அனைத்திலும் அமெரிக்காவின் ஆதிக்கம்... ஏர்பிளைனா? அல்லது ஏரோபிளைனா? அப்போ இவ்ளோ நாள் தப்பா அழைச்சினு இருக்கோமா!

விமானங்களை சிலர் ஏர் பிளைன் (Airplane) என கூறுவார்கள், சிலர் ஏரோ பிளைன் (Aeroplane) என கூறுவார்கள். உண்மையில் இந்த இரு வார்த்தைகளில் எது சரியானது? ஏன் விமானத்திற்கு ஆங்கிலத்தில் இவ்வாறு இரு வார்த்தைகள் உள்ளன? என்பது பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அனைத்திலும் அமெரிக்காவின் ஆதிக்கம்... ஏர்பிளைனா? அல்லது ஏரோபிளைனா? அப்போ இவ்ளோ நாள் தப்பா அழைச்சினு இருக்கோமா!

தோற்றத்திற்கு ஏற்ப விமானங்களை சுற்றிலும் ஏகப்பட்ட சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ஏர்பிளைன் & ஏரோபிளைன் வார்த்தைகளாகும். உண்மையில் இவை அமெரிக்கன் இங்கிலீஷ் மற்றும் பிரிட்டிஷ் இங்கிலீஷ் ஆகும். அதாவது ஏர்பிளைன் வார்த்தை ஆனது வட அமெரிக்காவில் இருந்தும், ஏரோ பிளைன் வார்த்தை ஆனது இங்கிலாந்து போன்ற பிரிட்டிஷ் நாட்டில் இருந்தும் தோன்றியவை ஆகும்.

அனைத்திலும் அமெரிக்காவின் ஆதிக்கம்... ஏர்பிளைனா? அல்லது ஏரோபிளைனா? அப்போ இவ்ளோ நாள் தப்பா அழைச்சினு இருக்கோமா!

எது சரியானது?

விமானத்தை ஆங்கிலந்தில் ஏர்பிளைன், ஏரோபிளைன் என இரு வார்த்தைகளிலும் அழைப்பது சரியானதே. பொதுவாகவே பிரிட்டிஷ்காரர்களின் ஆங்கிலந்தில் லத்தீன், கிரேக் மற்றும் பிரெஞ்சு போன்ற மொழிகளும் சற்று கலந்திருக்கும் என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏனெனில் பிரிட்டிஷ் இராஜ்ஜியத்திற்கு அருகாமையில் தான் பிரெஞ்சு, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

அனைத்திலும் அமெரிக்காவின் ஆதிக்கம்... ஏர்பிளைனா? அல்லது ஏரோபிளைனா? அப்போ இவ்ளோ நாள் தப்பா அழைச்சினு இருக்கோமா!

ஏரோபிளைன் வார்த்தையும் பிரிட்டிஷ்காரர்களுடன் அண்டை நாட்டினரும் பயன்படுத்த, பயன்படுத்த மருவி உருவான வார்த்தை ஆகும். பிரிட்டிஷ்காரர்களின் வருகையால், இந்தியாவிலும் அதனால்தான் ஏரோபிளைன் வார்த்தை ஆரம்பத்தில் இருந்து புழக்கத்தில் உள்ளது. அதுவே, அமெரிக்காவின் ஏர்பிளைன் ஆனது பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளின் உச்சரிப்பு வடிக்கட்டப்பட்ட வார்த்தை ஆகும்.

அனைத்திலும் அமெரிக்காவின் ஆதிக்கம்... ஏர்பிளைனா? அல்லது ஏரோபிளைனா? அப்போ இவ்ளோ நாள் தப்பா அழைச்சினு இருக்கோமா!

ஏர்பிளைன் & ஏரோபிளைன் வார்த்தைகளின் வரலாறு

நாம் இப்போதும் பயன்படுத்தும் பெரும்பான்மையான வார்த்தைகள் முந்தைய காலங்களில் இருந்தவையின் குறும் வடிவமே. உதாரணத்திற்கு, மாடர்ன் வார்த்தை என கூறப்பட்டாலும் ஏர்பிளைன் என கூட பலர் அழைப்பதில்லை, பிளைன் என்றே சுருக்கமாக கூறுகின்றனர்.

அனைத்திலும் அமெரிக்காவின் ஆதிக்கம்... ஏர்பிளைனா? அல்லது ஏரோபிளைனா? அப்போ இவ்ளோ நாள் தப்பா அழைச்சினு இருக்கோமா!

19ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு வார்த்தையான 'aéroplane'-இல் 'aéro' என்ற வார்த்தையும், கிரேக்க மொழியில் இருந்து 'planos' என்ற வார்த்தையும் எடுக்கப்பட்டு ஏரோபிளைன் என்ற வார்த்தை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. பிரெஞ்சு மொழியில் ஏரோ என்பதன் அர்த்தம் air-காற்று ஆகும். கிரேக்க மொழியில் பிளேனோஸ் என்பதன் அர்த்தம் அதிசயம் ஆகும். அதாவது இவை இரண்டையும் சேர்த்து 'காற்று அதிசயம்' என பெயர் வைத்தனர்.

அனைத்திலும் அமெரிக்காவின் ஆதிக்கம்... ஏர்பிளைனா? அல்லது ஏரோபிளைனா? அப்போ இவ்ளோ நாள் தப்பா அழைச்சினு இருக்கோமா!

ஏர்பிளைன் வார்த்தை எப்போது வந்தது?

பழமையான அமெரிக்க புத்தக நிறுவனம் ஒன்று, "ஏர்பிளைன்" என்கிற வார்த்தை 1906இல் இருந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கிறது. அதாவது ஏரோபிளைன் வார்த்தையில் இருந்துதான் ஏர்பிளைன் வார்த்தை பெறப்பட்டுள்ளது.

அனைத்திலும் அமெரிக்காவின் ஆதிக்கம்... ஏர்பிளைனா? அல்லது ஏரோபிளைனா? அப்போ இவ்ளோ நாள் தப்பா அழைச்சினு இருக்கோமா!

ஆனால் உண்மையில் 1906-இல் இருந்து மூன்று வருடங்களுக்கு பிறகே வ்ரைட் சகோதரர்கள் பறக்கும் இயந்திர நுட்பங்களின் உதவியுடன் முதல் விமானத்தில் வெற்றிக்கரமாக வானில் பறந்தனர். அதுவும் சிறு தொலைவிற்கு மட்டுமே. அட்லாண்டிக் பெருங்கடலை கடக்கும் அளவிற்கு விமானத்தை உருவாக்க இன்னும் 20 வருடங்கள் பிடித்தது.

அனைத்திலும் அமெரிக்காவின் ஆதிக்கம்... ஏர்பிளைனா? அல்லது ஏரோபிளைனா? அப்போ இவ்ளோ நாள் தப்பா அழைச்சினு இருக்கோமா!

ஏரோபிளைனில் இருந்து ஏர்பிளைன் வார்த்தைக்கு மாற்றம்

ஏற்கனவே கூறியதுபோல், காலத்திற்கும், தலைமுறையினருக்கும் ஏற்ப ஒவ்வொரு வார்த்தையும் பரிணாம மாற்றத்தை காண்கிறது. இவ்வாறுதான் ஏரோபிளைன் ஏர்பிளைன் என மாற்றம் கண்டது. குறிப்பாக, அமெரிக்கர்களுக்கு ஏரோபிளைனை காட்டிலும் ஏர்பிளைன் வார்த்தையே உச்சரிப்பதற்கு எளியதாக இருந்தது.

அனைத்திலும் அமெரிக்காவின் ஆதிக்கம்... ஏர்பிளைனா? அல்லது ஏரோபிளைனா? அப்போ இவ்ளோ நாள் தப்பா அழைச்சினு இருக்கோமா!

நாளடைவில் ஏர்பிளைன் வார்த்தை உலகம் முழுவதும் பரவ, பல்வேறு விமான நிறுவனங்களால் இந்த வார்த்தை அங்கீகரிக்கப்பட்டது. இவ்வளவு ஏன் பிரிட்டிஷ் நாட்டில் உள்ள பிரிட்டிஷ் ஒலிப்பரப்பு நிறுவனத்தாலும் கூட பின்னர் காலத்தில் ஏர்பிளைன் வார்த்தை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு ஏர்பிளைன் வார்த்தை பிரதான அலுவலக வார்த்தையாக மாறியுள்ளது என்றாலும், ஏரோபிளைன் வார்த்தையும் நமது இந்தியா உள்பட சில நாடுகளில் இன்னமும் பேச்சு வழக்கில் உள்ளதை மறந்துவிட வேண்டாம்.

அனைத்திலும் அமெரிக்காவின் ஆதிக்கம்... ஏர்பிளைனா? அல்லது ஏரோபிளைனா? அப்போ இவ்ளோ நாள் தப்பா அழைச்சினு இருக்கோமா!

ஏன் இந்த வேறுப்பாடு?

19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆங்கிலத்தை சார்ந்திருக்கக்கூடாது என அமெரிக்கா உறுதியாக இருந்தது. இதனால் ஒரே பொருளையோ அல்லது செயலையோ குறிப்பதாக இருந்தாலும், பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் இருந்து சற்று மாறுப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்த அமெரிக்கா ஆரம்பித்தது.

அனைத்திலும் அமெரிக்காவின் ஆதிக்கம்... ஏர்பிளைனா? அல்லது ஏரோபிளைனா? அப்போ இவ்ளோ நாள் தப்பா அழைச்சினு இருக்கோமா!

இதன் தொடர்ச்சியாகவே, பிரிட்டிஷின் ஏரோபிளைனிற்கு மாற்றாக ஏர்பிளைன் வார்த்தையை அமெரிக்கா பயன்படுத்த முடிவெடுத்தது. அமெரிக்கா தான் இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு துறைகளில் முன்னிலையில் இருக்கிறது என்பதை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். அப்படியிருக்கையில், அந்த நாட்டின் வார்த்தை உலகம் முழுவதிலும் பரவியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Which is correct airplane or aeroplane
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X