கொரோனா அச்சம் - தனிமை மட்டுமே தீர்வல்ல... வைரஸில் இருந்து பாதுகாக்க இதுவும் முக்கியம்...

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோவைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. ஒரு சில வழிமுறைகளைக் கடைபிடித்தாலே போதும் நம்மை வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் வாருங்கள் இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்க்கலாம்.

கொரோனா அச்சம் - தனிமை மட்டுமே தீர்வல்ல... வைரஸில் இருந்து பாதுகாக்க இதுவும் முக்கியம்...

உலக நாடுகள் அனைத்தையும் தன்னுடைய பேயாட்டத்தால் ஆட்டிபடைத்துக் கொண்டிருக்கின்றது கொரோனா வைரஸ். இதன் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் மிகப்பெரிய அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்தின் அச்சம் ஒரு புறமிருக்க, மறு புறம் அடித்தட்டு மற்றும் தினக்கூலிகளை பொருளாதார நிலையில் மிகவும் பாதித்திருக்கின்றது.

கொரோனா அச்சம் - தனிமை மட்டுமே தீர்வல்ல... வைரஸில் இருந்து பாதுகாக்க இதுவும் முக்கியம்...

இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறைக்கு மிகப் பெரிய சவாலான சூழல் மற்றும் சிக்கலும் நிலவி வருகின்றது. குறிப்பாக, இந்த கொடிய வைரஸ் மிக எளிமையாக ஒருவரிடத்தில் இருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மைக் கொண்டிருக்கின்றது. இதனாலயே உலக நாடுகளின் அனைத்து சுகாதாரத்துறையும் மிகப்பெரிய சிக்கலைச் சந்தித்து வருகின்றது.

கொரோனா அச்சம் - தனிமை மட்டுமே தீர்வல்ல... வைரஸில் இருந்து பாதுகாக்க இதுவும் முக்கியம்...

இதுபோன்ற சூழ்நிலைகளின் காரணத்தால் மக்கள் ஒருவரையொருவர் அவர்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இதில், அரசின் நடவடிக்கைகளைக் காட்டிலும் நம்முடைய பங்களிப்பே மிக முக்கியமானதாக இருக்கின்றது. இருப்பினும், மக்கள் அலட்சியப் போக்கில் இருப்பதன் காரணத்தால் அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

கொரோனா அச்சம் - தனிமை மட்டுமே தீர்வல்ல... வைரஸில் இருந்து பாதுகாக்க இதுவும் முக்கியம்...

மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இத்தடை, முன்னதாக வருகின்ற 31ம் தேதி வரை மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அடுத்த மாதம் ஏப்ரல் 15ம் தேதி வரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. என்னதான் தனிமைப்படுத்துதல் தீவிரமாக்கப்பட்டாலும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் மூலம் பரவிய கொரோனா வைரஸ் தற்போது அதன் தீவிரத்தைக் காட்ட தொடங்கியுள்ளது.

கொரோனா அச்சம் - தனிமை மட்டுமே தீர்வல்ல... வைரஸில் இருந்து பாதுகாக்க இதுவும் முக்கியம்...

எனவே நம்மையைும், நம்மைச் சார்ந்திருப்பவர்களையும் பாதுகாத்துக் கொள்ள கட்டமாயமாகியுள்ளது. இந்த கொடிய வைரஸ் மனிதனின் உடல் தஞ்சமடையாமல், வெறும் காற்றிலேயே பல மணி நேரங்கள் தனித்து உயிர் வாழும் தன்மையைக் கொண்டிருக்கின்றன.

ஆகையால், நம்மையும் நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் மிக மிக மிக தூய்மையாக வைத்திருப்பது அவசியமாகியுள்ளது.

கொரோனா அச்சம் - தனிமை மட்டுமே தீர்வல்ல... வைரஸில் இருந்து பாதுகாக்க இதுவும் முக்கியம்...

குறிப்பாக, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையும் அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கின்றது.

