ரோட்ல நடக்குற விபத்தை குறைக்க இந்த சின்ன விஷயத்தை ஃபாலோ பண்ணா போதுமா? ரொம்ப ஆச்சரியமா இருக்குதே!
உலகில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் சராசரி வேகத்தை 5% குறைத்தால் உலகில் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை 30 சதவீதம் வரை குறையும் என சமீபத்தில் உலக சுகாதார மையம் நடத்திய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுகாதார மையத்தின் போக்குவரத்து துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு குறித்த விரிவான விபரங்கள் அனைத்தையும் காணலாம் வாருங்கள்.
உலக சுகாதார மையம் சமீபத்தில் ஒரு ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதன்படி சர்வதேச போக்குவரத்து துறை மற்றும் ப்ளூம்பெர்க் என்ற நிறுவனம் சார்பில் சர்வதேச சாலை பாதுகாப்பு என்ற தலைப்பில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வின் முடிவுகளை உலக சுகாதாரம் மையம் வெளியிட்டுள்ளது. இதில் பல முக்கியமான விஷயங்கள் தகவல்கள் எல்லாம் நமக்கு கிடைத்துள்ளன.

இந்த ஆய்வின்படி நகர்ப்புறங்களில் சராசரியான பயண வேகம் என்பது 50 கிலோமீட்டர் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அதிக மக்கள் நடமாடும் பகுதிகள் பள்ளி பகுதிகள் குடியிருப்பு பகுதிகள் ஆகிய பகுதிகளில் 30 கிலோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான வேகத்தில் தான் வாகனம் பயணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் நடக்கும் சாலை விபத்துகளில் 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு அதிகமாக பயணிக்கும் வாகனங்கள் தான் அதிகமாக விபத்தில் சிக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்போது 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்போது சில ரிஸ்க் இருக்கிறது.

அது போல விபத்து ஏற்பட்டால் எவ்வளவு ரிஸ்க் இருக்கிறதோ அதைவிட 60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்போது இரு மடங்கு ஆகிறது. அதுவே 65 கிலோ மீட்டர் ஆகும் போது நான்கு மடங்கு ஆகிறது. 70 கிலோ மீட்டர் ஆகும் போது பத்து மடங்கு ஆகிறது. 75 கிலோமீட்டர் ஆகும் போது 32 மடங்கு ஆகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் படி டெல்லி உள்ளிட்ட உலக அளவில் உள்ள முக்கியமான நகரங்களில் வேகம் அதிகமாக இருப்பதுதான் விபத்துகளுக்கு மிக முக்கியமான காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது வேகம், குடித்துவிட்டு, வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, ஆகியவைதான் விபத்துகளில் ஏற்படும் பெரும் பாதிப்புகளுக்கான முக்கியமான காரணமாக கூறப்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணிவதன் மூலம் விபத்து ஏற்பட்டால் அதில் மரணம் அடைவதற்கான வாய்ப்பு 40 சதவீதம் குறைகிறது. அதே நேரம் படுகாயம் அடைவதற்கான வாய்ப்பு 70 சதவீதம் வரைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிந்தால் 50 சதவீதம் ரிஸ்க் குறைகிறது. அதுவே பின்பக்கம் சீட்டில் உள்ள பயணி சீட் பெல்ட் அனுப்பி இருந்தால் 75% ரிஸ்க் குறைகிறது.
இந்த ஆய்வின்போது ஹெல்மெட் அணிந்திருந்த பலர் அதை முறையாக அணிவதில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சிறிய தவறாக தெரியலாம் ஆனால் இந்த சிறிய தவறு மிகப் பெரிய விபத்திற்கு உள்ளாகும்போது பெரும் ஆபத்தை பயணிக்கு ஏற்படுத்தி விடுகிறது. இது குறித்து மக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் ஹெல்மெட்டை முறையாக அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகரங்களில் ஏற்படும் விபத்துக்களை பார்க்கும்போது டெல்லியில் அதிக எண்ணிக்கையிலான விபத்துக்கள் நடந்துள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு தகவலின்படி கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த விபத்துக்களை விட 18 சதவீதம் விபத்து அதிகமாக நடந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு மொத்தம் 5,652 விபத்துக்கள் நடந்துள்ளன. 2021 ஆம் ஆண்டு 4720 விபத்துக்கள் தான் நடந்திருந்தது.
இதனால் இந்தியா முழுவதும் தற்போது சாலை விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிப்பதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கேமராக்களில் 19 விதமான சாலை விதிமுறை மீறல்கள் கண்காணிக்கப்படும். ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்வது, பைக்கில் மூன்று நபர்கள் பயணிப்பது, அணியாமல் பயணிப்பது, உள்ளிட்ட பல்வேறு விதமான சாலை விதிமுறை மீறல்கள் கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகில் சாலை விபத்துக்கள் என்பது அனைத்து நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை குறைப்பதற்காக அரசு என்னதான் முயற்சி எடுத்தாலும் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் விபத்துக்களால் மரணம் அடையும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் இப்படியான ஆய்வுகள் மூலம் அடுத்த அடுத்த நடவடிக்கைகளை அரசு எடுக்க உதவியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









