் கூட பாதி பேருக்கு தெரியாது! பார்க்க நல்லா இருக்குதுன்னு கொடுத்திருக்கிறதா நினைச்சிட்டு இருக்காங்க!

இப்படியான உரசல்களாக காரின் அடிப்பகுதியில் உள்ள பாகங்கள் சேதமடையக் கூடும். இதைத் தடுக்கவே கார்களின் அடியில் ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்பட்டுள்ளது. இது ரோட்டிலிருந்து எந்த பொருளும் காரின் உதிரிப் பாகங்களைச் சேதப்படுத்தாதபடி பாதுகாக்கிறது. ஸ்கிட் பிளேட்கள் காருக்கு அடியில் மற்ற பாகங்களை கவர் செய்த படி பொருத்தப்பட்டிருக்கும். இது தான் ஸ்கிட் பிளேட்டின் பணி. இது காரின் பெட்ரோல் டேங்க், டிஃப்ரென்ஷியல் மற்றும் டிரான்ஸ்பாக்ஸ் பாக்ஸ் ஆகியவற்றை பாதுகாக்கிறது.

இந்த ஸ்கிட் பிளேட் பொருத்தப்பட்ட கார்கள் வேகத்தடையில் ஏறி இறங்கினால் அடியில் உரசினால் எந்த பிரச்சனை
யும் இல்லை. இந்த உரசல் காருக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை. இதன் காரணமாகவே ஸ்கிட் பிளேட்டை வழங்கியுள்ளனர். இந்த ஸ்கிட் பிளேட் எல்லா கார்களிலும் இருக்காது. டிரக் மற்றும் எஸ்யூவி ரக கார்கள்,ஆஃப்ரோடிங் அம்சம் கொண்ட கார்களில் தான் இந்த ஸ்கிட் பிளேட்டை அதிகம் காண முடியும். சிறிய கார்களில் எல்லாம் ஸ்கிட் இருக்காது.

பலர் பெல்லி பேன்களை ஸ்கிட் பிளேட்கள் என தவறாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர். பெல்லி பேன் என்பது காரின் முகப்பு பகுதிக்குக் கீழே ஏரோ டைமனிக்ஸ் மற்றும் முன்பக்கம் உள்ள காரின் அடிப்பகுதி பாதுகாப்பிற்காகக் கொடுக்கப்படுகிறது ஸ்கிட் பிளேட் என்பது வேறு இது முழுவதும் அலுமினியம் அல்லது ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். அலுமினியம் ஸ்கிட் பிளேட்கள் எடை குறைவானது. ஆனால் ஸ்டீல் ஸ்கிட் பிளேட்கள் தான் ஸ்டிராங்கானது எவ்வளவு அதிகமான உராய்வு வந்தாலும் இது தாக்குப் பிடிக்கும். அதே நேரம் ஸ்டீல் ஸ்கிட் பிளேட்கள் அதிக எடை கொண்டதாக இருக்கும். அதே நேரம் ஸ்டீஸ் ஸ்கிட் பிளேட்கள் துரு பிடிக்கும் அபாயமும் நிறைந்தது.

சில கார்களின் அம்சங்களில் ஃபால்ஸ் ஸ்கிட் பிளேட்கள் எனக் கொடுத்திருப்பார். பொதுவாக ஸ்கிட் பிளேட்கள் பொருத்தப்பட்ட கார்களில் முகப்பு பகுதியில் பம்பருக்கு கீழே ஸ்கிட் பிளேட் இருக்கும். கார் வடிவமைப்பார்கள் காருக்கு மேலும் அழகு கூட்ட அதற்குத் தனியாக ஒரு கலரை கொடுத்து ஹைலைட் செய்தனர். இந்த டிசைன் பலருக்குப் பிடித்துப் போக இப்படியான டிசைன் ஒரு முக்கிய தேவையாக மாறியது. ஆனால் குறிப்பிட்ட காருக்கு ஸ்கிட் பிளேட்கள் அவசியம் இல்லை என கார் தயாரிப்பார்கள் நினைத்தால் வெறும் அழகுக்காகப் போலியாக ஒரு ஸ்கிட் பிளேட்டை கொடுத்திருப்பார்கள்.

இந்த போலியான ஸ்கிட் பிளேட் காரின் முகப்பு பகுதியில் ஸ்கிட் பிளேட் பொருத்தப்பட்ட ஒரு லுக்கை கொடுக்கும். இது வெறும் அழகுக்காகப் பொருத்தப்படும் விஷயம் தான். கார் எந்த வகையான பயன்பாட்டிற்குத் தயாரிக்கப்படுகிறது என்பதைப் பொருத்து தான் இந்த ஸ்கிட் பிளேட் வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்வார்கள். ஆஃப்ர ரோடிங் ரீதியான அம்சங்கள் கொண்ட காருக்கு இந்த ஸ்கிடின் பிளேட் பயன்படுத்தப்படும். பார்க்க லுக் மட்டும் ஆஃப் ரோடிங் கார் போல இருந்து, காரில் ஆஃப் ரோடிங் தொழிற்நுட்பம் இல்லாத கார்களில் ஃபால்ஸ் ஸ்கிட் பிளேட் தான் பயன்படுத்தப்படும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What is skid plate how it is useful to your car
Story first published: Friday, December 2, 2022, 17:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X