ஒரு செகண்ட்தான்! உல்லாச கப்பலில் இந்த சின்ன தப்பை செஞ்சுட்டா எல்லாம் போச்சு... வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிரும்

உல்லாச கப்பல் பயணத்தில் நீங்கள் செய்யும் ஒரு மிகச்சிறிய தவறு மிகப்பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தும். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு செகண்ட்தான்! உல்லாச கப்பலில் இந்த சின்ன தப்பை செஞ்சுட்டா எல்லாம் போச்சு... வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிரும்

உல்லாச கப்பலில் பயணம் செய்யும்போது, ஒரு தவறை எக்காரணம் கொண்டும் செய்ய கூடாது. உல்லாச கப்பல் துறைமுகத்தில் நிற்கும்போது, தாமதமாக வருவதுதான் அந்த தவறு. பொதுவாக 'சீ டே' (Sea Day) மற்றும் 'போர்ட் டே' (Port Day) என உல்லாச கப்பலில் நாட்களை 2ஆக பிரித்திருப்பார்கள். இதில், சீ டே-வின்போது, உல்லாச கப்பல் கடலில் பயணம் செய்து கொண்டிருக்கும்.

ஒரு செகண்ட்தான்! உல்லாச கப்பலில் இந்த சின்ன தப்பை செஞ்சுட்டா எல்லாம் போச்சு... வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிரும்

மறுபக்கம் போர்ட் டே-வின்போது உல்லாச கப்பல் துறைமுகத்தில் நிற்கும். அன்றைய தினம் உல்லாச கப்பல் எந்த துறைமுகத்தில் நிற்கிறதோ, அந்த நகரத்தை நீங்கள் சுற்றி பார்க்கலாம். ஆனால் நகரத்தை சுற்றி பார்ப்பதற்கு செல்லும் ஒரு சில பயணிகள் குறித்த நேரத்தில் உல்லாச கப்பலுக்கு மீண்டும் திரும்பி வருவதில்லை.

ஒரு செகண்ட்தான்! உல்லாச கப்பலில் இந்த சின்ன தப்பை செஞ்சுட்டா எல்லாம் போச்சு... வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிரும்

நீங்கள் உல்லாச கப்பலில் அடிக்கடி பயணம் செய்திருந்தால், கடைசி நேரத்தில் மிகவும் அவசரமாக ஓடி வரும் பயணிகளை பார்த்திருக்கலாம். நீங்கள் உல்லாச கப்பலில் முதல் முறையாக பயணிப்பவர் என்றாலும் சரி அல்லது அடிக்கடி செல்பவர் என்றாலும் சரி, துறைமுகத்திற்கு தாமதமாக வரும் தவறை மட்டும் செய்து விடாதீர்கள்.

ஒரு செகண்ட்தான்! உல்லாச கப்பலில் இந்த சின்ன தப்பை செஞ்சுட்டா எல்லாம் போச்சு... வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிரும்

ஏனெனில் நீங்கள் தாமதமாக வந்தால், உல்லாச கப்பல் உங்களுக்காக காத்து கொண்டிருக்காது. சரியான நேரத்தில் நீங்கள் திரும்பி வரவில்லை என்றால், உல்லாச கப்பல் கிளம்பி சென்று விடும். எனவே நீங்கள் அதனை 'மிஸ்' செய்ய வேண்டியிருக்கும். பயணிகளுக்காக காத்திருக்காமல் உல்லாச கப்பல் கிளம்பி செல்வதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன.

ஒரு செகண்ட்தான்! உல்லாச கப்பலில் இந்த சின்ன தப்பை செஞ்சுட்டா எல்லாம் போச்சு... வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிரும்

துறைமுகத்தின் விதிமுறைகள், பயண திட்டங்கள் மற்றும் இதர காரணிகளை கருத்தில் கொண்டு, உல்லாச கப்பலின் கேப்டன்தான் இந்த முடிவை எடுப்பார். உதாரணத்திற்கு துறைமுகத்தில் நிறுத்துவதற்காக சம்பந்தப்பட்ட உல்லாச கப்பல் நிறுவனம் கட்டணம் செலுத்தியிருக்கும். மீண்டும் கிளம்புவதற்கு தாமதமானால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

