ஸ்க்ரூ எல்லாம் இருக்காது... விமானத்தின் எமர்ஜென்ஸி டோர் எங்கு இருக்கும் எப்படி திறக்கனுன்னு தெரியுமா?

ஒரு விமானத்தில் எமர்ஜென்ஸி கதவு என்றால் என்ன? அது எங்கே இருக்கும்? எப்பொழுது அதைத் திறக்க வேண்டும்? யார் திறக்க வேண்டும் உள்ளிட்ட விரிவான விபரங்களை இங்கே காணலாம். தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை மற்றும் தேஸ்வி சூர்யா ஆகியோர் பயணித்த விமானத்தின் எமர்ஜென்ஸி கதவு திறக்கப்பட்ட விவகாரத்திற்குப் பின்பு இதற்கான விளக்கத்தை இங்கே வழங்கியுள்ளோம்.

இன்று தமிழகத்தில் நடக்கும் மிகப்பெரிய விவாதமே விமானத்தின் எமர்ஜென்ஸி கதவைத் திறந்தது விவகாரம் தான். கடந்த 10ம் தேதி தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை மற்றும் பெங்களூரு தெற்கு தொகுதி எம்பி தேஸ்வி சூர்யா ஆகியோர் கட்சி பணிக்காகச் சென்னையிலிருந்து திருச்சிக்குப் பயணிக்கும் போது விமானத்தின் எமர்ஜென்ஸி கதவைத் திறந்ததாகத் தகவல்கள் வெளியாகி தற்போது சர்ச்சையாகியுள்ளது. விமானத்தின் எமர்ஜென்ஸி கதவு என்றால் என்ன? அதைத் திறந்தால் என்ன நடக்கும்? இதை யார் திறக்க வேண்டும் உள்ளிட்ட விபரங்களைக் காணலாம்.

ஸ்க்ரூ எல்லாம் இருக்காது... விமானத்தின் எமர்ஜென்ஸி டோர் எங்கு இருக்கும் எப்படி திறக்கனுன்னு தெரியுமா?

கடந்த 17ம் தேதி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடந்த 2022 டிசம்பர் 10 சென்னையிலிருந்து திருச்சிக்குச் செல்லும் விமானத்தின் எமர்ஜென்ஸி கதவு திறக்கப்பட்டதால் விமானம் 2 மணி நேரம் தாமதமாக கிளம்பியதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. இதில் யார் கதவைத் திறந்தது என்ற விபரம் வெளியாகவில்லை.

சிவில் ஏவியேசன் துறை அமைச்சர் ஜோதிர்ஆதித்யா இந்த சம்பவத்தைத் தேஜஸ்வி சூர்யா தான் செய்தது என உறுதி செய்துள்ளார். அதில் அவர் விமானத்தின் கதவை அவர் தவறுதலாகத் தெரியாமல் திறந்துவிட்டதாகவும், அப்பொழுது விமானம் தரையில் தான் இருந்ததாகவும் விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டதால் அதன் பின் அதற்கான கொடுக்கப்பட்ட பல்வேறு செக்கப்கள் முடிக்கப்பட்ட பின்பு விமானம் கிளம்பியதாகவும் விளக்கமளித்தார்.

இந்த சம்பவம் நடந்த பின்பு அதை தேஸ்வி சூர்யா தெரியாமல் செய்ததை உணர்ந்த பின்பு அவரே அதை விமானியிடமும், விமான குழுவினரிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்பு தான் விமானத்தின் விதிமுறைகளின்படி மற்ற டெஸ்ட்கள் முடித்த பின்பு விமானம் 2 மணி நேரம் தாமதமாக கிளம்பியது. தன்னால் விமானம் தாமதத்திற்காக சக பயணிகளிடம் தேஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டதாக அந்த விமானத்தில் பயணித்த சக பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எமர்ஜென்ஸி டோர் என்றால் என்ன?

எமர்ஜென்ஸி டோர் என்பது இதன் பெயரில் இருப்பது போலவே விமானத்தில் அவசரக் காலத்தில் பயன்படுத்தக்கூடிய கதவாகும். இது விமானத்தின் இறக்க அருகே இருக்கும். இது விமானத்தின் மற்ற கதவுகள் எல்லாம் திறக்க முடியாமல் போனால் அல்லது அவசரக் காலத்தில் பயணிகள் வெளியேற முடியாத நிலையில் இதைத் திறந்து பயணிகள் விமானத்திலிருந்து றெக்கை பகுதிக்கு வரலாம். இந்த கதவை விமானம் பறக்கும் போது நாம் நினைத்தாலும் திறக்க முடியாது.

விமானம் பறக்கும் போது விமானத்தின் வெளியே பிரஷர் அதிகமாக இருப்பதால் சாதாரண மனிதனால் விமானம் பறக்கும் போது திறக்க முடியாது விமானம் தரையில் இருக்கும் போது மட்டுமே திறக்க முடியும். இந்த சீட்டின் அருகே இருப்பவருக்கு மட்டும் விமானப் பணியாளர்கள் விமானம் கிளம்பும் முன்பு இதை எப்படி ஆப்ரேட் செய்ய வேண்டும் எனச் சிறிய விளக்கம் ஒன்றை அளிப்பார்கள். இது தான் விமானத்தின் எமர்ஜென்ஸி கதவு

இந்த கதவைத் தேவையில்லாமல் திறப்பது சட்டப்படி குற்றமாகும். தேஸ்வி சூர்யா தெரியாமல் இந்த கதவைத் திறந்தது ஒன்று விமானத்தின் எமர்ஜென்ஸி கதவு திறக்கப்படும் முதன் முறையல்ல இதற்கு முன்பு இந்தியா உள்ள சர்வதேச அளவில் பல சந்தர்ப்பங்களில் மக்கள் இந்த கதவைத் திறக்க முயற்சித்துள்ளனர். இதற்கு முன்பு இப்படியான சந்தர்ப்பங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பின்னர் எச்சரித்து அனுப்பியுள்ளனர். அப்படியான ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What is the emergency door in flight know when to open
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X