எல்லாரும் காத்துகிடக்கும் நேரத்துல டக்குனு விமானம் ரத்துனு சொல்லிடுவாங்க! மழை, புயல் எதுவுமே காரணமா இருக்காது!
கடைசி நிமிஷத்துல விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கு மழை, புயல், பூகம்பம் மட்டுமில்லைங்க இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. அவை என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவவில் பார்க்க உள்ளோம்.

முன்னணி விமான நிறுவனமான எமிரேட்ஸ் கடந்த ஆண்டு அதன் அனைத்து பயணிகளும் டிக்கெட்டுகளை ரத்து செய்திருந்த போதிலும், ஒரே ஒரு பயணிக்காக விமானத்தை இயக்கியது. ஓர் நபர் தனி விமானத்தில் பயணிக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் ரூ. 5 லட்சமாவது செலவு செய்ய வேண்டியிருக்கும்.

ஆனால், மும்பையைச் சேர்ந்த அந்த நபர் வெறும் 18 ஆயிரம் ரூபாய் செலவில் தனி ஆளாக மும்பையில் இருந்து துபாய்க்கு சென்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுபோன்று ஏராளமான நிகழ்வுகள் நாட்டிலும் சரி, உலக விமான போக்குவரத்து வரலாற்றிலும் சரி பல அரங்கேறியிருக்கின்றன.

இருப்பினும், சில நேரங்களில் திடீரென விமானங்கள் ரத்து செய்யப்படும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அனைத்து பயணிகளும் புறப்பட தயாராக இருக்கின்ற போதிலும் விமான நிறுவனங்கள் குறிப்பிட்ட விமானத்தை ரத்து செய்வதாக அறிவிப்புகள் வெளியிட்டிருக்கின்றன.

இந்த சம்பவங்களுக்கு ஒரு வேலை கால நிலை மாற்றம் காரணமாக இருக்குமோ என நீங்கள் சந்தேகிக்கலாம். ஆனால், அதுதான் இல்லை. காலை நிலையில் எந்த மாற்றமும் நிகழாத போதிலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. "அப்படியா.. அப்போ விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கான காரணம் என்னவா இருக்கும்னு கேக்குறீங்களா?" இதற்கான காரணங்களை இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

விமானங்கள் திடீரென ரத்து செய்யப்படுவதற்கான காரணங்கள்:
பணியாளர்கள், தகவல் தொழில்நுட்ப கோளாறு, ஓடு பாதையில் பாதிப்பு மற்றும் விமான போக்குவரத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் உள்ளிட்டவற்றாலும் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

நாம் பணி புரியும் நிறுவனங்களைப் போலதாங்க விமான நிறுவனங்களும். தேவைக்கு ஏற்ப மட்டுமே பணியாளர்களை பணியில் அமர்த்தும். ஒருவர் விடுப்பில் போனால் அவரை ரீ-பிளேஸ் செய்யும் விதமாக மற்றொருவர் இருப்பார். இவர்கள் இருவரும் திடீரென விடுப்பு எடுக்க நேரிட்டால், அந்த விமானம் புறப்படுவதில் சிக்கல் ஏற்படும். இதனாலும் சில நேரங்களில் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

"என்னங்க சொல்றீங்க. ஸ்டாஃப் லீவ்னா, டக்குனு இன்னொருத்தரை பிடிச்சு போட்டு வண்டிய ஓட்ட வேண்டியதுதானே" என நீங்கள் கேட்கலாம். அப்படிதான் செய்ய முடியாது. விமான போக்குவரத்தை பொருத்தவரை பல கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது, தீவிரவாதம் மற்றும் சமூக விரோத செயல் பின்னணிகளைக் கொண்டவர்களை விமானங்களில் பணியில் அமர்த்தக் கூடாது என்பது முதன்மையான விதியாகும்.

ஆகையால், திடீரென ஓர் ஊழியரை நியமித்து அவரை பணியில் ஈடுபட வைக்க முடியாது. அதேவேலையில், விமான துறையில் பணி புரிய வேண்டும் என்றால், அந்த நபர் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பயங்காரவாத எதிர்ப்பு சோதனையை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பதும் கட்டாயம். இந்த மாதிரியான சிக்கல் நிலவுவதாலேயே சில நேரங்களில் விமான நிறுவனங்கள் விமானத்தை திடீரென ரத்து செய்துவிடுகின்றன.

சில நேரங்களில் விமான நிறுவனங்கள் திடீரென பணியாளரை வேலையைவிட்டு தூக்கும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இதனாலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், விமானத்தில் 50 இருக்கைகளுக்கு ஓர் அட்டென்டர் இருக்க வேண்டும் என்பதும் விதியாகும். இதில், சிக்கல் ஏற்பட்டாலும் விமானங்கள் ரத்து செய்யப்படுமாம்.

இதுமட்டுமின்றி, சில நேரங்களில் விமான நிறுவனங்களிடம் போதிய நிதியில்லாத காரணங்களாலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. சமீபத்தில், நிதி பற்றாக்குறையில் சிக்கிய ரியாநேர் (Ryanair) நிறுவனத்தால் அதன் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் சம்பளத்தை வழங்க முடியவில்லை.

இதனால் பெரும் போராட்டாத்தை அதன் ஊழியர்கள் கையில் எடுத்தனர். அப்போது நிறுவனத்தின் பெரும்பாலான விமானங்கள் கடைசி நிமிடங்களில் ரத்து செய்யப்பட்டன. ஜீலை மாதத்திலேயே இந்த அவலமான நிலையை ரியாநேர் நிறுவனம் சந்தித்தது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஈஸிஜெட், ரியாநேர், ஜெட்2 உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்கள் தங்களின் விமானங்களைக் கடைசி நேரத்தில் ரத்து செய்திருக்கின்றன. அதிலும், சமீப சில காலமாக இவை விமானங்களை ரத்து செய்யும் அதிகரிக்கச் செய்திருக்கின்றன. வாரத்திற்கே ஆயிரக் கணக்கான விமானங்கள் இந்நிறுவனங்கள் கடைசி நிமிடங்களில் ரத்து செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications