இந்தியாவில் கார் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் நிறம் எது தெரியுமா? உலகளவிலும் இதுதானாம்...

இந்தியாவில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் கார்களின் நிற தேர்வில் தொடர்ந்து வெள்ளை நிறம் ஆதிக்கம் செலுத்தி வருவதாக அக்சால்ட்டா நிறுவனத்தின் 2019ஆம் ஆண்டிற்கான உலகளவில் ஆட்டோமொபைல் துறையில் பிரபலமான நிறம் என்கிற அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த அறிக்கையின்படி, ஆசியா உள்பட மற்ற கண்டங்களில் எந்தெந்த நிறங்கள் ஆட்டோமொபைல் துறையில் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது என்பதை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் கார் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் நிறம் எது தெரியுமா? உலகளவிலும் இதுதானாம்...

இந்தியாவை பொறுத்தவரை 33 சதவீத வாடிக்கையாளர்கள் தனது கார்களின் நிறத்திற்கு வெள்ளை நிறத்தை தான் தேர்வு செய்கின்றனர். இந்த 33 சதவீதத்தில் 26 சதவீதம் சாலிட் வெள்ளை நிறமும் 7 சதவீத வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் பேர்ல் வெள்ளை நிறமும் அடங்கும். வெள்ளை நிறத்திற்கு அடுத்ததாக இந்தியாவில் கார் உபயோகிப்போர் அதிகம் விருப்பம் நிறமாக 31 சதவீதத்துடன் சில்வர் நிறம் உள்ளது. 12% வாடிக்கையாளர்கள் க்ரே நிறத்தை விருப்பமாக கொண்டுள்ளனர்.

இந்தியாவில் கார் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் நிறம் எது தெரியுமா? உலகளவிலும் இதுதானாம்...

இந்தியா மட்டுமின்றி மக்கள் தொகை அதிகம் கொண்ட அண்டை நாடான சீனாவிலும் கார் நிற தேர்வில் வெள்ளையின் ஆதிக்கம் தான். மொத்தமாக ஆசிய கண்டத்தில் வெள்ளை நிற கார்களின் தேர்வு கடந்த ஆண்டை விட 1 சதவீதம் அதிகரித்து 49 சதவீதமாக உள்ளது. உலகளவில் கார்களை வெள்ளை நிறத்தில் தேர்ந்தெடுப்போர் 38 சதவீதமாகவும், கருப்பு நிறத்தை 19% பேரும், க்ரே-வை 13 சதவீத வாடிக்கையாளர்களும் தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்தியாவில் கார் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் நிறம் எது தெரியுமா? உலகளவிலும் இதுதானாம்...

கடந்த ஆண்டில் முதல் மூன்று நிறங்களில் சில்வர் நிறமும் இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் சில்வர் நிறத்தை 10 சதவீதத்தினர் மட்டும் தான் தங்களது கார்களுக்கு ஏற்ற நிறமாக கருதுகின்றனர். இதிலிருந்து க்ரே நிறத்தை விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இந்த அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.

இந்தியாவில் கார் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் நிறம் எது தெரியுமா? உலகளவிலும் இதுதானாம்...

க்ரே நிறத்தை பெரும்பாலும் ஐரோப்பியர்கள் தான் அதிகம் விரும்புகின்றனர். அங்கு 24 சதவீதத்தினர் க்ரேவையும், 23 சதவீதத்தினர் வெள்ளை நிறத்தையும் காரின் நிறத்திற்கு தேர்வு செய்பவர்களாக உள்ளன. க்ரே நிறத்தின் இந்த சதவீதம் ஐரோப்பாவில் கடந்த ஆண்டை விட 2 சதவீதம் கூடுதலாகும்.

இந்தியாவில் கார் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் நிறம் எது தெரியுமா? உலகளவிலும் இதுதானாம்...

அதேநேரம் வெள்ளை நிற தேர்வு 1 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் தான் முதன்முறையாக ஐரோப்பிய கார் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் நிறமாக க்ரே நிறம் முன்னிலை பெற்றுள்ளது. ஐரோப்பாவில் கடந்த ஆண்டு க்ரே நிற எஸ்யூவி கார்களுக்கு பெரிய அளவில் தேவை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கார் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் நிறம் எது தெரியுமா? உலகளவிலும் இதுதானாம்...

ஆப்பிரிக்காவை பொறுத்தவரை அங்குள்ள கார் வாடிக்கையாளர்கள் வெள்ளை, சில்வர் போன்ற லைட் நிறங்களுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் தருகின்றனர். குறிப்பாக வெள்ளை நிறத்தை தேர்வு செய்வோரின் எண்ணிக்கை 58 சதவீதமாக உள்ளது.

இந்தியாவில் கார் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் நிறம் எது தெரியுமா? உலகளவிலும் இதுதானாம்...

வட அமெரிக்காவிலும் வெள்ளை நிறம் தான் என்றாலும், அங்கு நீல நிறத்தில் கார்களை தேர்வு செய்வோரின் எண்ணிக்கை இந்த வருடத்தில் 2 சதவீதம் அதிகரித்து 10 சதவீதமாக உள்ளது. தென் அமெரிக்க கார் வாடிக்கையாளர்களின் நிற தேர்வில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. சில்வர் நிறத்தை தேர்வு செய்வோரின் எண்ணிக்கை மட்டும் கடந்த ஆண்டை விட 1 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கார் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் நிறம் எது தெரியுமா? உலகளவிலும் இதுதானாம்...

உலகளவில் வெள்ளை நிற கார்களை தேர்ந்தெடுப்போர் அதிகமாக இருந்தாலும் மற்ற நிறங்களை தேர்ந்தெடுப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து கொண்டே தான் வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நீல நிறம். சாலையில் எவ்வளவு கார்களுக்கு மத்தியிலும் நீல நிற கார்கள் தனித்து தெரிபவையாக இருக்கின்றன.

இந்தியாவில் கார் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் நிறம் எது தெரியுமா? உலகளவிலும் இதுதானாம்...

இதனால் தான் வட அமெரிக்கா, ஐரோப்பா போன்ற கண்டங்களில் கார் வாடிக்கையாளர்களின் நிற தேர்வில் நீல நிறம் கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளது. வெள்ளை நிற கார்களை அதிகம் சாலையில் பார்த்தது கூட இத்தகைய வாடிக்கையாளர்களின் எண்ணத்தை மாற்றியிருக்கலாம் என நிறங்களை பற்றி ஆராயும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
White remains most popular colour for car Buyers
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X