காரை எப்படி செலக்ட் செய்து வாங்க வேண்டும் தெரியுமா?

Written By:

நீங்கள் கார் வாங்கப்போகிறீர்கள் என்றால் உங்களுக்கு தெரிந்தவர்கள், உங்கள் நண்பர்கள், உறவினர்கள், உங்களுக்கு தெரிந்த மெக்கானிக், என்று கார் வைத்திருக்கும் உங்கள் நண்பனின் நண்பன் வரை எல்லோரும் அந்த கம்பெனி காரை வாங்கு, ஆந்த காரில் தான் பல வசதிகள் இருக்கிறது. இந்த காரிற்கு ரீசேல் வேல்யூ இல்லை என ஆளாளுக்கு ஒரு ஆலோசனையை வழங்கி உங்களை குழப்ப துவங்கி விடுவர்.

காரை எப்படி செலக்ட் செய்து வாங்க வேண்டும் தெரியுமா?

பலர் இவர்களின் ஆலோசனை எல்லாம் கேட்டு அலசி ஆராய்ந்து இண்டர்நெட்களில் அந்த கார்கள் குறித்து படித்து மிகச்சரியாக தவறான கார்களை வாங்கி ஏன்டா கார் வாங்கினோம்? என்று யோசிக்க கூடிய அளவிற்கு கொண்டு சென்று விடுவர். ஆட்டோமொபைல்ஸ் பற்றி நன்கு அறிந்தவர்களே தன் தேவையை பூர்த்தி செய்யும் காரை அறிந்து சரியான காரை வாங்குவர்.

காரை எப்படி செலக்ட் செய்து வாங்க வேண்டும் தெரியுமா?

இவ்வளவையும் சொல்லிவிட்டு நீங்களும் எந்த காரை வாங்க வேண்டும் என்று தானே சொல்லபோகிறீர்கள் என்று கேட்கிறீர்களா? நிச்சயமாக நீங்கள் எந்த காரை வாங்கவேண்டும் என நாங்கள் இங்கு ஆலோசனை கூறப்போவதில்லை.

காரை எப்படி செலக்ட் செய்து வாங்க வேண்டும் தெரியுமா?

அதற்கு பதிலாக காரை எப்படி வாங்க வேண்டும் என்று தான் சொல்லப்போகிறோம். நீங்கள் கார் வாங்கும் போது மற்றவர்கள் உங்களை குழப்பி விடுவதில் இருந்து எப்படி தெளிவு பெறுவது? கார் வாங்கும்போது எதை எதை எல்லாம் பார்க்க வேண்டும் என்று தான் சொல்லப்போகிறோம்.

காரை எப்படி செலக்ட் செய்து வாங்க வேண்டும் தெரியுமா?

கார் வாங்கும் போது நீங்கள் முதலில் முடிவு செய்யவேண்டியது. உங்களது தேவை மற்றும் பட்ஜெட் தான். மார்க்கெட்டில் கார்கள் லட்சங்களில் ஆரம்பித்து கோடிகளில் கூட இருக்கிறது. நீங்கள் எந்த தேவைக்காக கார் வாங்குகீறீர்கள், உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர், உங்கள் தேவைக்கு ஒத்து வரும் கார்கள் என்னென்ன, அதன் விலை எவ்வளவு, அதற்கான பராமரிப்பு செலவுகள் உங்கள் பட்ஜெட்டிற்குள் வருகிறதா என்று தான் முதலில் பார்க்க வேண்டும்.

காரை எப்படி செலக்ட் செய்து வாங்க வேண்டும் தெரியுமா?

இவை அனைத்தையும் பார்த்து உங்கள் கைவசம் எப்படியும் 5-7 கார்கள் உங்கள் ஆப்ஷனாக இருக்கும். இதில் எந்த காரை வாங்குவது? எந்த காரில் என்னென்ன வசதிகள், அம்சங்கள் இருக்கிறது. என்று பார்க்க துவங்குவீர்கள் இங்கு தான் பிரச்சனையே!

காரை எப்படி செலக்ட் செய்து வாங்க வேண்டும் தெரியுமா?

