சைக்கிள் மட்டும் தான் ஓட்ட முடியுமா? இனி டிடிஎஃப் வாசன் பைக் ஓட்டினால் என்னவாகும் தெரியுமா?
பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் லைசென்ஸ் 10 ஆண்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இவர் இனி பைக் ஓட்டவே முடியாதா டிடிஎஃப் வாசல் யூடியூப் சேனலை இழுத்து மூடுவதை தவிர வேற வழியில்லையா இப்படியாக பலர் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த லைசென்ஸ் ரத்துக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை தான் இங்கு விரிவாக காணப்போகிறோம்.
பிரபல யூட்யூபராக வலம் வந்து கொண்டிருந்த டிடிஎஃப் வாசன் கடந்த மாதம் 15ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் பாலு செட்டி சத்திரம் பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார். அவர் சாலையில் வேலை செய்யும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களின் வைரலாக பரவியது.

இந்நிலையில் இந்த விபத்துக்கு குறித்த வழக்கில் டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கோர்ட் அவருக்கு ஜாமீன் தர மறுத்து விட்டது. இந்நிலையில் இன்று காலை டிடிஎஃப் வாசனை லைசென்ஸை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் போக்குவரத்து துறை அலுவலர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் மக்கள் மத்தியில் டிடிஎஃப் வாசனால் வாகனம் ஓட்டவே முடியாதா? அவர் இனி எப்படி பைக் ஓட்டி வீடியோ போடுவார்? இனி அவர் லைசென்ஸ் பெற என்ன செய்ய வேண்டும்? இப்படியான பல கேள்விகள் எழுந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை தெளிவாக காண்போம்.

தற்போது டிடிஎஃப் வாசனின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது குறித்து காஞ்சிபுரம் போக்குவரத்து துறை அலுவலரின் அறிக்கையில் டிடிஎஃப் வாசனின் லைசென்ஸ் எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை நாம் தேடி பார்க்கும் போது டிடிஎப் வாசன் இந்த லைசன்ஸ் டூவீலருக்கான லைசன்ஸாக மட்டுமே எடுத்திருந்தார். அதாவது கியர் வைத்த மோட்டார் சைக்கிளுக்கான லைசென்ஸ் அது.
இதனால் எதிர்காலத்தில் டிடிஎஃப் வாசன் நான்கு சக்கர வாகனத்திற்கான லைசென்ஸ் விண்ணப்பித்து பெற்றால் அவரால் பைக் இல்லாமல் கார் ஓட்ட முடியும். ஆனால் அந்த லைசென்ஸ் பெறுவதற்காக ஏதாவது தடை இருக்கிறதா? ஆர்டிஓ அலுவலகத்தில் அவருக்கான லைசென்ஸ் வழங்கப்படுமா என்பது சந்தேகம் தான். அதேநேரம் தற்போது காஞ்சிபுரம் போக்குவரத்து துறை அலுவலர் ரத்து செய்துள்ளது டிடிஎஃப் வாசனின் இந்திய லைசென்ஸ் தான்.
டிடிஎஃப் வாசன் தேவைப்பட்டால் வெளிநாட்டிற்கு சென்று அங்கு மீண்டும் லைசென்ஸ் அப்ளை செய்து அந்த நாட்டில் பைக்குகளை ஓட்டலாம் வெளிநாடுகளில் இவருக்கு லைசென்ஸ் வழங்குவது என்பது அந்நாட்டு அரசு எடுக்கும் முடிவு தான். ஆனால் இந்தியாவிற்குள் அவர் மீண்டும் பைப்க் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்றால் அவர் இனி மேல் முறையீடு தான் செய்ய வேண்டும்.
இவர் லைசென்சை ரத்து செய்து வெளியான அறிவிப்பிலேயே இது குறித்து மேல்முறையீட்டை சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து துறை இணை கமிஷனரிடம் மேல்முறையீடு செய்யலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி மேல்முறையீடு செய்தால் அதன்பின் விசாரணை நடத்தப்பட்டு இந்த சஸ்பென்ஷனை ரத்து செய்யலாம்.
இப்படியாக டிடிஎப் வாசனின் லைசென்ஸ் மீதான சஸ்பென்ஷன் ரத்து செய்யப்பட்டால் அவரால் மீண்டும் இந்த லைசென்ஸ் வைத்து இந்தியாவின் பைக்குகளை ஓட்ட முடியும். இல்லை என்றால் அவரால் இந்தியாவிற்குள் பைக் ஓட்ட முடியாது. இவர் பைக்கில் பயணித்தபடி இனி வீடியோ வெளியிட்டால் இவர் மீது லைசென்ஸ் இல்லாமல் வாகன ஓட்டி அதற்காக நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலையில் செல்லும்போது மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை பின்பற்றி வாகனம் ஓட்டுவது மிக அவசியமான ஒன்றாகும். மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை மீறிவது குற்றம் என்றாலும் இப்படியாக தொடர்ந்து மீறுவதும், அதை ஹீரோயின்சமாக பொதுவெளியில் காட்டிக் கொள்வதும் அடுத்த இளைய தலைமுறையை இந்த தவறை செய்ய தூண்டும் அதனால் இப்படியான செயல்களில் ஈடுபடும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது வரவேற்கப்பட வேண்டியது தான்!


Click it and Unblock the Notifications








