ரயில் சக்கரத்திற்கும் கார் டயருக்கும் பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்குதா? ஆச்சரியமான தகவலா இருக்குதே!
ரயில்களில் வீல்கள் எல்லாம் இரும்பு சக்கரங்களாக இருக்கும் போது கார்களில் வீல்கள் ரப்பர் டயர்களால் வழங்கப்படுவது ஏன்? இந்த கேள்வி பலருக்கும் பல்வேறு நேரங்களில் உதித்திருக்கும் ஆனால் இதற்கான சரியான பதில் பலருக்கு தெரியாது. இது எல்லாம் விஞ்ஞான கண்டுபிடிப்பு என கடந்து சென்று விடுவார்கள் ஆனால் நாம் ஏன் கார்களுக்கு இரும்பு வீல் இல்லை ஏன் ரயில்களுக்கு ரப்பர் வீல் இல்லை என்ற காரணத்தை தெரிந்துகொள்ள போகிறோம்.
மனித இனத்தின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு சக்கரம். சக்கரம் இருந்ததால் தான் ஒரு மனிதன் ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடத்திற்கு வேகமாக நகர முடிந்தது. இப்படி வேகமாக நகர முடிந்ததால் அவன் வேகமாக வளர்ச்சி அடைய தொடங்கினான். அவன் வளர்ச்சி தொடர்ந்து வேகமாக அதிகரிக்கதால் இன்று நாம் மற்ற உயிரினங்களை காட்டிலும் மிகப்பெரிய அளவிலான பரிணாம வளர்ச்சியை சந்தித்துள்ளோம்.

இப்படியாக மனிதன் கண்டுபிடிக்கப்பட்ட சக்கரம் பின்பு ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் உதவியது. ஒரு இடத்தில் இருந்து ஒரு இடத்திற்கு செல்ல பல்வேறு வகையான வாகனங்களை மனிதன் கண்டுபிடிக்க துவங்கினான். பின்பு அதிலிருந்து வரும் சிக்கல்களை வைத்து அதை ஒவ்வொரு கட்டத்திலும் மேம்படுத்தி மேம்படுத்தி வந்து கொண்டிருக்கிறான்.
தற்போது உலகில் இரண்டு விதமான டயர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஒன்று முற்றிலும் இரும்பால் ஆன வீல்கள் மற்றொன்று ரப்பர் மூலம் தயாரிக்கப்பட்ட டயர்கள். இன்றைய பயன்பாட்டில் ரயில்களில் இரும்பாலான வீல்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கார், விமானம், பஸ், லாரி போன்ற வாகனங்களில் ரப்பர் மூலம் செய்யப்பட்ட டயர்கள் பயன்படுத்தப்படுகிறது.

இப்படியாக இந்த வாகனத்திற்கு இந்த வகையான டயர்தான் பயன்படுத்த வேண்டும் என அதன் வடிவமைப்பாளர்கள் எப்படி முடிவு செய்கிறார்கள் என்று ஒரு கணக்கு இருக்கிறது. ஒரு வாகனத்திற்கு இந்த வகை டயர் தான் பயன்படுத்த வேண்டும் என்ற முடிவை எடுப்பதற்கு பல காரணிகளை கருத்தில் கொண்டுதான் முடிவு செய்யப்படும்.
அதன்படி அந்த வாகனம் ரோட்டில் செல்லும்போது ஏற்படும் உராய்வு என்ன வகையான வாகனம், அதனை எடை எவ்வளவு, எவ்வளவு எடையை சுமந்து செல்கிறது, எவ்வளவு வேகத்தில் செல்கிறது, எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்ன மாதிரியான பாதையில் செல்ல வேண்டும் அந்தப் பாதையில் இருக்கும் பிரச்சனைகள் என்ன என்பதையெல்லாம் ஆய்வு செய்து அதன் பின்பு தான் அந்த வாகனத்திற்கான டயர் முடிவு செய்யப்படுகிறது.

