சொந்த காசுலயே ரிப்பேர் பண்ணுங்க... இதுக்காக எல்லாம் இன்சூரன்ஸ் கிளைம் பண்ணா உங்களுக்குத் தான் நஷ்டம்

இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் எந்த எந்த விதமான சம்பவங்களுக்கு எல்லாம் இன்சூரன்ஸ் பணத்தை வாங்கலாம் என இருப்பது போல எந்த சம்பவங்களுக்காக எல்லாம் வாங்குவதைத் தவிர்க்கலாம் என்ற ஒரு விஷயமும் இருக்கிறது. இதற்காக அவர்கள் முழு பணத்தையும் தந்தாலும் அதை வாங்காமல் சொந்த காசில் செலவு செய்வது தான் லாபகரமானது.

சொந்த காசுலயே ரிப்பேர் பண்ணுங்க . . . இதுக்காக எல்லாம் இன்சூரன்ஸ் கிளைம் பண்ணா உங்களுக்குத் தான் நஷ்டம் . . .

சாலைகளில் விபத்து என்பது தவிர்க்க முடியாத ஒன்று. சாலையில் வாகனங்களில் செல்லும் போது அந்த வாகனம் விபத்தில் சிக்குவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. விபத்திற்கு இது தான் காரணம் என்று இல்லை. பல காரணங்களுக்காக விபத்துக்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது, சாலை விதிகளை மதிக்காதது, கவனக்குறைவு, தொழிற்நுட்ப கோளாறு ஆகிய காரணங்களுக்காக விபத்துக்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான விபத்துக்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

சொந்த காசுலயே ரிப்பேர் பண்ணுங்க . . . இதுக்காக எல்லாம் இன்சூரன்ஸ் கிளைம் பண்ணா உங்களுக்குத் தான் நஷ்டம் . . .

இப்படியாக விபத்து நடப்பது விபத்தில் பாதிக்கப்படும் நபர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடும். சிலருக்கு விபத்தில் உயிரிழப்பு ஏற்படலாம். சிலருக்கு கை கால்களை இழந்து ஊனமாகும் பிரச்சனை இருக்கலாம் இப்படியாக ஒவ்வொரு விபத்திற்குள் பின்னால் பல இழப்புகள் இருக்கும். இந்த இழப்புகளை எல்லாம் ஈடுசெய்யவே முடியாது. ஆனால் எல்லா விபத்துக்களுக்கும் பின்னாலும் பொருளாதார இழப்பு இருக்கும். இந்த பொருளாதார இழப்பு என்பது ஈடு செய்யக்கூடியது தான்.

சொந்த காசுலயே ரிப்பேர் பண்ணுங்க . . . இதுக்காக எல்லாம் இன்சூரன்ஸ் கிளைம் பண்ணா உங்களுக்குத் தான் நஷ்டம் . . .

இதனால் தான் வாகனத்திற்கு இன்சூரன்ஸ் என்பது கட்டாயம் என அரசால் சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. உங்கள் வாகனம் விபத்திற்குள்ளானால் அந்த விபத்தில் பாதிக்கப்படும் நபருக்குக் குறைந்தபட்ச பொருளாதார இழப்பையாவது ஈடு செய்ய வேண்டும் என்று இன்சூரன்ஸ் செயல்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு பிரிமியம் தொகையைச் செலுத்த வேண்டியது இருக்கும்.

சொந்த காசுலயே ரிப்பேர் பண்ணுங்க . . . இதுக்காக எல்லாம் இன்சூரன்ஸ் கிளைம் பண்ணா உங்களுக்குத் தான் நஷ்டம் . . .

இப்படியாக நாம் வாகனம் விபத்தில் சிக்கினால் அதைச் சரி செய்ய ஆகும் செலவையும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளும், இதற்காக நாம் தகுந்த ஆதாரத்துடன் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் விபத்து குறித்து தெரிவித்து அதற்கான நஷ்டத்தை ஈடுசெய்யச் சொல்லிக் கேட்கலாம். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

சொந்த காசுலயே ரிப்பேர் பண்ணுங்க . . . இதுக்காக எல்லாம் இன்சூரன்ஸ் கிளைம் பண்ணா உங்களுக்குத் தான் நஷ்டம் . . .

ஆனால் சில நேரங்களில் சில சம்பவங்களுக்காக இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகுவது என்பது நமக்கு நஷ்டத்தைத் தான் ஏற்படுத்தும், இதைச் செய்யாமல் இருப்பதே சிறந்தது. அப்படி எந்த எந்த நஷ்டத்திற்கு எல்லாம் இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கலாம் எனக் காணலாம் வாருங்கள்

சொந்த காசுலயே ரிப்பேர் பண்ணுங்க . . . இதுக்காக எல்லாம் இன்சூரன்ஸ் கிளைம் பண்ணா உங்களுக்குத் தான் நஷ்டம் . . .

சிறு சிறு விபத்துக்கள்

நீங்கள் சாலையில் செல்லும் போது காரில் ஏற்படும் சிற சிறு விபத்துக்களால் ஏற்படும் சிறிய டென்ட், ஸ்கிராட்ச், கண்ணாடி உடைவது போன்ற விஷயங்களுக்கு இன்சூரன்ஸ் பணத்தைக் கோருவது என்பது இன்சூரன்ஸில் கிளைம் ஹிஸ்ட்ரியை பாதிக்கும். அதிகமாக கிளைம் எடுத்தால், நீங்கள் காரை அபாயகரமாக ஓட்டுகிறீர்கள் என இன்சூரன்ஸ் நிறுவனம் கருதி உங்கள் காருக்கு இன்சூரன்ஸை புதுப்பிக்கும் போது பிரிமியம் அதிகமாக விதிக்ககூடும்.

