வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
வெளிமார்க்கெட்டில் வெள்ளை நிற ஹெட்லைட்டை வாங்கி தங்கள் கார்களில் பொருத்தி பயன்படுத்தி வரும் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சாலையில் விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் கார்களுக்கு வெளிமார்க்கெட்டில் ஹெட்லைட்களை வாங்கி பொருத்துவது என்பது அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இப்படியாக ஹெட்லைட்டை வெளிமார்க்கெட்டில் வாங்கி பயன்படுத்தும் நபர்கள் அதிகமாகி வருகிறார்கள். தற்போது வாகனங்களை தயாரிக்கும் நிறுவனமே வெள்ளை நிற எல்இடி ஹெட்லைட்டுகளை தங்கள் வாகனங்களில் பொருத்தி தருகிறார்கள்.

சில நிறுவனங்கள் இன்னும் தங்கள் வாகனங்களில் மஞ்சள் நிற ஹாலஜன் பல்புகளை பொருத்தி தருகிறார்கள். இந்நிலையில் மஞ்சள் நிற ஹாலஜன் பல்புகளை பொருத்த தரும் கார்களை வாங்கும் உரிமையாளர்கள் வெளிமார்க்கெட்டில் அந்த லைட்டை மாற்றி வெள்ளை நிற எல்இடி ஹெட்லைடுகளை பொருத்துகிறார்கள். இது தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
குஜராத் மாநிலப் போக்குவரத்து துறை இப்படியாக வெளிமார்க்கெட்டில் வெள்ளை நிற ஹெட்லைட்டை வாங்கி பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத எல்இடி ஹெட்லைட்டை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்தவித வாகனமாக இருந்தாலும், அந்த வாகனங்களில் இந்த ஹெட்லைட்டை பொருத்த கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி வெளிமார்க்கெட்டில் அங்கீகரிக்கப்படாத வெள்ளை நிற எல்இடி ஹெட்லைட்டுகளை வாங்கி பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஆமதாபாத் ஆர்டிஓ சார்பில் இப்படியாக அங்கீகரிக்கப்படாத ஹெட்லைட்டுகளை பயன்படுத்துவது தவறு என மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்யப்பட்டு வருகிறது.
இப்படியாக அங்கீகரிக்கப்படாத ஹெட்லைட்டுகளில் இருந்து அதிகமான வெளிச்சம் வெளியே வருகிறது மற்றும் சிலர் கூடுதல் லைட்டுகளையும் வைத்திருக்கிறார்கள். இதுவும் சட்டவிரோதமானது. இதனால் சாலையில் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சாலையில் எதிரே வரும் வாகன ஓட்டிகள் கண் தெரியாமல் விபத்தில் சிக்ககூட வாய்ப்புகள் இருக்கிறது.

இதையடுத்து அம்மாநில போக்குவரத்து துறை இது குறித்து அனைத்து ஆர்டிஓ அலுவலர்களும் சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறி செயல்படும் வாகன உரிமையாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழு ரிப்போர்ட்டை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வெளிமார்க்கெட்டில் அங்கீகரிக்கப்படாத ஹெட்லைட்டுகளை பயன்படுத்தினால் நகர் பகுதியில் மட்டுமல்லாமல் தேசிய நெடுஞ்சாலைகள் பயணிக்கும் போதும் பிரச்சனை ஏற்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக வெளிச்சத்துடன் வாகனம் பயணிக்கும் போது சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு அது தொந்தரவாக இருக்கும். இதன் காரணமாக கூட ஏராளமான விபத்துக்கள் நடந்துள்ளன. இது குறித்து பல்வேறு புகார்களும் போக்குவரத்து துறைக்கு வந்துள்ளது. இதையடுத்து தான் குஜராத் மாநில போக்குவரத்து துறை இப்படியான உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் வாகனங்களில் இதை வாங்கி பொருத்தும் வாகன ஓட்டிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல், இப்படியான அங்கீகரிக்கப்படாத வெள்ளை நிற எல்இடி ஹெட்லைட்களை விற்பனை செய்யும் ஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து போக்குவரத்து துறை சார்பில் ஆட்டோமொபைல் உதிரிபாக கடைகளில் ரைடு நடத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த வெளிமார்க்கெட்டில் விற்பனையாகும் அங்கீகரிக்கப்படாத ஹெட்லைட் பிரச்சினை குஜராத் மாநில மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருக்கிறது. தமிழகத்திலும் இதுபோன்ற பிரச்சனை இருக்கிறது தமிழக போக்குவரத்து துறையும் இதற்காக தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும். இதனால் இரவு நேரங்களில் நிகழும் விபத்துகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைய வாய்ப்புள்ளது


Click it and Unblock the Notifications









