அதிர வைக்கும் சம்பவம்... வாழை பழம் ஏற்றி சென்ற கப்பல்கள் மட்டும் நடுக்கடலில் மாயமான மர்மம் இதுதான்

துரதிருஷ்டம் எனக்கருதி, கப்பல்களில் வாழை பழம் எடுத்து செல்வதை பலர் தவிர்க்கின்றனர். இதற்கான அதிர வைக்கும் காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அதிர வைக்கும் சம்பவம்... வாழை பழம் ஏற்றி சென்ற கப்பல்கள் மட்டும் நடுக்கடலில் மாயமான மர்மம் இதுதான்

விடுமுறை நாட்களை உல்லாச கப்பல்களில் ஆடம்பரமாக செலவிடும் கலாச்சாரம் தற்போது பிரபலமாகி கொண்டே வருகிறது. உல்லாச கப்பல்களில் கிடைக்கும் ஆடம்பரமான வாழ்க்கை சுற்றுலா பயணிகளை சுண்டியிழுக்கிறது. கடல் மார்க்கமாக சென்று உலகின் பல்வேறு நாடுகளை கண்டு களிக்கும் வாய்ப்பை உல்லாச கப்பல்கள் வழங்குகின்றன.

அதிர வைக்கும் சம்பவம்... வாழை பழம் ஏற்றி சென்ற கப்பல்கள் மட்டும் நடுக்கடலில் மாயமான மர்மம் இதுதான்

எனவே ஆடம்பரமான பயணங்களை மேற்கொள்ள விரும்புபவர்கள் மட்டுமல்லாது, கடல் வழி பயணங்களை மேற்கொள்ள விரும்புபவர்கள் மத்தியிலும் உல்லாச கப்பல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் உல்லாச கப்பல் பயணங்கள் காஸ்ட்லியான விஷயம் என்பதால், அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.

அதிர வைக்கும் சம்பவம்... வாழை பழம் ஏற்றி சென்ற கப்பல்கள் மட்டும் நடுக்கடலில் மாயமான மர்மம் இதுதான்

அதே சமயம் உல்லாச கப்பல் பயணங்களில் பல்வேறு ஆபத்துக்களும் நிறைந்துள்ளன. உல்லாச கப்பல்கள் மது விருந்துகளுக்கு பெயர் பெற்றவை. இவ்வாறான கொண்டாட்டங்களின்போது போதை தலைக்கேறி விடுவதால், ஒரு சிலர் கடலில் விழுந்து மாயமாகி விடுகின்றனர். என்னதான் முயற்சி செய்தாலும் கூட, இவர்களில் பலரை கண்டுபிடிக்க முடிவதில்லை.

அதிர வைக்கும் சம்பவம்... வாழை பழம் ஏற்றி சென்ற கப்பல்கள் மட்டும் நடுக்கடலில் மாயமான மர்மம் இதுதான்

உடல் கூட கிடைப்பதில்லை என்பது வேதனையான விஷயம். மேலும் உல்லாச கப்பல்களில் வாழை பழத்தின் வடிவில் மற்றொரு ஆபத்தும் இருப்பதாக நம்பப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் பலரும் விரும்ப கூடிய ஒரு பழமாக வாழை பழம் இருக்கிறது. எனவே உல்லாச கப்பல்களில் பயணம் செய்யும் பலர் வாழை பழங்களை தங்கள் லக்கேஜில் எடுத்து செல்லலாம் என நினைக்கின்றனர்.

அதிர வைக்கும் சம்பவம்... வாழை பழம் ஏற்றி சென்ற கப்பல்கள் மட்டும் நடுக்கடலில் மாயமான மர்மம் இதுதான்

ஆனால் தப்பி தவறி கூட வாழை பழங்களை உல்லாச கப்பல்களில் எடுத்து செல்ல வேண்டாம் என ஒரு சிலர் எச்சரிக்கை விடுக்கின்றனர். வாழை பழங்கள் துரதிருஷ்டவசமாக கருதப்படுவதே இதற்கு காரணம். இந்த எச்சரிக்கையை மீறி வாழை பழங்களை எடுத்து சென்றால், பெரும் ஆபத்து ஏற்படும் என பலராலும் இன்றளவும் நம்பப்பட்டு வருகிறது.

அதிர வைக்கும் சம்பவம்... வாழை பழம் ஏற்றி சென்ற கப்பல்கள் மட்டும் நடுக்கடலில் மாயமான மர்மம் இதுதான்

ஆனால் உண்மையில் இது ஒரு மூட நம்பிக்கை மட்டுமே. நமது ஊர் மக்கள் மட்டுமே மூட நம்பிக்கைகளை நம்புவார்கள் என எண்ணி கொண்டிருந்தவர்களுக்கு, உல்லாச கப்பல்களிலும் மூட நம்பிக்கையா? என்ற ஆச்சரியம் ஏற்படுவது இயல்பானதுதான். இதன் பின்னணியை தெரிந்து கொள்ள சில நூறு ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்க வேண்டும்.

