விமானத்தை ஓட்டுபவரை ஏன் டிரைவர்னு கூப்புடாம பைலட்னு சொல்கிறோம் தெரியுமா? கப்பலை ஓட்டுபவர் யார்?

கார், பஸ் போன்ற வாகனங்களை ஓட்டுபவர்களை ஆங்கிலத்தில் டிரைவர் என்றும், விமானம் மற்றும் ரயில் ஓட்டுபவர்களை பைலட் என்றும் அழைக்கிறார்களே ஏன் தெரியுமா? இந்த பெயர் வித்தியாசம் குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.

பைக், கார், பஸ், விமானம், ரயில், கப்பல் என்னலாம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல பயன்படும் வாகனம் தான். இந்த வாகனத்தை ஒருவர் இயக்க மற்றவர்கள் அதில் அமர்ந்து பயணம் செய்ய முடியும். ஆனால் இந்த வாகனத்தை இயக்குபவர்களுக்கு வேறு வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. அவர்கள் ஓட்டும் வாகனத்தைப் பொருத்து அந்த பெயர் அமைகிறது.

Driver vs Pilot Difference

கார், பஸ், பைக் போன்ற வாகனங்களை ஓட்டுபவர்களை டிரைவர் என அழைக்கிறோம். அதே நேரம், விமானம் மற்றும் ரயிலை ஓட்டுபவரை பைலட் என அழைக்கிறோம், கப்பலை இயக்குபவரை கேப்டன் என அழைக்கிறோம். சில விமானங்களில் கூட கேப்டன்கள் இருப்பார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் ஏன் வேறு வேறு பெயர் இருக்கிறது? இது குறித்து விரிவாகக் காணலாம் வாருங்கள்.

டிரைவர் இந்த ஆங்கில சொல்லிற்கான அர்த்தம் இயந்திரத்தை இயக்கி வாகனத்தை ஓட்டுபவர் என்று அதர்த்தம். இந்த டிரைவர் பஸ், கார், பைக் போன்ற சாலையில் செல்லும் வாகனங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும். இதை ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமே ஓட்ட முடியும். அவர்கள் தான் வாகனத்தின் வேகம் எவ்வளவு செல்ல வேண்டும், எந்த இடத்தில் பிரேக் பிடிக்க வேண்டும் எந்த இடத்தில் கியரை மாற்ற வேண்டும் என அனைத்து முடிவுகளையும் எடுப்பவர்கள்.

Driver vs Pilot Difference

இதனால் இவர் டிரைவர் என அழைக்கப்படுகிறார்கள். ஆனால் விமானம் மற்றும் ரயில் அப்படியல்ல, அதைத் தனி நபர் மட்டுமே இயக்க முடியாது. விமானத்தில் தனி நபர் இயக்கும் விமானம் இருந்தாலும் அவர் இதை இயக்க தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் உதவி வேண்டும். அதனால் தனியாக இதைச் செய்ய முடியாது. வேறு ஒருவரின் வழிகாட்டுதலின்படி தான் இவர்கள் செயல்பட வேண்டும்.

ரயில்களிலும் அப்படி தான் ரயில் டிராக்கை மாற்ற டிராக்மேன் தேவை, அதே நேரம் சிக்னல், உள்ளிட்ட பல விஷயங்களைக் கட்டுப்பாட்டு அறையின் முடிவுகளைத் தான் ரயிலை ஓட்டுபவர்கள் பின்பற்ற வேண்டும். விமானத்திலும் கட்டுப்பாட்டுத் தளத்தின் உத்தரவுகளை இவர்கள் பின்பற்ற வேண்டும். பைலட் என்பதற்கு அர்த்தம் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுபவர் என்பது தான்.

Driver vs Pilot Difference

அதனால் தான் விமானம் மற்றும் ரயில் ஓட்டுநர்களை பைலட் என அழைக்கிறார்கள். அவர்களுக்கு டிரைவர்களுக்கான அம்சங்கள் பொருந்தாது என்பதால் இப்படி அழைக்கின்றனர். அடுத்தாக கப்பல், கப்பலைப் பொருத்தவரை கேப்டன்தான் கப்பலை இயக்குபவராக இருப்பார்.

ஆனால் அவரை கேப்டன் என அழைக்கக் காரணம் ஒன்று உள்ளது. கார் பைக்குகளின் சாதனங்களை டிரைவர் தான் இயக்குவார். விமானத்தின் சாதனங்களை பைலட் இயக்குவர். ஆனால் கப்பலின் சாதனைகளை கேப்டன் இயக்குவதில்லை. கப்பல் ஏகப்பட்ட சாதனங்களை ஒரே நேரத்தில் குறிப்பிட்ட வகையில் இயக்கும் போது அது பயணிக்கும். இந்நிலையில் கேப்டன் என்பவர் கப்பலின் எந்தெந்த விஷயங்களை யார், யார் எப்பொழுதெல்லாம் இயக்க வேண்டும், என முடிவு எடுக்கும் நபர் தான். இவர் கப்பல் பயணிக்கும் திசை, காற்று, மற்றும் கட்டுப்பாடு அறைகளுடனான தொடர்பு, கப்பலின் பாதை, வேகம் எல்லாவற்றையும் எவ்வளவு இருக்க வேண்டும் என உத்தரவிடுபவர். இதனால் இவரின் வேலை வேறு மாதிரியாக இருக்கும் என்பதால் கேப்டன் என அழைக்கப்படுகிறார்.

விமானத்திலும் கேப்டன் இருப்பார்கள். பெரும்பாலும் பெரிய விமானங்களில் கேப்டன் இருப்பார்கள். இந்த கேப்டன் என்பவர் பைலட்களின் தலைவராகச் செயல்படுவார்கள். இவர் தான் விமானம் எப்படி, எவ்வாறு பறக்க வேண்டும் என உத்தரவிடுவார். இது மட்டுமல்ல நடுவானில் விமானம் பறக்கும் போது ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அதைத் தீர்க்க கேப்டன் தான் முடிவெடுப்பார். கேப்டன் முடிவே இறுதியானதாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பலருக்கு இந்த பைலட், கேப்டன், டிரைவர் போன்ற வார்த்தைகள் பரிட்சியமாக இருந்தாலும் அவர்களுக்கிடையே என்ன வித்தியாசம் என்பது தெரியாமல் இருக்கும். இந்த செய்தி அந்த தகவலையும் விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தாமல் இது போன் உங்களுக்குக் குழப்பமான அல்லது சந்தேமான விஷயம் இருந்தால் அதை கமெண்டில் சொல்லுங்கள்.

Article Published On: Tuesday, May 2, 2023, 12:40 [IST]
English summary
What is the difference between driver pilot and captain
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X