இதில், அதிக முக்கியத்துவமான இடத்தில் நாம் பயன்படுத்தும் வாகனங்கள் இருக்கின்றன. நாம் வெளியேச் செல்லும்போது கொரோனா தொற்றுடையவர் நம்மை அண்டாமல் இருந்தாலும் நம்மை வாகனத்தை ஏதேனும் ஒரு வகையில் வைரஸ் தொற்றை ஏற்படுத்தும் வகையிலான செயல்பாட்டில் ஈடுபட்டிருக்கலாம்.

கொரோனா அச்சம் - தனிமை மட்டுமே தீர்வல்ல... வைரஸில் இருந்து பாதுகாக்க இதுவும் முக்கியம்...

இதனை அறியாத நம்மில் பலர் வழக்கமான முறையில் கையாண்டு தொற்றை தொத்திக்க் கொள்ளும் சூழல் ஏற்படுகின்றது. இதனைத் தவிர்ப்பதற்காக சில வழிமுறைகளை நாங்கள் இங்கு வழங்க இருக்கின்றோம். வாருங்கள் அது குறித்த தகவலை கீழே தொடர்ச்சியாக பார்க்கலாம்.

கொரோனா அச்சம் - தனிமை மட்டுமே தீர்வல்ல... வைரஸில் இருந்து பாதுகாக்க இதுவும் முக்கியம்...

கார்களில் எந்தெந்த பகுதிகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்?

நாம் பயன்படுத்தும் காரின் அனைத்து பகுதிகளும் எளிதில் வைரஸைப் பரப்பும் ஓர் இடமாகவே இருக்கின்றது. ஆனால் அதில் 10 இடங்கள் மட்டுமே மிக அதிக கவனத்தைச் செலுத்த வேண்டியவையாக இருக்கின்றது.

கொரோனா அச்சம் - தனிமை மட்டுமே தீர்வல்ல... வைரஸில் இருந்து பாதுகாக்க இதுவும் முக்கியம்...

சாவி:

நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய இடத்தில் முதலில் சாவிகள் இருக்கின்றன. காரை திறக்க மற்றும் மூடுவதற்கு என பலவற்றிற்கு சாவியே முதன்மையான ஒன்று. அதிலும், இதனை நம்முடைய கைகளால் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆகையால், இது எளிதில் வைரஸைப் பரப்பும் எந்திரமாக இருக்கின்றது. எனவே, கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டிய கார் சார்ந்த பொருளில் சாவி முதன்மை இடத்தில் இருக்கின்றது.

கொரோனா அச்சம் - தனிமை மட்டுமே தீர்வல்ல... வைரஸில் இருந்து பாதுகாக்க இதுவும் முக்கியம்...

கார் கதவுகளின் ஹேண்டில்கள்

சாவிக்கு அடுத்தபடியாக வைரஸ் தொற்றுவதில் காரின் கதவுகள் இரண்டாம் இடத்தில் இருக்கின்றன. கார் சாவியைக்கூட நம்மால் சில நேரங்களில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். ஆனால், தனித்து விடப்பட்ட கார் கதவுகளின் ஹேண்டில்கள் யார் வேண்டுமானாலும் தொடலாம் என்ற நிலையில் இருக்கின்றது. ஆகையால், இதுவும் கிருமிகளைப் பரப்பும் ஓர் கருவியாக உள்ளது.

கொரோனா அச்சம் - தனிமை மட்டுமே தீர்வல்ல... வைரஸில் இருந்து பாதுகாக்க இதுவும் முக்கியம்...

ரியர் வியூ கண்ணாடிகள்

நீங்கள் வாகனம் ஓட்டும்போது ரியர்வியூ கண்ணாடிகள் முக்கியம். ஏனெனில், அவை உங்களுக்கு பின்னால் வரும் வாகனத்தை பற்றி அறிய உதவுகின்றன. ஆகையால், சில நேரங்களில் அந்த கண்ணாடிகளை வெறும் கைகளால் தொடைக்க நேரிடும். எனவே, வெளிப்புற மற்றும் பின்புற ரியர் வியூ கண்ணாடிகளை கிருமி நாசினி கொண்டு துடைப்பது அவசியமாக உள்ளது. முக்கியமாக, வெளிப்புற ரியர்வியூ கண்ணாடிகள் வெளிப்புற சூழலுடன் தொடர்பில் இருப்பதால் அவற்றை சரிசெய்வதற்கு முன்பே உட்புற ரியர்வியூ கண்ணாடியை தூய்மைச் செய்திட வேண்டும்.