சொந்த காசுலயே ரிப்பேர் பண்ணுங்க . . . இதுக்காக எல்லாம் இன்சூரன்ஸ் கிளைம் பண்ணா உங்களுக்குத் தான் நஷ்டம் . . .

நோ கிளைம் போனஸ் பாதிக்கப்படும்

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வாகனத்தின் இன்சூரன்ஸை புதுப்பிக்கும் போது கிளைம் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு, 50 சதவீதம் வரையில் பிரிமியத்தில் தள்ளுபடியை வழங்குகிறது. அதனால் நீங்கள் சிறிய சிறிய பணத்தை எல்லாம் இன்சூரன்ஸில் கிளைம் செய்தால் உங்களுக்கு பாலிசியை புதுப்பிக்கும் போது அதற்கான போனஸ் கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது. அதனால் சிறிய தொகைக்கு எல்லாம் இன்சூரன்ஸ் கிளைம் செய்யாமல் இருப்பது நல்லது

சொந்த காசுலயே ரிப்பேர் பண்ணுங்க . . . இதுக்காக எல்லாம் இன்சூரன்ஸ் கிளைம் பண்ணா உங்களுக்குத் தான் நஷ்டம் . . .

டிடெக்டபுள்

கார் இன்சூரன்ஸை பொருத்தவரை இரண்டு டிடெக்டபுள் டைப்கள் இருக்கிறது. ஒன்று வாலென்டரி மற்றொன்று கம்பல்சரி இதன்படி கிளைம் நடக்கும் போது IRDA 1500 சிசிக்கு குறைவான வாகனங்களுக்கு ரூ1500 மற்றும் 1500 சிசிக்கு அதிகமான வாகனங்களுக்கு ரூ2000 கட்டாயமாக டிடெக்ட் செய்யப்பட்டும்.

சொந்த காசுலயே ரிப்பேர் பண்ணுங்க . . . இதுக்காக எல்லாம் இன்சூரன்ஸ் கிளைம் பண்ணா உங்களுக்குத் தான் நஷ்டம் . . .

அதாவது இந்த பணத்தைக் காரை பயன்படுத்துபவர்கள் கையிலிருந்து கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. வாலென்டரி என்பது இப்படியாக கிளைம் நடக்கும் போது கார் உரிமையாளரே தான் கிளைம் செய்தால் அதில் இவ்வளவு பணத்தைத் தானே கட்டிவிடுகிறேன் என முன்பே அவராகவே முன்வந்து கம்பல்சரிக்கு அதிகமாக உள்ள தொகையைச் சொல்லுவது, இதில் வாலென்டரி டிடெக்டபுள்களுக்கு பிரிமியம் தொகை குறையும்.

சொந்த காசுலயே ரிப்பேர் பண்ணுங்க . . . இதுக்காக எல்லாம் இன்சூரன்ஸ் கிளைம் பண்ணா உங்களுக்குத் தான் நஷ்டம் . . .

இப்பொழுது நீங்கள் கிளைம் செய்யும் பணம் இந்த டிடெக்டபுள் தொகைக்கும் குறைவாக இருந்தால் இந்த பணத்தை கிளைம் செய்வதில் எந்த புண்ணியமும் இல்லை. இந்த தொகை உங்களுக்குக் கிடைக்கப்போவதுமில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

சொந்த காசுலயே ரிப்பேர் பண்ணுங்க . . . இதுக்காக எல்லாம் இன்சூரன்ஸ் கிளைம் பண்ணா உங்களுக்குத் தான் நஷ்டம் . . .

மூன்றாம் நபர் ரிப்பேர் காஸ்ட்

உங்கள் வாகனம் மூன்றாம் நபரால் சேதமாகிவிட்டால், அல்லது வேறு வாகன ஓட்டுநரின் கவனக்குறைவானால் சேதமாகிவிட்டால், அந்த சேதத்தைச் சரி செய்யவும் இன்சூரன்ஸ் கிளைம் பெற முடியும். ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையிலகளில் விபத்தை ஏற்படுத்தியவரே சொந்த செலவில் இதைச் செய்ய ஒப்புக்கொண்டால் அப்பொழுது நீங்கள் உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியை பயன்படுத்தி அதைச் சரி செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

சொந்த காசுலயே ரிப்பேர் பண்ணுங்க . . . இதுக்காக எல்லாம் இன்சூரன்ஸ் கிளைம் பண்ணா உங்களுக்குத் தான் நஷ்டம் . . .

கிளைம் போனஸ் விட ரிப்பேர் செலவு குறைவு

நாம் முன்பே சொன்னது போல ஒருவர் கிளைம் செய்வது அவருக்கான இன்சூரன்ஸை புதுப்பிக்கும் போது கிடைக்கும் கிளைம் போனஸை பாதிக்கும். பிரிமியம் தொகையில் 50 சதவீதம் வரை கிளைம் போனஸ் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி என்றால் உங்கள் வாகனத்திற்கு கிளைம் போனஸ் எவ்வளவு பணம் கிடைக்குமோ அதை விடக் குறைவான பணத்திற்குத் தான் ரிப்பேர் செலவு இருந்தால் அதை உங்கள் கையிலிருந்து செலவு செய்துவிட்டு கிளைம் போனஸை பெறுவது தான் லாபகரமானது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 22, 2022, 12:28 [IST]
English summary
When you should avoid making insurance claims for your vehicles
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+