வாகனத்தின் வகைகள்: ஒவ்வொரு விதமான வாகனத்திற்கு ஒவ்வொரு விதமான டயர்கள் தேவைப்படும். உதாரணமாக ரயில், விமானம் ஆகியவை எடுத்துக் கொள்வோம் இவையெல்லாம் அதிக எடை கொண்ட வாகனங்களாக இருக்கும். இந்த வாகனத்தின் டயர்கள் அதிகமான எடையை தாங்கக் கூடிய அளவிலான டயர்களாக இருக்க வேண்டும். ஆனால் கார் பைக் போன்ற வாகனங்கள் எல்லாம் குறைவான எடை கொண்டதாக இருக்கும் அதனால் குறைவான எடையை தாங்கும் அளவிற்கான டயர்களாக இருந்தால் போதும்.
உராய்வு: ஒரு வாகனம் பயணிக்கும் போது அது எந்த விதமான தடத்தில் பயணிக்கிறது என்பதை பொறுத்து அதன் உராய்வுகள் இருக்கும் ஒரு வாகனத்தின் வீல் சுத்த வேண்டும் என்றால் அது நிலையாக இருக்கும் ஒரு இடத்தில் பதித்து வீல் சுற்ற வேண்டும்.

அப்பொழுதுதான் அது சுற்றும் அதே நேரம் அது நிலையாக சுற்றும் இடத்தின் தன்மையை பொறுத்து உராய்வுகள் ஏற்படும் கரடு முரடான பாதையை நிலையான பொருளாக எடுத்து வீல் சுற்ற ஆரம்பித்தால் அதிகமான உராய்வுகள் இருக்கும் இதுவே வழுவழுப்பான இடத்தை எடுத்து வீல் சுற்றினால் இலகுவாக சுற்ற முடியும்.
வாகனத்தின் எடை: ஒரு வாகனத்தின் எடை முழுவதும் அதன் டயரில் தான் இருக்கும் உதாரணமாக ஒரு வாகனத்திற்கு நான்கு டயர்கள் இருந்தால் அதன் மொத்த எடையும் இந்த நான்கு டயரிலும் இருக்கும் அதிகமான எடை கொண்ட வாகனங்கள் அதற்கு ஏற்ற வீல்களை பயன்படுத்த வேண்டும். வீல்கள் அந்த வாகனத்தின் எடையை தாங்க முடியாத அளவுக்கு இருந்தால் அந்த வில்கள் உடைய வாய்ப்பு உள்ளது, அல்லது வெடித்துப் போகவும் வாய்ப்பு உள்ளது.

வேகம் மற்றும் தூரம்: ஒரு வாகனத்திற்கான வீலை தேர்வு செய்யும் போது அந்த வாகனம் எவ்வளவு வேகத்தில் பயணிக்கிறது எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்பதை கணக்கிட வேண்டும். உதாரணமாக விமானங்கள் அதிக எடை கொண்டது அதே நேரம் விமானம் தரையில் வந்து இறங்கியதும் அதிக வேகத்தில் பயணிக்க வேண்டும்.
ஆனால் விமானம் பயணிக்க வேண்டிய தூரம் மிக குறைவுதான். அதே நேரம் சாதாரணமாக ஒரு கார் அதிக தூரம் சாலையில் பயணிக்கும் ஆனால் மிதமான வேகத்தில் தான் பயணிக்க முடியும். விமானம் போல அதிகமான வேகத்தில் பயணிக்க முடியாது. இந்த விஷயத்தை வீலை தேர்வு செய்யும் போது கருத்தில் கொள்ள வேண்டும்.