நீங்கள் இப்பொழுது ஒரு காரின் டாப் வெரியட்டை வாங்க முடிவு செய்துள்ளீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள் அதை விட சற்று நல்ல காரின் என்டரி லெவர் காரின் விலை நீங்கள் செலக்ட் செய்த காரின் விலையில் இருந்து சிறிது அளவு தான் கூடுதலாக இருக்கும்.

காரை எப்படி செலக்ட் செய்து வாங்க வேண்டும் தெரியுமா?

அப்பொழுது உங்கள் உடன் இருக்கும் சிலர் உங்களிடம் கார் வாங்குவது தான் வாங்குகிறாய் நல்ல காராக வாங்கு என என்ட்ரி லெவல் காரையே வாங்க ஆலோசனை கூறுவார்கள். இதுவும் உங்களுக்கு சரி என்றே படும்.

காரை எப்படி செலக்ட் செய்து வாங்க வேண்டும் தெரியுமா?

உதாரணமாக நீங்கள் மாருதி சுசுகி ஆல்டோ கே10 காரின் டாப் வேரியன்டான விஎக்ஸ்ஐ வாங்க முடிவு செய்துள்ளீர்கள் என்றால் உங்கள் நண்பர்கள் அதே மாருதி சுசுகி நிறுவனத்தின் செலிரியோவின் என்ட்ரி லெவல் காரான எல்எக்ஸ்ஐ வாங்கு என ஆலோசனை சொல்லலாம். இதற்கும் அதற்கும் சுமார் ரூ 20,000 தான் வித்தியாசம் இருக்கும்.

காரை எப்படி செலக்ட் செய்து வாங்க வேண்டும் தெரியுமா?

ஆனால் ஆல்டோ டாப் மாடலில் மியூசிக் சிஸ்டம் இருக்கிறது செலிரியோவில் அது இல்லை, காரின் இன்ட்டிரீயர் ஆல்டோவில் டூயல் டோன், செலிரியோவில் சிங்கிள் டோன், ஆல்டோவில் சென்ட்ரல் லாக்கிங் உள்ளது செலிரியோவில் கிடையாது. ஆல்டோவில் முன் பக்கம் பவர் விண்டோ உள்ளது. செலிரியோவில் பவர் விண்டோவே கிடையாது.

காரை எப்படி செலக்ட் செய்து வாங்க வேண்டும் தெரியுமா?

ஆல்டோவில் புகைக்குள்ளும் ஊடுருவும் ரியர் டிஃபாகர், ஃபாக் லேம்ப் ஆகிய உள்ளது. செலிரியோவில் இல்லை, ஓவிஆர்எம் ஆட்ஜெட்மெண்ட் ஆல்டோவில் உள்புறமாக உள்ளது. செலிரியோவில் வெளிப்புறமாக உள்ளது.

காரை எப்படி செலக்ட் செய்து வாங்க வேண்டும் தெரியுமா?

இவ்வாறாக இந்த இரண்டு காருக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. இதை எதையும் கவனிக்காமல் நீங்கள் என்ட்ரி லெவல் காரை வாங்கினால் இந்த வசதிகளை எல்லாம் இழக்க நேரிடும்.

காரை எப்படி செலக்ட் செய்து வாங்க வேண்டும் தெரியுமா?

ஆக மொத்தத்தில் இவ்வாறான பிரச்னைகள் ஏற்படும் போது உங்கள் பட்ஜெட்டிற்கு தகுந்த டாப் மாடல் வேரியண்டையே தேர்ந்தெடுங்கள். அது தான் சிறந்த தேர்வாக அமையும்.

காரை எப்படி செலக்ட் செய்து வாங்க வேண்டும் தெரியுமா?

இந்த பரிந்துரை உங்களது காரில் உள்ள வசதிக்காக மட்டுமல்ல காரின் பாதுகாப்பு அம்சங்களும் டாப் வேரியண்ட் காரில் தான் அதிகமாக இருக்கும். நாம் முன்பு உதாரணத்திற்கு எடுத்துக்கொண்ட காரிலும் ஆல்டோ டாப் வேரியன்டில் டிரைவருக்கான ஏர் பேக் இருக்கிறது. ஆனால் செலிரியோ என்ட்ரி லெவல் மாடலில் ஏர் பேக் வசதியில்லை, இதே போல் சில கார்களில் ஏ.பி.எஸ் வசதி டாப் வேரியன்ட்களில் தான் உள்ளன.