ஒரு செகண்ட்தான்! உல்லாச கப்பலில் இந்த சின்ன தப்பை செஞ்சுட்டா எல்லாம் போச்சு... வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிரும்

இந்த கட்டணத்தை செலுத்த உல்லாச கப்பல் நிறுவனங்கள் மட்டுமல்லாது, யாருமே விரும்ப மாட்டார்கள். அதேபோன்று ஒரு துறைமுகத்தில் இருந்து கிளம்புவதற்கு தாமதம் ஏற்பட்டால், உல்லாச கப்பலின் பயண திட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு விடும். இது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதாலும், தாமதம் ஏற்படுவதை கேப்டன்கள் விரும்ப மாட்டார்கள்.

ஒரு செகண்ட்தான்! உல்லாச கப்பலில் இந்த சின்ன தப்பை செஞ்சுட்டா எல்லாம் போச்சு... வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிரும்

அத்துடன் ஒரு துறைமுகத்தில் இருந்து தாமதமாக புறப்பட்டால், அடுத்த துறைமுகத்திற்கு மிகவும் வேகமாக செல்ல வேண்டியிருக்கும். இது தேவையில்லாமல் எரிபொருள் செலவை அதிகரிக்கும். உல்லாச கப்பல்களில் நூற்றுக்கணக்கான/ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்வார்கள். எனவே ஒருவர் செய்யும் தாமதத்திற்காக உல்லாச கப்பல் காத்து கொண்டிருக்காது.

ஒரு செகண்ட்தான்! உல்லாச கப்பலில் இந்த சின்ன தப்பை செஞ்சுட்டா எல்லாம் போச்சு... வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிரும்

எனவே தாமதம் காரணமாக உல்லாச கப்பலை தவற விட்டு விட்டால், உங்கள் விடுமுறை வீண் ஆகி விடும். அத்துடன் தேவையில்லாமல் உங்களுக்கு கூடுதல் செலவுகளும் ஏற்படும். எனவே போர்ட் டே-வின்போது நீங்கள் வெளியே சென்றால், உல்லாச கப்பல் கிளம்பும் நேரத்திற்கு முன்னரே அதில் ஏறி விடுவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

ஒரு செகண்ட்தான்! உல்லாச கப்பலில் இந்த சின்ன தப்பை செஞ்சுட்டா எல்லாம் போச்சு... வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிரும்

சரி, எதிர்பாராதவிதமாக நீங்கள் உல்லாச கப்பலை தவற விட்டு விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? உல்லாச கப்பல் புறப்படுவதற்கு திட்டமிடப்பட்ட நேரத்தில் நீங்கள் இல்லை என்றால், மைக் மூலம் உங்களின் பெயர் அறிவிக்கப்படும். சிறிது நேரத்திற்கு பிறகும் 'ரெஸ்பான்ஸ்' இல்லை என்றால், மீண்டும் ஒரு முறை உங்கள் பெயரை உல்லாச கப்பல் அதிகாரிகள் அறிவிப்பார்கள்.

ஒரு செகண்ட்தான்! உல்லாச கப்பலில் இந்த சின்ன தப்பை செஞ்சுட்டா எல்லாம் போச்சு... வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிரும்

இதற்கும் 'ரெஸ்பான்ஸ்' இல்லை என்றால், உல்லாச கப்பலின் பாதுகாப்பு அதிகாரிகள் உங்கள் அறைக்கு செல்வார்கள். அங்கு நீங்கள் இருக்கிறீர்களா? என பரிசோதனை செய்யப்படும். அங்கும் நீங்கள் இல்லை என்றால், உங்களின் பாஸ்போர்ட் தேடப்படும். உங்களின் பாஸ்போர்ட்டை தேடி எடுப்பதற்கு உல்லாச கப்பலின் 'மாஸ்டர் கீ' பாதுகாப்பான முறையில் பயன்படுத்தப்படும்.

