லாரிகளுக்கு பின்னால் NP அல்லது AIP என எழுதியிருக்குமே அதுக்கு என்ன அர்த்தம்? இதுல இவ்வளவு இருக்குதா?

லாரிகளுக்கு பின்னால் NP அல்லது AIP என எழுதப்பட்டிருக்கும். இதற்கு என்ன அர்த்தம்? இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? முழுமையாகக் காணலாம் வாருங்கள்.

நீங்கள் சாலைகளில் செல்லும் போது ஏதாவது லாரிக்கு பின்னால் சென்றால் அதில் NP அல்லது AIP என எழுதப்பட்டிருக்கும். பலர் இதை ஏதோ அவர்கள் பெயரைச் சுருக்கி எழுதியிருக்கிறார்கள். அல்லது லாரி நிறுவனத்தின் பெயர் எனத் தவறாக நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் இது இந்த வாகனம் எங்கெல்லாம் பயணிக்கலாம் என்பதற்கான அனுமதி குறித்த விஷயம்.

NP and AIP Differenc

பொதுவாகத் தனிநபர் வாகனங்கள் வாங்கும் போது அதற்குச் சாலை வரி உள்ளிட்ட வரிகள் இந்திய அளவில் செலுத்துவோம். அந்த வாகனத்தை ஒரு மாநிலம் விட்டு வேறு மாநிலம் எடுத்துச் செல்ல மாநில அரசுகளிடம் எந்த வித அனுமதியும் பெற வேண்டிய தேவையில்லை. ஆனால் கமர்ஷியல் வாகனம் என்பது அப்படியல்ல அதற்கு முழு அனுமதி கிடையாது.

ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் செல்ல வேண்டிய மாநிலத்தில் பெர்மிட் வாங்க வேண்டும். அதற்காகப் பணம் செலுத்தவேண்டும். கமர்ஷியல் வாகனங்கள் பொதுவாக மாநிலத்திற்குள் செல்ல மட்டுமே அனுமதி, வெளிமாநிலங்களுக்குச் செல்ல அனுமதி கிடையாது.

NP and AIP Differenc

ஆனால் லாரி உள்ள பெரிய ரக வாகனங்கள் பெரும்பாலும் மாநிலம் விட்டு மாநிலம் சரக்குகளை எடுத்துச் செல்ல பயன்படுகிறது. ஒவ்வொரு முறையும் இந்த வாகனங்களால் பெர்மிட் வாங்குவது என்பது கடினமான விஷயம் இதனால் அவர்களுக்குக் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மொத்தமாக பெர்மிட்களை எடுத்துக்கொள்ள வழங்கப்படும் வாய்ப்பு தான் AIP மற்றும் NP. AIP என்பது ஆல் இந்தியா பெர்மிட், NP என்பது நேசனல் பெர்மிட்.

AIP-ஆல் இந்தியா பெர்மிட்: இது அனைத்து வகையான கமர்ஷியல் வாகனங்களுக்குப் பெற முடியும், பஸ், கார், டிரக் போன்ற வாகனங்களுக்குப் பெற முடியும். ஒரு முறை இந்த பெர்மிட்டை வாங்கிவிட்டால் அது 5 ஆண்டுகளுக்குப் பயன்படுத்த முடியும். இது மட்டுமல்ல இதை ஒவ்வொரு ஆண்டும் பணம் கொடுத்துப் புதுப்பிக்க வேண்டும். புதிய வாகனம் என்றால் 12 ஆண்டுகளுக்கு இந்த பெர்மிட்டை வாங்க முடியும் ஒவ்வொரு 5 ஆண்டிற்கும் ஒரு முறை புதிய பெர்மிட் போட வேண்டும். மல்டி ஆக்ஸில் வாகனங்களுக்கு 15 ஆண்டுகள் வரை இந்த பெர்மிட்டை வாங்க முடியும்.

இதை வாங்கிவிட்டால் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். ஒவ்வொரு முறையும் தனித்தனியாக பெர்மிட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அடிக்கடி வெளிமாநிலங்களுக்குப் பயணிக்கும் வாகனங்களுக்கு இது பயன்படும். குறிப்பாக நீண்ட தூரம் பயணிக்கும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு இது உபயோகமாக இருக்கும்.

NP-நேசனல் பெர்மிட்: இது ஆல் இந்தியா பெர்மிட்டின் ஒரு துணை பிரிவாகும். ஆல் இந்தியா பெர்மிட்டிற்கு அதிகமாகப் பணம் செலுத்த வேண்டும். ஆனால் நேசனல் பெர்மிட் என்பது குறிப்பிட்ட வாகனம் பதிவு செய்யப்பட்ட மாநிலத்தைச் சுற்றியுள்ள 4 மாநிலங்களுக்குச் சென்று வர மட்டுமே பெர்மிட் வழங்கப்படும். இதனால் பக்கத்து மாநிலத்திற்கு மட்டும் சென்று வரும் வாகனங்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

இது பஸ்களுக்கு வழங்கப்படமாட்டாது. சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இந்த பெர்மிட்டுள்ள ஆல் இந்தியா பெர்மிட் போல ஒரு பெர்மிட் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இதை ஒவ்வொரு ஆண்டும் பணம் செலுத்திப் புதுப்பிக்க வேண்டும். 5 ஆண்டிற்குப் பின் புதிதாகத் தான் பெர்மிட் எடுக்க வேண்டும். இப்படியாக ஒரு வாகனத்தின் 12 வயது வரை பெர்மிட் எடுத்துக்கொள்ள முடியும். மல்டி ஆக்ஸில் வாகனம் என்றால் 15 வயது வரை பெர்மிட் எடுத்துக்கொள்ள முடியும்.

இப்படியாக பெர்மிட் எடுக்கப்பட்ட வாகனங்களுக்குப் பின்னால் வாகனங்களின் பெர்மிட் குறித்த தகவல்களை எழுதியிருப்பார்கள். இதைத் தான் நீங்கள் சாலையில் செல்லும்போது லாரிக்கு பின்னால் AIP மற்றும் NP போன்ற எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கும். இதற்குப் பின்னால் உள்ள அர்த்தம் இது தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெர்மிட் விஷயத்தில் இந்தியா அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. பெர்மிட்களை தற்போது ஆல்லைன் மூலமே சுலபமாக எடுத்துக்கொள்ள முடியும். மேலும் பெர்மிட் இல்லாத வாகனங்களையும் சுலபமாகக் கண்டறிய முடியும். இனி நீங்கள் சாலையில் செல்லும் போது லாரிகளுக்கு AIP மற்றும் NP என எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது அதன் காரணத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

Article Published On: Monday, May 8, 2023, 12:49 [IST]
English summary
What is the difference between a national permit and all india permit
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+