கொரோனா அச்சம் - தனிமை மட்டுமே தீர்வல்ல... வைரஸில் இருந்து பாதுகாக்க இதுவும் முக்கியம்...

ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் மற்றும் ஹேண்ட் பிரேக்

இவற்றிற்கு வெளிப்புறத்தில் இருந்து கிருமி பரவும் அச்சமில்லை என்றாலும் அதன் உரிமையாளரால் அது ஓர் கிருமி பரப்பியாக மாறிவிடலாம். இவை, கார்களில் அதிகம் பயன்படும் கருவிகளில் ஒன்றாக இருப்பதால் இவற்றையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது அவசியம்.

ஸ்டியரிங் வீல்

ஸ்டியரிங் வீல்

காரை இயக்குவதற்கான முக்கிய பாகங்களில் ஸ்டியரிங் வீலும் ஒன்று. இதில் நம்முடைய கைகள் எப்போதுமே தொட்டவாறே இருக்கும். வெளிப்புறத்தில் கடத்தி வரப்பட்ட எந்தவொரு கிருமிகளும் இதன்மூலம் பரவுவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் இருக்கின்றது. ஆகையால், தற்போதைய சூழலில் ஒவ்வொரு முறையும் காரை விட்டு வெளியேறும்போது மற்றும் பயன்படுத்த ஆரம்பிப்பதற்கு முன்பு தூய்மைப்படுத்துவது அவசியமானதாக உள்ளது.

ஸ்டியரிங் வீல்

கியர் லிவர்

ஸ்டியரிங்கிற்கு அடுத்தபடியாக நம்முடைய கைகள் அதிகம் படரும் பாகமாக கியர் ஷிஃப்டர்கள் இருக்கின்றன. ஆகையால், இந்த பாகத்தின்மீதும் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இது நம்முடைய அனைத்து இயக்கத்தின்போதும் நம்முடைய கைகளுடன் எப்போதும் தொடர்பில் இருக்கும்.

ஸ்டியரிங் வீல்

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

காரை இயக்கும்போது சிறந்த பயண அனுபவத்தை வழங்குவதில் இன்ஃபோடெயின்மென்ட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகையால், அவற்றை தவிர்ப்பது முடியாத ஒன்றாக உள்ளது. இது வாகன ஓட்டுநரால் மட்டுமின்றி பலரால் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை அவ்வப்போது சுத்தம் செய்து பரமாரிப்பது நம்மையும், நம்முடன் பயணிக்கும் சக மனிதர்களையும் பாதுகாக்க முடியும்.

ஸ்டியரிங் வீல்

ஏசி கட்டுப்பாட்டுகள்

தற்போதைய கால நிலைக்கு ஏசி மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆகையால், பலர் காரில் பயணிக்கும்போது ஜன்னல்களை திறந்து வைக்க விரும்புவதில்லை. குறிப்பாக, வெளியில் இருந்து வரும் அதிகப்படியான சத்தம் மற்றும் அனல் கலந்த காற்றின் காரணமாக, காரின் ஜன்னல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு ஏசி பயன்படுத்தப்படுகின்றது.

ஸ்டியரிங் வீல்

அதுபோன்ற நேரத்தில் பலர் தங்களுக்கென வழங்கப்பட்டுள்ள பிரத்யேக வேண்டுகளை கையாள முற்படுகின்றனர். எனவே, இந்த வெண்டுகளின் கட்டுப்பாட்டு இடங்கள் கிருமிகளை மற்றவர்களுக்கும் பரப்பும் ஓர் கருவியாக மாறிவிடுகின்றன.