நிலப்பரப்பு மற்றும் சுற்றுச்சூழல்: ஒரு வாகனம் பயன்படுத்தப்படும் நிலப்பரப்புகள் மற்றும் அங்குள்ள சுற்றுச்சூழலை பொறுத்து வாகனத்தின் டயர்களை தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக ஆஃப ரோடு வாகனங்கள் கடினமான பாதைகளில் பயணிக்க வேண்டும். அதை தாங்கும் அளவிற்கு வாகனங்களின் டயர்கள் இருக்க வேண்டும். இதுவே பனி பிரதேசங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் அதிகமான வழுக்கும் தன்மை கொண்ட பாதைகள் பயணிக்க வேண்டும். இதை சமாளிக்கும் அளவிற்கு அதன் டயர்கள் இருக்க வேண்டும்.
ரயில்களில் ஏன் இரும்பு வீல்கள் பயன்படுத்தப்படுகிறது: ரயில் என்பது நீண்ட தூரம் பயணிப்பதற்கான வாகனமாகும். அதே நேரம் இது அதிக எடையை இழுத்து செல்ல வேண்டும். மேலும் வேகமாகவும் செல்ல வேண்டும். அதிக எடையுடன் வேகமாகவும் செல்ல வேண்டுமென்றால் உராய்வுகள் குறைவாக இருக்க வேண்டும். இதை கணக்கிட்டு தான் ரயில்களில் உராய்வுகளை குறைவாக இருப்பதற்காக தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தண்டவாளங்கள் மேடு பள்ளங்கள் இல்லாமல் நேராக சமமாக இருக்கும்.
இதனால் ரயில் தண்டவாளங்களில் செல்லும் போது எந்த வித இடையூறும் இல்லாமல் வேகமாக செல்ல முடியும். இப்படியாக செல்லும் போது ரயில்களில் ரப்பர் டயர்களை பயன்படுத்த முடியாது. ஏனென்றால் ரப்பர் டயர்கள் கொண்ட வாகனத்தை இழுக்க இன்ஜினில் அதிகமான சக்தி தேவைப்படும்.
ரயில்கள் ஏற்கனவே அதிக எடை கொண்டதாக இருப்பதால் அதற்கு அதிக சக்தி தேவைப்படும் நிலையில் டயர்களை ரப்பர் மூலம் பொருத்தினால் அதை இழுக்க மேலும் அதிகமான சக்தி தேவைப்படும். ஆனால் ஸ்டீல் வீல்கள் ஸ்மூத்தான இருப்பதால் அதை பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கிறது.
அதே நேரம் ரயில் தொடர்ந்து நீண்ட நேரம் அதிக வேகத்தில் செல்ல வேண்டும் அதிக எடை கொண்ட ஒரு வாகனம் அதிக வேகத்தில் செல்லும்போது உராய்வு ஏற்பட்டு, அதன் மூலம் வெப்பம் அதன் வீலில் அதிகமாகும் ரப்பர் டயர்கள் என்றால் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வெப்பம் தாங்காமல் உருக வாய்ப்புள்ளது. ஆனால் ஸ்டீல் வில்கள் இப்படியாக வெப்பம் காரணமாக உருக வாய்ப்பு இல்லை. இதனால்தான் ரயில்களில் இரும்பு வீல்கள். பயன்படுத்தப்படுகிறது.
கார்களின் ஏன் ரப்பர் டயர்கள் பயன்படுத்தப்படுகிறது?: கார்களின் கதையை முற்றிலும் வேறு கார்கள் குறைவான தூரத்தில் பயணிக்க அதே நேரம் குறைந்த எடை, குறைந்த வேகம் ஆகிய அம்சங்களை கொண்ட வாகனமாக இருக்கிறது. கார்களை நாம் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடியும் என்ற ஒரு வசதியையும் கொடுக்கும் வாகனமாக இருக்கிறது.
நாம் கார்கள் பயணிக்கும் பாதை கரடு முரடான சிறப்பான பாதையாக இருக்கும். இந்த விஷயங்களை எல்லாம் தாங்குவதற்கு ஒரு ரப்பர் டயர்தான் தேவை. அதுதான் கடினமான பாதைகளில் வாகனங்களை எளிதாக பயணிக்க வைக்க முடியும். அதனால்தான் கார்களில் ரப்பர் டயர்கள் பொருத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனத்தின் தன்மையை பொறுத்து தான் அதற்கான வீல் முடிவு செய்யப்படுகிறது. இதை வாகனத்தை வடிவமைக்கும்போதே பல்வேறு ஆய்வுகள் செய்து தான் முடிவு செய்கிறார்கள். ரப்பர் டயர்களிலேயே பல்வேறு விதமான டயர்கள் உள்ளது. லாரிகளுக்கு, கார்களுக்கு, பஸ்களுக்கு என விதவிதமாக டயர்கள் இருக்கிறது. இது எல்லாம் அதன் பயன்பாட்டை பொறுத்து வடிவமைக்கப்படுகிறது. கார்களில் இரும்பு வீலையும் ரயில்களில் ரப்பர் டயரையும் பயன்படுத்துவது என்பது முடியாத காரியம் ஆகும்.


Click it and Unblock the Notifications