ஒரு செகண்ட்தான்! உல்லாச கப்பலில் இந்த சின்ன தப்பை செஞ்சுட்டா எல்லாம் போச்சு... வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிரும்

ஒருவேளை உங்கள் பாஸ்போர்ட்டை கண்டறிய முடியாவிட்டால், பாஸ்போர்ட் உங்கள் கையில் இருப்பதாக உல்லாச கப்பலின் பாதுகாப்பு அதிகாரிகள் கருதி கொள்வார்கள். மாறாக பாஸ்போர்ட் கண்டறியப்பட்டால், கப்பல் ஏஜென்ட்டிடம் அதனை வழங்கி விடுவார்கள். தாமதமாக வந்து உல்லாச கப்பலை தவற விடுபவர்களுக்கு உதவி செய்வதற்காக, துறைமுகங்களில் கப்பல் ஏஜெண்ட்கள் இருப்பார்கள்.

ஒரு செகண்ட்தான்! உல்லாச கப்பலில் இந்த சின்ன தப்பை செஞ்சுட்டா எல்லாம் போச்சு... வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிரும்

அவர்களிடம்தான் உங்கள் பாஸ்போர்ட் ஒப்படைக்கப்படும். பாஸ்போர்ட் மட்டுமல்லாது, மிகவும் முக்கியமான அரசு ஆவணங்கள் மற்றும் மருந்துகள் என அவசர தேவைக்கு பயன்படும் உங்கள் உடைமைகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விடும். அவர்களிடம் இருந்து உங்களின் முக்கியமான உடைமைகளை நீங்கள் பெற்று கொள்ளலாம்.

ஒரு செகண்ட்தான்! உல்லாச கப்பலில் இந்த சின்ன தப்பை செஞ்சுட்டா எல்லாம் போச்சு... வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிரும்

பாஸ்போர்ட் உள்பட உங்கள் உடைமைகள் அனைத்தையும் பெற்று கொண்ட பின்னர், உல்லாச கப்பல் அடுத்து செல்லும் துறைமுகத்திற்கு சென்றால், நீங்கள் அதில் ஏறி கொள்ளலாம். அல்லது வீடு திரும்பவும் செய்யலாம். இது உங்கள் விருப்பம். இந்த இரண்டில் எந்த முடிவை நீங்கள் எடுத்தாலும், விமானத்தில் செல்வதற்கு பாஸ்போர்ட் தேவைப்படலாம்.

ஒரு செகண்ட்தான்! உல்லாச கப்பலில் இந்த சின்ன தப்பை செஞ்சுட்டா எல்லாம் போச்சு... வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிரும்

எனவேதான் பாஸ்போர்ட்டிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஆனால் விமான டிக்கெட் உள்ளிட்ட பயணம் தொடர்பான அனைத்து செலவுகளுக்கும் நீங்கள்தான் முழு பொறுப்பு. விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல்களை முன்பதிவு செய்வதற்கு வேண்டுமானால், கப்பல் ஏஜெண்ட்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். ஆனால் அதற்கான செலவுகள் உங்களுடையதுதான்.

ஒரு செகண்ட்தான்! உல்லாச கப்பலில் இந்த சின்ன தப்பை செஞ்சுட்டா எல்லாம் போச்சு... வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிரும்

திடீரென உல்லாச கப்பலின் அடுத்த துறைமுகத்திற்கு செல்வது அல்லது வீடு திரும்புவது என எந்த முடிவை நீங்கள் எடுத்தாலும், பெரும் தொகையை செலவழிக்க வேண்டியிருக்கும். ஏனெனில் கடைசி நேரத்தில் சர்வதேச விமானங்களின் டிக்கெட் கட்டணம் மிகவும் அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில் பணம் இல்லாவிட்டால் நிலைமை இன்னும் சிக்கலாகி விடும்.

ஒரு செகண்ட்தான்! உல்லாச கப்பலில் இந்த சின்ன தப்பை செஞ்சுட்டா எல்லாம் போச்சு... வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிரும்

ஒருவேளை பாதியிலேயே பயணத்தை முடித்து கொண்டு வீடு திரும்புவது என நீங்கள் முடிவெடுத்து விட்டால், உல்லாச கப்பலில் எஞ்சியிருக்கும் உங்களின் மற்ற உடைமைகளை பெற்று கொள்வதற்கு, உல்லாச கப்பல் நிறுவனத்திற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும். அப்போதுதான் உங்களின் மற்ற உடைமைகளை உங்களின் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள்.