ஆகையால், காரில் அதிகம் கவனம் செலுத்தி சுத்தம் செய்வதில் ஏசி வெண்டுகளும் முக்கிய இடத்தில் இருக்கின்றன.

ஸ்டியரிங் வீல்

ஸ்விட்ச் கியர்கள்

ஸ்விட்ச் கியர்கள் என்பது அடிப்படையில் உங்களுக்கு அடிக்கடி தேவைப்படும் அனைத்து மின் சாதனங்களில் ஒன்றாக இருக்கின்றது. இவை, பவர் ஜன்னல்களை கட்டுப்படுத்த, ஹெட்லைட்டை ஆன் மற்றும் ஆஃப் செய்ய, இன்டிகேட்டர்களை இயக்க மற்றும் மேலும் சில அம்சங்களைக் கட்டுப்படுத்த ஸ்விட்ச் கியர்கள் அதிகம் பயன்படுகின்றது. ஆகையால், வாகனம் ஓட்டத் தொடங்குவதற்கு முன்பு சுவிட்ச் கியர்களை சுத்தம் செய்ய வேண்டும்.

கொரோனா அச்சம் - தனிமை மட்டுமே தீர்வல்ல... வைரஸில் இருந்து பாதுகாக்க இதுவும் முக்கியம்...

பின் பக்க டூரின் கைப் பிடி (Boot lid handle)

பலர் தற்போது கொரோனா அச்சத்தின் காரணமாக இருக்கும் இடத்தை விட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். அவ்வாறு செல்லும்போது தங்களின் மூட்டை முடிச்சுகளையும் சேர்த்து வாகனங்களில் ஏற்றிச் செல்கின்றனர். இந்த நேரத்தில் அதிகப்படியான பொருட்களை பூட் லிட் பகுதியிலேயே வைக்க முற்படுகின்றனர். அப்போது, ஒரே பூட் லிட்டின் ஹேண்டில்களைப் பயன்படுத்த நேரிடுகின்றது. ஆகையால், காரின் வெளிப்புறத்தில் அதிகம் கவனிக்க வேண்டிய இடத்தில் இதுவும் ஒன்றாக உள்ளது.

கொரோனா அச்சம் - தனிமை மட்டுமே தீர்வல்ல... வைரஸில் இருந்து பாதுகாக்க இதுவும் முக்கியம்...

ஆக்ஸலரேட்டர், பிரேக் மற்றும் கிளட்ச் பெடல்கள்

இவற்றைப் பயன்படுத்த வாகன ஓட்டிகள் பெரும்பாலும் காலணி அணிந்த கால்களையேப் பயன்படுத்துகின்றனர். ஆகையால், காலணிகள் இருக்கும் கிருமிகள் இதில் தங்குவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது. எனவே, ஒவ்வொரு முறையும் காரை பயன்படுத்துவதற்கு முன்பாக தூய்மைப்படத்துவது மிக முக்கியமாக உள்ளது.

கொரோனா அச்சம் - தனிமை மட்டுமே தீர்வல்ல... வைரஸில் இருந்து பாதுகாக்க இதுவும் முக்கியம்...

மேலும், மேற்கூறிய அனைத்தில் இருந்தும் முழுமையாக விடுபெற் முக கவசம் மற்றும் கையுறைகளைப் பயன்படுத்தினால் வைரஸ் தொற்றில் இருந்து தற்காலிகமாக தடுத்துக்கொள்ள முடியும். தொடர்ந்து, அவ்வப்போது சானிடைசர் போன்ற கிருமி நாசினிகளை கைகளில் தடவிக் கொள்வதன்மூலமும் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்.

ஆகையால், அரசு வழங்கும் வழிமுறைகளுடன் மேற்கூறிய சிலவற்றையும் உங்களிந் நலனுக்காக மற்றும் நம்மைச் சார்ந்தவர்களின் நலனுக்காகவும் கடைபிடிப்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What Parts Of Your Car Should Be Kept Clean To Avoid Corona Virus Attack...? Read In Tamil.
Story first published: Wednesday, March 25, 2020, 13:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X