உலகின் காஸ்ட்லி மோட்டார் இல்லத்தை முகேஷ் அம்பானி வாங்கியதாக பரபரப்பு!

Written By:

உலகின் காஸ்ட்லி மோட்டார் இல்லமான எலிமண்ட் பலாஸோவை இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி வாங்கியதாக ஒரு பரபரப்பு தகவல் வாட்ஸ்அப் மூலமாக பரவி வருகிறது.

கடந்த ஆண்டு இந்த மோட்டார் இல்லம் துபாயில் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அந்த மோட்டார் இல்லம் முகேஷ் அம்பானிக்காக கட்டப்பட்டதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

விலை

விலை

ரூ.25 கோடி மதிப்பீட்டில் அந்த மோட்டார் இல்லத்தை முகேஷ் அம்பானி வாங்கியிருப்பதாக அந்த தகவல் கூறுகிறது.

 பெரும் மதிப்பு

பெரும் மதிப்பு

இந்த மோட்டார் இல்லத்தின் சுவர்களில் தங்க முலாம் அதிகம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிக விலை கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 மல்டி ஆக்ஸில்

மல்டி ஆக்ஸில்

இந்த பிரம்மாண்ட மோட்டார் இல்லம் மல்டி ஆக்சில் கொண்ட வாகனத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதனால், உட்புறத்தில் தாரள இடவசதியை அளிக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த நடமாடும் இல்லத்தில் 530 பிஎச்பி திறனை அளிக்க வல்ல எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், இந்த வாகனத்தில் ஜெனரேட்டர் மூலம் மின் உற்பத்தி செய்யும் வசதியும் உள்ளது.

ஆடம்பர வசதிகள்

ஆடம்பர வசதிகள்

தானியங்கி முறையில் திறக்கும் பார், லாஞ்ச் பகுதி, மாஸ்டர் பெட்ரூம் என அனைத்து வசதிகளும் இருக்கும். மேலும், இந்த மோட்டார் இல்லத்தில் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப கூடுதல் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

அலுவலக பயன்பாடு

அலுவலக பயன்பாடு

கூட்ட அறை, மஸாஜ் வசதிகள் என இதிலும் வசதிகள் ஏராளம். உலகின் மிக சொகுசான நடமாடும் அலுவலகமாக கூறப்படுகிறது.

தொடர்பு வசதிகள்

தொடர்பு வசதிகள்

இந்த மோட்டார் இல்லத்தை 22 விநாடிகளில் குளிர்ச்சியாகவும், அதேபோன்று வெப்பப்படுத்திக் கொள்ளும் வசதியும் உள்ளது. ப்ளாட் ஸ்கிரீன் டெலிவிஷன், மொபைல் இன்டர்நெட், கண்காணிப்பு கேமரா உள்பட ஏராளமான வசதிகளை இந்த மோட்டார் இல்லம் கொண்டிருக்கிறது.

தயாரிப்பு நிறுவனம்

தயாரிப்பு நிறுவனம்

ஆஸ்திரியாவை சேர்ந்த மார்சி மொபைல் நிறுவனம் இந்த மோட்டார் இல்லத்தை தயாரித்தது.

 வாட்ஸ்அப் வதந்தீ?

வாட்ஸ்அப் வதந்தீ?

இந்த மோட்டார் இல்லம் துபாயை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக, ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது முகேஷ் அம்பானி இந்த மோட்டார் இல்லத்தை வாங்கியிருப்பதாக, வாட்ஸ்அப்.,பில் பலராலும் பகிரப்படும் இந்த தகவல் வதந்தீயாகவே இருக்கக்கூடும்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
According to reports, Mukesh Ambani has purchased world's costliest motor home Elemento Palazzo recently.
Story first published: Monday, June 15, 2015, 12:27 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark