தொலைந்துபோன ரயில் டிக்கெட்டை டூப்ளிகேட் வாங்க முடியுமா?.. சூப்பரான வசதியை உருவாக்கியிருக்கும் ஐஆர்சிடிசி!

ஐஆர்சிடிசி தனது பயணிகளுக்கு சௌகரியமான பயணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக பலவிதமான சேவைகளைத் தொடங்கி வருகின்றது. அந்தவகையில், தொலைந்துபோன ரயில் டிக்கெட்டின் டூப்ளிகேட்டை பெறும் வசதியைத் தற்போது தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நாளைக்கு டிரெயினுங்க இப்போ போயி டிக்கெட்ட தொலைச்சுட்டேன்... இதை டூப்ளிகேட் பெற முடியுமா?

ஓர் பொருளை தொலைப்பது என்பது மிகவும் சாதாரணமான ஒன்று. ஆனால், நாம் தொலைக்கும் பொருளை வைத்தே அதை சாதாரணமானதாக எடுத்துக் கொள்வதா, இல்ல ரொம்ப சீரியஸானதா எடுத்துக் கொள்வதா என்பது அமையும். உதாரணமாக, ஒரு ரூபா தொலைச்சுட்டோம்னு வச்சுக்கோங்க, தொலைச்சதே நம்மில் பலருக்கு தெரியாது. அதுவே, ஓர் 500 ரூபா தாளை தொலைச்சுட்டோம்னு வச்சுக்கோங்க அந்த நாளே அப்சட்டாகிவிடும்.

நாளைக்கு டிரெயினுங்க இப்போ போயி டிக்கெட்ட தொலைச்சுட்டேன்... இதை டூப்ளிகேட் பெற முடியுமா?

இதை எல்லாம்கூட விட்டுவிடலாம்னு வச்சுக்கோங்க, ஏதாவது முக்கிய ஆவணம் தொலஞ்சு வச்சுக்கோங்க அவ்ளோதான், இதனால ஏற்படக் கூடிய தலைவலி எப்போ போகும்னே தெரியாது. இந்த மாதிரி ஓர் தலைவலி தன்னுடைய பயணிகள் எந்த நிலையிலும் சந்திக்கக் கூடாது என்பதற்காக புதிய திட்டத்தை இந்தியன் ரயில்வேஸ் தொடங்கி வைத்திருக்கின்றது.

நாளைக்கு டிரெயினுங்க இப்போ போயி டிக்கெட்ட தொலைச்சுட்டேன்... இதை டூப்ளிகேட் பெற முடியுமா?

அதாவது, தொலைந்து போகும் ரயில் டிக்கெட்டை டூப்ளிகேட் பெறும் வசதியைத் தொடங்கியிருக்கின்றது. கட்டணத்தின் வாயிலாக ஐஆர்சிடிசி பயனர்களால் தொலைந்துபோன டிக்கெட்டின் டூப்ளிகேட்டைப் பெற்றுக் கொள்ள முடியும். தொலைந்துபோன டிக்கெட் உறுதி செய்யப்பட்டது அல்லது ஆர்ஏசி டிக்கெட் எதுவாக இருந்தாலும் டூப்ளிகேட் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

நாளைக்கு டிரெயினுங்க இப்போ போயி டிக்கெட்ட தொலைச்சுட்டேன்... இதை டூப்ளிகேட் பெற முடியுமா?

செகண்ட் கிளாஸ் மற்றும் ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட்டுகளுக்கு ரூ. 50ம், பிற வகுப்பு டிக்கெட்டுகளுக்கு ரூ. 100-ம் டூப்ளிகேட் டிக்கெட் பெற கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. கன்ஃபார்மான டிக்கெட்டின் டூப்ளிகேட்டை கடைசி நிமிடத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது, ரிசர்வேசன் சார்ட் தயார் செய்யப்பட்ட பின்னரும் டூப்ளிகேட் டிக்கெட்டை பெற்றுக் கொள்ள முடியும்.

நாளைக்கு டிரெயினுங்க இப்போ போயி டிக்கெட்ட தொலைச்சுட்டேன்... இதை டூப்ளிகேட் பெற முடியுமா?

ஆனால், இதற்கு ரயில் பயணத்திற்கான பாதியளவு (50 சதவீத) கட்டணம் வசூலிக்கப்படும். இந்த நிலையில் டூப்ளிகேட் டிக்கெட்டை பெற போகிறீர்கள் எனில் இன்னும் சில விஷயங்களையும் நீங்க நினைவுல வச்சிருக்க வேண்டியிருக்கு.

நாளைக்கு டிரெயினுங்க இப்போ போயி டிக்கெட்ட தொலைச்சுட்டேன்... இதை டூப்ளிகேட் பெற முடியுமா?

அவை என்ன, இதோ:

ஆர்ஏசி டிக்கெட் சேதமடைந்து அல்லது கிழிந்து இருந்தால் 25 சதவீதம் கட்டணம் செலுத்தி டூப்ளிகேட் டிக்கெட்டைப் பெற வேண்டியிருக்கும். ஆனால், சார்ட் வேலைகள் அனைத்தும் முடிவடைந்த பின்னரே ஆர்ஏசி டிக்கெட்டின் டூப்ளிகேட்டை பெற முடியும்.

நாளைக்கு டிரெயினுங்க இப்போ போயி டிக்கெட்ட தொலைச்சுட்டேன்... இதை டூப்ளிகேட் பெற முடியுமா?

வெயிட்டிங் லிஸ்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும் டிக்கெட்டை டூப்ளிகேட் பெற முடியாது என இந்தியன் ரயில்வேஸ் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. தொலைந்து போனாலும் சரி, சேதமடைந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் இந்த டிக்கெட்டிற்கு டூப்ளிகேட் கிடையாது.

நாளைக்கு டிரெயினுங்க இப்போ போயி டிக்கெட்ட தொலைச்சுட்டேன்... இதை டூப்ளிகேட் பெற முடியுமா?

கிழிந்த அல்லது சேதமடைந்த டிக்கெட்டில் உள்ள தகவல்கள் தெளிவாக தெரியும் எனில் அதனை ரீஃபண்டிற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் இந்தியன் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொலைந்த ஆர்ஏசி டிக்கெட்டுகளை சார்ட் ப்ரிபேர் செய்த பின்னர் டூப்ளிகேட் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைக்கு டிரெயினுங்க இப்போ போயி டிக்கெட்ட தொலைச்சுட்டேன்... இதை டூப்ளிகேட் பெற முடியுமா?

கடைசி நேரத்துல ஒரிஜினல் டிக்கெட் கிடைச்சுட்டா என்ன செய்யுறது. இதுக்கு ஓர் சிறப்பு வழியை ஐஆர்டிசி ஏற்படுத்தியிருக்கின்றது. ஒரு வேலை நாம் தொலைத்த ஒரிஜினல் டிக்கெட் கடைசி நேரத்தில் மீண்டும் நம் கைகளுக்கு வந்து சேர்ந்தால், அதையும், நாம் இரண்டாவதாக எடுத்த டூப்ளிகேட் டிக்கெட்டையும் ரயில் நிலையங்களில் காண்பிக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் நாம் டூப்ளிகேட்டிற்கு செலுத்திய கட்டணம் திரும்பி தரப்படும். அதேவேலையில், 5 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்பட்டே வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ. 20 வரை கழிக்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 12, 2022, 17:58 [IST]
English summary
What to do lost train ticket
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+