ஒரு செகண்ட்தான்! உல்லாச கப்பலில் இந்த சின்ன தப்பை செஞ்சுட்டா எல்லாம் போச்சு... வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிரும்

பாஸ்போர்ட், அரசு ஆவணங்கள் மற்றும் மருந்துகள் போன்ற மிகவும் முக்கியமான உடைமைகளை மட்டுமே உல்லாச கப்பல் அதிகாரிகள், கப்பல் ஏஜெண்ட்டிடம் வழங்கியிருப்பார்கள். மற்ற உடைமைகள் அனைத்தும் உல்லாச கப்பலில்தான் இருக்கும். அதேபோல் நீங்கள் பயணத்தை பாதியிலேயே முடித்து கொள்வதால், எஞ்சிய நாட்களுக்கான பணம் திரும்ப கிடைக்காது.

ஒரு செகண்ட்தான்! உல்லாச கப்பலில் இந்த சின்ன தப்பை செஞ்சுட்டா எல்லாம் போச்சு... வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிரும்

உதாரணத்திற்கு 15 நாட்கள் உல்லாச கப்பல் பயணத்திற்கு நீங்கள் பணம் கட்டியிருக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். ஒருவேளை 10வது நாளில் நீங்கள் தாமதம் காரணமாக உல்லாச கப்பலை 'மிஸ்' செய்து விட்டு, வீடு திரும்புவது என முடிவு எடுத்தால், எஞ்சிய நாட்களுக்கான பணத்தை உல்லாச கப்பல் நிறுவனம் உங்களுக்கு திரும்ப வழங்காது.

ஒரு செகண்ட்தான்! உல்லாச கப்பலில் இந்த சின்ன தப்பை செஞ்சுட்டா எல்லாம் போச்சு... வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிரும்

ஒருவேளை உல்லாச கப்பல் அதிகாரிகள், துறைமுகத்தில் இருக்க கூடிய கப்பல் ஏஜெண்ட்டிடம் உங்களுடைய பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவில்லை என்றால் நீங்கள் உங்கள் சொந்த நாட்டின் தூதரகத்தின் உதவியைதான் நாட வேண்டும். உல்லாச கப்பல் அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட்டை கிடைக்கவில்லை என்றாலும், உங்களின் கையில் பாஸ்போர்ட் இல்லை என்றாலும், இவ்வாறான சூழல் ஏற்படலாம்.

ஒரு செகண்ட்தான்! உல்லாச கப்பலில் இந்த சின்ன தப்பை செஞ்சுட்டா எல்லாம் போச்சு... வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிரும்

எனவே உல்லாச கப்பல் பயணத்தை பொறுத்தவரையில், தெரியாமல் செய்யும் ஒரு வினாடி தாமதம் கூட, மிக கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும். இதனால் உல்லாச கப்பலில் பயணம் செய்யும்போது, எக்காரணத்தை கொண்டும் அதனை தவற விட்டு விடாதீர்கள். இந்த தவறை செய்தால், கையில் பணம் இல்லாமல் வேறு ஒரு நாட்டில் தவிக்கும் சூழலை சந்திக்க நேரிடும்.

ஒரு செகண்ட்தான்! உல்லாச கப்பலில் இந்த சின்ன தப்பை செஞ்சுட்டா எல்லாம் போச்சு... வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிரும்

வசதி படைத்தவர்களாக இருந்தால், இந்த பிரச்னைகளை எதிர்கொண்டு விடுவார்கள். ஆனால் வாழ்க்கையில் ஒரு முறையாவது உல்லாச கப்பலில் பயணித்து விட வேண்டும் என்ற கனவுடன், சிறுக சிறுக பணம் சேர்த்தோ அல்லது கிரெடிட் கார்டு கடன் மூலமாகவோ செல்லும் நடுத்தர வர்க்க மக்கள், உல்லாச கப்பலை தவற விட்டு விட்டால், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மிகவும் பெரியதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, July 29, 2022, 21:02 [IST]
English summary
What to do if you miss your cruise ship
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+