ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் இருக்கும் மஞ்சள் கோட்டிற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

ரயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பாக நிற்க மஞ்சள் நிற கோடு போடப்பட்டிருக்கும் அதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? முழு விபரத்தைக் கீழே காணுங்கள்.

ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் இருக்கும் மஞ்சள் கோட்டிற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

நாம் எல்லோரும் வாழ்நாளில் அடிக்கடி ரயிலில் பயணித்திருப்போம். சாலை வழிப் பயணத்தை விட ரயில் வழிப் பயணம் சுகமானது தான். பெரிய அளவில் அலுப்பு இல்லாமல் பயணிக்க ரயில் பயணம் தான் சிறந்த முறை பயணமாக அமையும். ரயில் பயணம் எவ்வளவு அழகானதோ அவ்வளவு ஆபத்தானதும் கூட. ரயில்கள் மிக வேகமாகப் பயணிக்கும் சுமார் 100-130 கி.மீ வேகத்தில் ரயில்கள் சராசரியாகப் பயணிக்கிறது.

ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் இருக்கும் மஞ்சள் கோட்டிற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

இந்த நேரங்களில் பயணிகள் தாங்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய வேண்டும் என்றால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவுரை வழங்குகிறது. உதாரணமாக ரயில்களில் ஜன்னல் அருகே அமர்ந்து கொண்டு கைகளை நீட்டக் கூடாது, படிக்கட்டுகளில் தொங்கிய படி பயணம் செய்யக் கூடாது இப்படியான பல அறிவுரைகளைச் சொல்லுகிறது.

ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் இருக்கும் மஞ்சள் கோட்டிற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

இதில் முக்கியமானது பயணிகள் பிளாட்பாரங்களில் பயணிக்கும் போது அங்கு ஒரு எச்சரிக்கை கோடு போடப்பட்டுள்ளது பயணிகள் ரயில் ரயில்வே ஸ்டேஷனிற்குள் வரும் போது பயணிகள் பாதுகாப்பாக நிற்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட கோட்டிற்குப் பின்னால் நிற்க வேண்டும் என அறிவுரை சொல்லப்படுகிறது.

ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் இருக்கும் மஞ்சள் கோட்டிற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

பிளாட்பாரங்களில் உள்ள குறிப்பிட்ட இந்த கோடுகள் ரயில் தண்டவாளத்திலிருந்து 10 அடி தூரத்தில் இருக்கும். ஏன் இவ்வளவு தூரம் தள்ளி நிற்க வேண்டும். ரயிலில் இடிக்காத படி சற்று விலகியிருந்தால் மட்டும் போதாதா 10 அடி தூர இடைவெளி எதற்கு எனப் பலருக்குத் தோன்றும் அதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது.

ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் இருக்கும் மஞ்சள் கோட்டிற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

ஒரு தண்டவாளத்தில் ரயில் எவ்வளவு வேகத்தில் வரும் என யாருக்கும் தெரியாது. ரயில் வேகமாக வரும் போது குறிப்பிட்ட அளவு தூரம் தள்ளி நிற்பது தான் பாதுகாப்பைத் தரும். உதாரணமாக ரயில் வேகமாகத் தண்டவாளம் இருக்கும் பகுதிக்குள் வருகிறது. என வைத்துக்கொள்வோம். ரயில் தண்டவாளம் இருக்கும் பகுதியில் உள்ள காற்றைக் கிழித்துக்கொண்டு வரும்.

ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் இருக்கும் மஞ்சள் கோட்டிற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

ரயிலில் எடை, வேகம் எல்லாவற்றையும் கணக்கிட்டால் காற்றைக் கிழித்துக்கொண்டு ரயில் வரும் போது அந்த காற்று பக்கவாட்டில் 10 அடி வரை அழுத்தித் தள்ளும், இதனால் ரயில் வேகமாகவரும் போது 10 அடியையும் தாண்டி நின்றால் எந்த பிரச்சனையும் இருக்காது.

ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் இருக்கும் மஞ்சள் கோட்டிற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

ஆனால் 10 அடிக்குள் இருந்தால் ரயில் வரும் போது ஏற்படும் காற்று அழுத்தம் காரணமாக அந்த மனிதரின் பின்புறம் காற்று அதிக அழுத்தத்திலும், முன்புறம் குறைவான அழுத்தத்திலும் இருக்கும். இதனால் அந்த மனிதர் ரயிலை நோக்கி இழுக்கப்படுவார். இதனால் ரயில் சென்று விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் இருக்கும் மஞ்சள் கோட்டிற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

இந்த சம்பவம் நாம் கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிடும். இதனால் நாம் உயிரையே இழக்கும் சூழ்நிலை கூட ஏற்படும். இதனால் நீங்கள் ரயில் நிலையங்களில் பளாட்பாரங்களில் நிற்கும் போது தண்டவாளத்திலிருந்து குறைந்தது 10 அடி தொலைவில் பாதுகாப்பாக நின்று கொள்ளுங்கள்.

ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் இருக்கும் மஞ்சள் கோட்டிற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

பொதுவாக ரயில் நிலையங்களில் ரயில்கள் மெதுவாகத் தான் வரும் என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகத் தான் இந்த விதிமுறைகளை வைத்துள்ளது. சில ரயில்கள் சிறிய ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும் அப்பொழுது பிளாட்பாரம் இருக்கும் பகுதியிலும் வேகமாகச் செல்லும் அந்த நேரத்தில் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியிலிருக்கும் போலீசார் பயணிகள் யாரும் பிளாட்பாரத்திற்கு அருகே இல்லாதபடி பார்த்துக்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What is the yellow line in the platform know the full details
Story first published: Saturday, August 13, 2022, 10:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X