சில ரயில் நிலையங்களில் மட்டும் சந்திப்பு என்ற வார்த்தை ஊர் பெயருக்கு பின்னால் இருக்கிறதே ஏன் தெரியுமா?

இந்தியாவில் உள்ள எல்லா ரயில் நிலையங்களிலும் ஊரின் பெயர் இருக்கும். ஆனால் சில ரயில்களில் மட்டும் சந்திப்பு, சென்ட்ரல், டெர்மினல், கண்டோன்மென்ட் ஆகிய வார்த்தைகள் ஊரின் பெயருக்கு பின்னால் சேர்க்கப்பட்டிருக்கிறது. அதற்கு என்ன அர்த்தம்? ஏன் அவ்வாறு சேர்க்கிறார்கள் என காணலாம் வாருங்கள்.

ரயில் பயணம் என்பது இந்தியாவில் சாதாரணமான ஒரு விஷயம் தான் தினமும் லட்சக்கணக்கான நபர்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குறைவான செலவில் சொகுசான பயணத்திற்கு ரயில் பயணம் தான் ஏற்றது. இப்படியான ரயில் பயணத்தின் போது கண் முன்னே இருக்கும் பல விஷயங்களுக்கு பின்னால் இருக்கும் காரணமும், அர்த்தமும் நமக்கு தெரியவதில்லை. இப்படியான ஒரு விஷயத்தை தான் இன்று காணப்போகிறோம்.

சில ரயில் நிலையங்களில் மட்டும் சந்திப்பு என்ற வார்த்தை ஊர் பெயருக்கு பின்னால் இருக்கிறதே ஏன் தெரியுமா?

இந்தியாவில் ரயில்களில் பயணிக்கும் போது ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில் உள்ளே நுழையும் இடங்களில் பிளாட்பாரங்களில் பெரிய மஞ்சள் பலகை இருப்பதை நாம் பார்த்திருப்போம் அதில் அந்த ஊரின் பெயர் இருக்கும். ஆனால் சில ஊர்களில் ஊரின் பெயருக்கு பின்னால் சந்திப்பு, சென்ட்ரல், டெர்மினல், கண்ட் உள்ளிட்ட சில வார்த்தைகள் இருக்கும்.

உதாரணமாக மதுரை சந்திப்பு, சென்னை சென்ட்ரல், உள்ளிட்டவை இருக்கும். சில ஊர்களில் உள்ள பெயர் பலகையில் வெறும் ஊரின் பெயர் மட்டுமே இருக்கும். ஏன் இப்படி ஊருக்கு ஊர் இது மாறுபடுகிறது. இப்படியாக ஊர் பெயருக்கு பின்னால் வேறு பெயரை சேர்க்க என்ன காரணம்? முழு விபரங்களை காணலாம் வாருங்கள்.

சென்ட்ரல்

இந்தியாவில் வெகு சில ரயில் நிலையங்களில் பெயருக்கு பின்னால் மட்டுமே சென்ட்ரல் என்ற வாசகம் இருக்கிறது. ஆனால் இவை அனைத்துமே இந்தியாவின் முக்கியமான ரயில் நிலையங்களாக உள்ளன. பிரிட்ரிஷ் காலத்தில் கட்டப்பட்ட பெரிய முக்கியமான ரயில் நிலையங்களுக்கு சென்டரல் என பெயரிட்டனர். அந்த பெயரே இப்பொழுதும் தொடர்கிறது. மும்பை சென்ட்ரல், கான்பூர் சென்ட்ரல், சென்னை சென்ட்ரல், மங்களூரு சென்ட்ரல், திருவனந்தபுரம் சென்டரல் ஆகிய ரயில் நிலையங்கள் தற்போது உள்ளன.

டெர்மினல்

டெர்மினல் என்பது இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் இந்திய அரசால் உருவாக்கப்பட்டது. இந்த ரயில் நிலையகளில் ரயில்கள் வர மட்டுமே முடியும். வந்த பின்பு ரயில்கள் அதை தாண்டி செல்ல முடியாது. இது தான் இறுதியான ஸ்டேஷனாக இருக்கும் இப்படியான இறுதியான ஸ்டேஷன்களுக்கு டெர்மினல் என பெயர் வைத்துள்ளனர். உதாரணமாக டில்லியில் ஆனந்த் விகார் டெர்மினல், மும்பையில் பந்த்ரா டெர்மினல் ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன.

ஜங்சன்

இது தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் ஏராளமான ரயில் நிலையங்களில் பார்க்கும் வார்த்தை, ஆங்கிலத்தில் ஜங்ஷன் எனவும், தமிழில் சந்திப்பு எனவும் எழுதியிருப்பார்கள். இதற்கு அர்த்தம் அந்த ரயில் நிலையில் 2க்கும் மேற்பட்ட ரயில் பாதைகளை இணைக்கும்
இடமாக இருக்கிறது. என அர்த்தம், உதாரணமாக மதுரை சந்திப்பை எடுத்துக்கொள்வோம். அங்கு திண்டுக்கல்- மதுரை ரயில் பாதை, மதுரை- விருதுநகர் ரயில் பாதை, மதுரை- ராமேஸ்வரம் ரயில் பாதை ஆகிய வழிகளை இணைக்கிறது. இப்படியாக 2க்கு மேற்பட்ட வழிகளை இணைக்கும் ரயில் நிலையங்களை சந்திப்பு என குறிப்பிடுவார்கள்.

கன்டோன்மென்ட்

இந்தியாவில் சில நகரங்களில் மட்டும் கன்டோன்மென்ட் என ஒரு ரயில் நிலையம் இருக்கும். இதை ஆங்கிலத்தில் Cantt என குறிப்பிட்டிருப்பார்கள். இதற்கு அர்த்தம் அந்த ஊரில் ராணுவத்தின் கண்டோன்மென்ட் பகுதி இருக்கிறது என அர்த்தம். பெங்களூரு கண்டோன்மென்ட், ஆக்ரா கண்டோன்மென்ட் ஆகிய ரயில் நிலையங்கள் எல்லாம் இருக்கிறது.

நீங்கள் அடுத்த முறை ரயிலில் பயணிக்கும் போது இப்படியான சந்திப்பு, சென்ட்ரல், டெர்மினல், கண்டோன்மென்ட் ஆகிய பெயர்கள் கொண்ட ரயில் நிலையங்கள் வந்தால் அதற்கான காரணத்தை புரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் பயணிக்கும் மற்றவர்களுக்கும் இந்த தகவலை கொண்டு செல்லுங்கள் இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 21, 2023, 16:00 [IST]
English summary
What is the difference between central junction cantt and terminal in railway station
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+