கீழே குதிக்கும்போது இறக்கை ஜஸ்ட் மிஸ்! உயிர் தப்பியவர் அமர்ந்த இருக்கையில் மட்டும் அமரவே கூடாது!!

ஏர் இந்தியா (Air India) விமான விபத்துக்கு பின் பலருக்கு விமானத்தில் பயணம் செய்யவே ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது. அகமதாபாத்தில் நடந்துள்ள இவ்வளவு பெரிய விமான விபத்தில் இருந்தும் ஒருவர் உயிர்தப்பி உள்ளார் என்றவுடன், விமானத்தில் எந்த இடத்தில் எந்த இருக்கையில் அமர்ந்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என மக்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால், விமான பயணங்கள் அந்த அளவிற்கு ஒன்றும் ஆபத்தானது கிடையாது. மற்ற சாலை விபத்துகள், இரயில் விபத்துகள் உடன் ஒப்பிடுகையில், விமான விபத்துகள் மிகவும் அரிதாகவே நடக்கின்றன. புள்ளி விபரங்களும் இதைதான் கூறுகின்றன.

அதாவது, அந்த அளவிற்கு விமானங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் கடந்த காலங்களில் இருந்து அதிகளவில் கொண்டுவரப்பட்டுள்ளன. விமானத்தில் பயணிக்கும்போது, வெளியே சுற்றிப் பார்க்க சிறந்த பகுதி விமானத்தின் முன்பகுதி என கூறுவார்கள். ஏனெனில், விமானத்தின் மூக்கு முனை ஓரிடத்தில் வந்து குவிவதால் ஜன்னல் வழியாக பார்க்கும்போது விசாலமான பார்வை கிடைக்கிறது.

plane crash survivor ramesh viswashkumar

இதனால்தான், அதிக டிக்கெட் கட்டணத்தை கொண்ட பிஸ்னஸ் கிளாஸ் பகுதி விமானத்தின் முன்பக்கத்தில் விமானிகளின் கேபினுக்கு பின்னால் வழங்கப்படுகிறது. ஆனால், பாதுகாப்பு என்று வரும்போது விமானத்தில் எது பாதுகாப்பான இருக்கை பகுதி என தெரியுமா? பின்பகுதி ஆகும். விமானம் மட்டுமில்லை, எந்தவொரு வாகனத்திலும் பின் வரிசை இருக்கைகள் தான் பாதுகாப்பானவை ஆகும். 'எங்கேயும் எப்போதும்' திரைப்படம் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

விமானத்தில் எந்த அளவிற்கு பின் நோக்கி செல்கிறீர்களோ அந்த அளவிற்கு விபத்தின்போது உயிர் தப்புவதற்கு வாய்ப்புள்ளது. அதேபோல், ஜன்னலுக்கு அருகே அமர்ந்தால் அவசர காலத்தில் எளிதில் கீழே குதித்து உயிர் தப்பிக்கலாம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஜன்னல் ஓர இருக்கைகளை காட்டிலும் விமானத்தின் மத்தியில் இருக்கும் இருக்கைகளில் அமர்வதுதான் பாதுகாப்பானது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஏனெனில், விபத்து சமயங்களில் ஜன்னல் ஓர இருக்கைகளில் அமரும் பயணிகள் மற்றும் அவர்களது தலைக்கு மேலாக வைக்கப்பட்ட பொருட்கள் மத்திய இருக்கைகளில் அமர்பவர்களின் மீது விழுந்து விபத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்க கூடும். அவசர காலத்தில் வெளியேறும் பகுதிக்கு அருகாமையில் அமர்வது நல்லதுதான், ஆனால் அந்த பகுதிக்கு மிகவும் அருகாமையில் அமர்வது ஆபத்தானது ஆகும்.

plane crash survivor seat location

அதாவது, விமானத்தின் இறக்கைகளுக்கு அருகில் வழங்கப்படும் அவசர கால வெளியேறும் பகுதிக்கு மிகவும் அருகாமையில் முதல் வரிசை இருக்கைகளில் அமர்பவர்களுக்கு விமானத்தின் இறக்கைகளில் இருந்து வரும் பலத்த காற்று அதிகமாக இருக்கும். நீங்கள் சீட் பெல்ட் அணியவில்லை என்றால், அந்த காற்று உங்களை இருக்கையில் இருந்து விமானத்திற்குள் தூக்கி வீச வாய்ப்புள்ளது.

அதுமட்டுமின்றி, அந்த பலத்த எதிர் காற்றுக்கு எதிராக முன்னோக்கி வந்து அவசர கால வெளியேறும் பகுதிக்கு வருவது சிரமமான காரியம் மற்றும் நேரம் எடுத்துக் கொள்ளும் காரியம் ஆகும். விமானம் விபத்தில் சிக்க போகும் அந்த கடைசி வினாடிகள் ஒவ்வொன்றும் தங்கத்திற்கு இணையானது ஆகும். தற்போது அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவர் எந்த இருக்கையில் அமர்ந்திருந்தவர் என்கிற கேள்வி இந்நேரம் உங்களுக்கு தோன்றியிருக்கும்.

plane crash survivor seat location

ரமேஷ் விஷ்வாஸ்குமார் என பெயர் கொண்ட அந்த பயணி, விமானத்தின் '11A' என்கிற இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். இந்த இருக்கை ஆனது பிஸ்னஸ் கிளாஸுக்கு சரியாக பின்னால், எக்கனாமி கிளாஸின் முதல் இருக்கையாக, அவசர கால வெளியேறும் பகுதிக்கு மிகவும் அருகாமையில் அமைந்துள்ளது. அதாவது, இதுவரை நாங்கள் மேலே கூறியே அனைத்து விஷயங்களுக்கும் முற்றிலும் நேர்மாறாக அமைந்தது இந்த '11A' இருக்கை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமானத்தின் இறக்கைகளில் இருந்து வரும் சத்தம் மற்றும் அவசர கால வெளியேறும் பகுதிக்கு அருகாமையில் அமைந்திருப்பதினாலேயே இந்த '11A' இருக்கையில் அடிக்கடி விமான பயணங்களை மேற்கொள்பவர்கள் அமர விரும்புவது இல்லை. ஆனால், இந்த நிலை ரமேஷ் விஷ்வாஸ்குமாரால் இனி மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலே நாங்கள் கூறிய விமானத்தின் பாதுகாப்பான இருக்கைக்கு முற்றிலும் நேர்மாறான இருக்கையில் அமர்ந்திருந்த போதும் ரமேஷ் விஷ்வாஸ்குமார் உயிர் பிழைத்து இருப்பது உண்மையில் மிகவும் ஆச்சிரியமான விஷயம்.

More from DriveSpark

Article Published On: Friday, June 13, 2025, 12:46 [IST]
English summary
Which is best seat in airplane why you should avoid 11a seat that used by ramesh viswashkumar
மேலும்... #plane #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X