அதிர வைக்கும் சம்பவம்... வாழை பழம் ஏற்றி சென்ற கப்பல்கள் மட்டும் நடுக்கடலில் மாயமான மர்மம் இதுதான்

உலகின் பெரும்பாலான சரக்கு போக்குவரத்து கப்பல்கள் மூலமாகதான் நடைபெறுகிறது. விமானங்கள் மற்றும் ரயில்கள் கண்டறியப்படுவதற்கு முன்பிருந்தே கப்பல்கள் மூலமாகதான் சரக்கு போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த வகையில் கடந்த 1700ம் ஆண்டுகளில், வாழை பழங்களை ஏற்றி சென்ற சில கப்பல்கள் கடலில் உடைந்து போயின.

அதிர வைக்கும் சம்பவம்... வாழை பழம் ஏற்றி சென்ற கப்பல்கள் மட்டும் நடுக்கடலில் மாயமான மர்மம் இதுதான்

மேலும் சில கப்பல்கள் கடலில் மாயமாகின. இதனால்தான் வாழை பழங்களை துரதிருஷ்டவசமானவையாக கருதும் பழக்கம் வந்தது. ஆனால் இது ஒரு மூட நம்பிக்கை மட்டுமே. அதாவது வாழை பழம் பழுக்கும்போது எத்திலீனை வெளியேற்றும். இதனால் வாழை பழங்களுக்கு அருகில் இருக்கும் மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகள் எளிதில் அழுகி விட கூடிய அபாயம் இருந்தது.

அதிர வைக்கும் சம்பவம்... வாழை பழம் ஏற்றி சென்ற கப்பல்கள் மட்டும் நடுக்கடலில் மாயமான மர்மம் இதுதான்

உண்மையில் வாழை பழங்களை ஏற்றி சென்ற கப்பல்களில் இதுதான் நடந்திருக்க கூடும். இதன் விளைவாக அந்த கப்பல்களில் பயணம் செய்தவர்களுக்கு தாங்க முடியாத பசி ஏற்பட்டு, அதன் காரணமாக ஏதேனும் விபரீதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. எனவேதான் தற்போதும் உல்லாச கப்பல்களில் பயணிக்கும்போது வாழை பழங்களை எடுத்து செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.

அதிர வைக்கும் சம்பவம்... வாழை பழம் ஏற்றி சென்ற கப்பல்கள் மட்டும் நடுக்கடலில் மாயமான மர்மம் இதுதான்

ஆனால் இன்றைய நவீன உலகத்தில் இதற்கெல்லாம் ஒருவர் அச்சப்பட வேண்டியது கிடையாது. ஏனெனில் தற்போது உள்ள நவீன சுகாதார, பாதுகாப்பு விதிகள் மற்றும் சிறப்பான உணவு சேமிப்பு முறைகள் இந்த அச்சங்களை ஒன்றும் இல்லாததாக்குகின்றன. ஆனால் என்னதான் இருந்தாலும், கடல் பயணங்களை மேற்கொள்ளும்போது வாழை பழங்களை தவிர்ப்பவர்கள் இன்றும் இருக்கவே செய்கின்றனர்.

அதிர வைக்கும் சம்பவம்... வாழை பழம் ஏற்றி சென்ற கப்பல்கள் மட்டும் நடுக்கடலில் மாயமான மர்மம் இதுதான்

மீனவர்கள் பலர் இன்றளவும் கூட தங்கள் கப்பல்களில் வாழை பழங்களை எடுத்து செல்வது கிடையாது. அவர்கள் இன்னமும் கூட வாழை பழங்களை துரதிருஷ்டவசமானதாகவே நினைத்து கொண்டுள்ளனர். வாழை பழங்கள் மட்டுமல்லாது, பெண்களையும் துரதிருஷ்டவசமானவர்களாக கருதும் பழக்கமும் நடைமுறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிர வைக்கும் சம்பவம்... வாழை பழம் ஏற்றி சென்ற கப்பல்கள் மட்டும் நடுக்கடலில் மாயமான மர்மம் இதுதான்

பெண்கள் துரதிருஷ்டத்தை கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள் என்று இன்றளவும் பலரால் நம்பப்படுகிறது. மாலுமிகளின் கவனத்தை பெண்கள் சிதறடித்து விடுவார்கள் என்பதால், மாலுமிகள் தங்கள் கடமைகளில் இருந்து தவறி விடக்கூடும் எனவும், இதன் விளைவாக துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நேரலாம் என்றும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What’s Behind the ‘No Bananas on a Cruise ship’ Superstition? Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X