"டிங் டிங்"ன்னு பிளைட்க்குள்ள சத்தம் வரும்... இதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா?

விமானங்களில் பறக்கும் போது விமானத்திற்குள் அவ்வப்போது வித்தியாச வித்தியாசமான மணி சத்தம் கேட்கும். பெரும்பாலும் நீண்ட தூர விமானத்தில் பயணித்தவர்களுக்கு இந்த சத்தத்தை அடிக்கடி கேட்டிருப்பார்கள். ஆனால் இந்த சத்தம் ஏன் வருகிறது. இதற்கு என்ன அர்த்தம் எனப் பெரும்பாலானோருக்குத் தெரியாது. ஒவ்வொரு சத்தமும் வித்தியாசமாக இருக்கும். இந்த சத்தத்திற்கான காரணத்தைக் காணலாம் வாருங்கள்.

விமானத்தில் பறக்கும் போது வரும் அடிக்கடி மணியடிக்கும் சத்தம் கேட்கும். இந்த சத்தத்திற்குப் பின்னால் பல காரணங்கள் ஒளிந்திருக்கிறது. முதலில் இந்த ஒலி யாருக்காக என்பதைப் பார்ப்போம். இது முற்றிலும் விமானப்பணியாளர்களுக்கானது. விமானத்தின் பணி செய்பவர்கள் தங்களுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்த இதைப் பயன்படுத்துவார்.விமானப் பணியாளர்கள் என்றால் விமானப் பணிப்பெண்கள் மட்டுமல்ல விமானிகள், மற்ற பணியாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் சிக்னல்.

டிங் டிங்ன்னு பிளைட்க்குள்ள சத்தம் வரும்... இதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா?

விமானங்களில் பல விதமான ஒலிகள் ஒலிக்கப்படும். இதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். ஒரே ஒரு பீப் சத்தம் என்றால் ஒரு பயணி விமானப்பணியாளரை உதவிக்கு அழைக்கும் பட்டனை அழுத்தியுள்ளார் எனப் பொருள். இப்படி ஒலி வந்ததும் விமானப் பணிப்பெண்கள் எல்லாம் உஷாராகி யார் பட்டனை அழுத்தியது என்று பார்த்து அவரது சீட்டிற்கு அருகில் உள்ள விமானப்பணிப்பெண் அவர்களுக்கான உதவியைச் செய்வார்.

இந்த சத்தம் பயணி அவருக்கென வழங்கப்பட்டுள்ள கால் பட்டனை அழுத்தும் போது ஏற்படும். இதனால் விமானப் பணிப்பெண்கள் உஷாராவார்கள். இது மட்டுமல்ல மொத்தம் 3 விதமான சத்தம் இருக்கும். இதில் ஒரு சத்தம் தான் இந்த ஒரு பீப் சத்தம், இரண்டாவது சத்தம் இரண்டு டோன்களின் சத்தம் வரும் முதல் டோன் சத்தமாகவும், இரண்டாவது டோன் அதை விடக் குறைவான சத்தத்திலும் இருக்கும்.

இந்த இரண்டு டோன் சத்தம் அவ்வப்போது தான் விமானங்களில் கேட்கும். இது விமானப்பணிப்பெண்கள் இடையே நடக்கும் சிக்னலிங் முறை. இந்த முறையில் இரண்டு சத்தங்கள் ஒலிக்கும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு டோனில் இருக்கும். இது விமானம் நீளமாக இருக்கும் என்பதால் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலையில் இருக்கும் விமானப் பணிப் பெண்ணை சத்தம் போட்டுக் கூப்பிட முடியாது.

அப்படிக் கூப்பிட்டால் அது மற்ற சக பயணிகளுக்கு இடைஞ்சலாக இருக்கும். மேலும் விமானப் பணிப்பெண்களின் பணி ஒரு ஒழுங்கில் இல்லை என்ற தோற்றமும் வெளிப்படும். இதனால் விமானப்பணிப்பெண்கள் இந்த சிக்னலிங் முறையை வைத்திருக்கின்றனர். இந்த சத்தம் கேட்டால் பயணிகள் சேவையில் அல்லது வேறு வேலையில் இருக்கும் பணிப்பெண்கள் உடனடியாக அட்டென்டிங் ஸ்டெஷனை நோக்குவார்கள். அங்கு அவர்களுக்கான சிக்னலிங்கை தலைமை அட்டென்டர் அல்லது அதற்கென பணியமர்த்தப்பட்டவர் வழங்குவார்.

இது மிக மிக அரிதான ஒரு விஷயம் தான். இது பைலட், மற்ற பணியாளர்களுக்கு ஆபத்தான சூழ்நிலை குறித்து அறிவிப்பதற்கான சக்னலாகும். விமானம் நடுவானில் பறக்கும் போது ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அவசரக் கால நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்குத் தயாராவதற்காகக் கொடுக்கப்படும் எச்சரிக்கையாகும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 14, 2023, 16:30 [IST]
English summary
What is the beep chime sound in flight means
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+