காரை எப்படி செலக்ட் செய்து வாங்க வேண்டும் தெரியுமா?

நீங்கள் கார் வாங்க எந்த பட்ஜெட்டை ஒதுக்கினாலும் சரி அந்த பட்ஜெட்டில் உள்ள டாப் வேரியண்ட் காரையே தேர்ந்தெடுப்பது தான் நல்ல தேர்வாக இருக்கும். இது போக டாப் வேரியண்ட் காரின் என்ட்ரி லெவல் கார்களை விட இட வசதியும் அதிகமாக இருக்கும்.

காரை எப்படி செலக்ட் செய்து வாங்க வேண்டும் தெரியுமா?

இந்த கூற்று இன்ஜின் விஷயங்களிலும் சரியாக அமையும், அதாவது குறைந்த விலை காரின் டாப் வேரியண்டில் உள்ள இன்ஜின்கள் அதிக விலை என்ட்ரி லெவல் காரில் உள்ள இன்ஜினை காட்டிலும் சிறப்பாக இருக்கும் உதாரணமாக ஆல்டோ டாப் வேரியண்ட் காரில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜின் இருக்கிறது. இது செலிரியோவிற்கு சமமாக ஈடுகொடுக்க கூடியது.

காரை எப்படி செலக்ட் செய்து வாங்க வேண்டும் தெரியுமா?

ரீசேல் வேல்யூவிலும் டாப் வேரியன்டிற்கே நல்ல மதிப்பு இருக்கும். என்ட்ரி லெவல் கார்களுக்கு டாப் வேரியன்ட் காருக்கும் விலையில் நல்ல வித்தியாசம் ரீசேலில் தெரியும்.

காரை எப்படி செலக்ட் செய்து வாங்க வேண்டும் தெரியுமா?

நீங்கள் இ.எம்.ஐ., மூலம் கார் வாங்குகிறீர் என்றால் இன்னும் சுலபம் நீங்கள் நினைக்கும் என்ட்ரி லெவல் காரின் டாப் வேரியன்டையே வாங்கிலாம் அதற்கான இ.எம்.ஐ.யை ஒரு வருடமோ இரண்டு வருடமோ அதிகரித்து உங்கள் பட்ஜெட்டை ஈடுசெய்யலாம்.

காரை எப்படி செலக்ட் செய்து வாங்க வேண்டும் தெரியுமா?

மேலும் டாப் வேரியண்டில் டவுன் பேமெண்டும் சற்று அதிகமாக இருக்கும் இதை நீங்கள் சமாளிக்க முடியும் என்றால் உங்கள் பட்ஜெட்டிற்கு மேல் உள்ள டாப் வேரியன்ட் காரையே தாராளமாக தேர்வு செய்யுங்கள்.

காரை எப்படி செலக்ட் செய்து வாங்க வேண்டும் தெரியுமா?

நீங்கள் எந்த கார் வாங்க வேண்டும் என்று முடிவு செய்யும் முன் அது அந்த காரின் டாப் வேரியன்டா என்பதை பாருங்கள் இல்லாவிட்டால் அதற்கு குறைந்த காரின் டாப் வேரியன்டை வாங்குவதே சிறந்தது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01.காரில் சீட் பெல்ட் போடவில்லை என்றால் இன்சூரன்ஸ் பணம் பெறுவதில் பாதிப்பு ஏற்படுமா?

02.கேமரா கண்ணில் சிக்கிய புதிய மாருதி எர்டிகா கார்... விரைவில் அறிமுகம்!!

03.டாடா எச்7எக்ஸ் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியானது!

04.இந்திய ராணுவத்தில் சேர்ந்தது டாடா சபாரி ; இனி நாட்டிற்காக பணியாற்றும்

05.லைக் வாங்குவதற்காக பென்ஸ் லோகாவை திருடியவன் கைது

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Which variant should you buy?. Read in Tamil
Story first published: Saturday, April 7, 2018, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark