இ-20 பெட்ரோலுக்கு மாறும் இந்தியா! பழைய வண்டிகளை வைத்திருப்பவர்கள் கலக்கம்! இது போட்டா ஓடுமா? ஓடாதா
இந்தியாவில் இ20 பெட்ரோல் அறிமுகமாகி வரும் நிலையில் பழைய வாகனங்களில் இ20 பெட்ரோல் போட்டால் என்னவாகும் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. இ20 பெட்ரோலை ஏற்கும் இன்ஜின்களுடன் தற்போது வாகனங்கள் அறிமுகமாகி வரும் நிலையில் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 1ம்தேதி முதல் பிஎஸ் 6 மாசு கட்டுப்பாட்டின் 2ம் கட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அதன்படிமாசு வை குறைக்க அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பெட்ரோலில் எத்தனாலை கலக்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தியா இ20 என்ற 20 சதவீத எத்தனால் கலப்பு பெட்ரோலை விநியோகம் செய்வதை இலக்காக கொண்டுள்ளது.

இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் இ-20 பெட்ரோலை ஏற்கும் வகையிலான இன்ஜின் கொண்ட வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் எதிர்காலத்தில் இ20 வகை பெட்ரோல் மட்டுமே விற்பனையாகும் நிலை ஏற்பட்டால் பழைய வாகனங்களுக்கு இ20 வகை பெட்ரோல்களை பயன்படுத்தலாமா என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது.
அதை பற்றி தெரிந்து கொள்ளும் முன்பு நாம் இ20 பெட்ரோல் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சாதாரணமான பெட்ரோலுடன் எத்தானலை 20 சதவீதம் கலப்பது தான இ20 வகை பெட்ரோல் எத்தனாலும் பெட்ரோல் போல ஒரு எரிபொருள் தான் என்பதால் அதை கலப்பது பெட்ரோலின் தரத்தை குறைக்காது. அதே நேரம் இந்த இ20 பெட்ரோலை பயன்படுத்துவதால் ஏகப்பட்ட பலன்கள் இருக்கிறது.

இ20 வகை பெட்ரோல் சாதாரண பெட்ரோலை விட குறைவான மாசுவையே வெளியேற்றும் அதே நேரம் இந்தியாவில் பெட்ரோலுக்கான தேவையும் குறையும். இந்தியா தற்போது பெட்ரோலுக்காக வெளிநாடுகளையே சார்ந்து இருக்கிறது. இதனால் இதன் தேவையை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இ20 பெட்ரோல் என்றால் 1 லிட்டரில் 200 மில்லி எத்தனால் தான் இருக்கும்.
தற்போது இ10 என்ற 10சதவீத எத்தனால் கலப்பை இந்தியா எட்டி பிடித்து விட்டது. இதன் மூலமே இந்தியாவிற்கு ஆண்டிற்கு ரூ50 ஆயிரம் கோடி மிச்சமாகியுள்ளதாக பிரதமர் மோடி ஒரு கூட்டத்தில் பேசும் போது கூறியுள்ளார். விரைவில் அடுத்த 10 சதவீதத்தையும் இந்தியா எட்டிபிடித்துவிடும். எத்தனால் கலப்பு என்பது சுலபமான காரியம் அல்ல அதை செய்ய அதிக நேரம் எடுக்கும்.
இந்த எத்தனாலை பழைய வாகனங்களில் ஊற்றினால் என்னவாகும் என்ற சந்தேகத்திற்கு எதுவும் ஆகாது என்பது தான் பதில் பொதுவாக பழைய வாகனங்கள் எல்லாம் இ10 பெட்ரோலுக்கு ஏற்றது தான், இ20 பெட்ரோலை, பழைய வாகனங்களில் போட்டால் பழைய வாகனம் தற்போது தரும் மைலேஜ் சிறிதளவு பாதிக்கப்படும் 6-7 சதவீதம் வரை மைலேஜ் குறையும் என கூறப்படுகிறது.
அது மட்டுமல்ல உங்கள் வாகனத்தின் இன்ஜின் தேய்மானம் வழக்கத்தை விட தொடர்ந்து இ20 பெட்ரோலை தொடர்ந்து பயன்படுத்தினால் 10 சதவீதம் தேய்மானம் அதிகமாகும் என கூறப்படுகிறது. ஆனால் இதற்கான அறிவியல் ஆய்வுகள் எதுவும் இல்லை. ஆனால் பயன்பாட்டில் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இருக்காது. நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீங்கள் தொடர்ந்து இ20 பெட்ரோலை சாதாரண இன்ஜினில் பயன்படுத்தலாம். பெரிய அளவில் எந்த பிரச்சனையும் இல்லை. புதிய வாகனங்கள் பெரும்பாலும் இ20 பெட்ரோலை ஏற்றுக்கொள்ளக்கூடிய இன்ஜினாகவே வருகிறது அதனால் எதிர்காலத்தில் மாசு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








