ஏரோப்ளேன் டேக்-ஆஃப், லேண்டிங் ஆகும்போது இந்த சின்ன விஷயத்தை மறக்காமல் பண்ணணும்... முன்னாடியே தெரியாம போச்சே!

விமானம் டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் ஆகும்போது கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒரு விஷயத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஏரோப்ளேன் டேக்-ஆஃப், லேண்டிங் ஆகும்போது இந்த சின்ன விஷயத்தை மறக்காமல் பண்ணணும்... முன்னாடியே தெரியாம போச்சே!

விமானங்கள் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான செய்திகளை, டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. இந்த செய்திகளை நீங்கள் தொடர்ந்து வாசித்து வருபவர் என்றால், விமான பயணத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டம் எது? என்பது உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

ஏரோப்ளேன் டேக்-ஆஃப், லேண்டிங் ஆகும்போது இந்த சின்ன விஷயத்தை மறக்காமல் பண்ணணும்... முன்னாடியே தெரியாம போச்சே!

விமானம் டேக்-ஆஃப் (Takeoff) மற்றும் லேண்டிங் (Landing) ஆகும்போதுதான் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த சமயத்தில்தான் விமான விபத்துக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே அனைவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, விமானம் டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் ஆகும்போது, பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

ஏரோப்ளேன் டேக்-ஆஃப், லேண்டிங் ஆகும்போது இந்த சின்ன விஷயத்தை மறக்காமல் பண்ணணும்... முன்னாடியே தெரியாம போச்சே!

இதில் ஒரு சில விதிமுறைகள் உங்களுக்கு மிகவும் சாதாரணமாக தோன்றலாம். ஆனால் அனைவரின் பாதுகாப்பையும் மனதில் வைத்துதான், அந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் கேட்பதற்கு மிகவும் சாதாரணமாக தோன்றக்கூடிய, அதே நேரத்தில் மிகவும் முக்கியமான ஒரு டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் விதிமுறையை பற்றிதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

ஏரோப்ளேன் டேக்-ஆஃப், லேண்டிங் ஆகும்போது இந்த சின்ன விஷயத்தை மறக்காமல் பண்ணணும்... முன்னாடியே தெரியாம போச்சே!

விமானம் டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் ஆகும்போது, இருக்கைகளின் ஆர்ம்ரெஸ்ட்களை (Armrests) கீழே இறக்கி விட வேண்டும். இது விமான நிறுவனங்களால் பின்பற்றப்பட்டு வரும் ஒரு பாதுகாப்பு விதிமுறையாகும். அனைவரின் பாதுகாப்பிற்காகதான், விமானம் டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் ஆகும்போது, ஆர்ம்ரெஸ்ட்களை கீழே இறக்கும்படி பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ஏரோப்ளேன் டேக்-ஆஃப், லேண்டிங் ஆகும்போது இந்த சின்ன விஷயத்தை மறக்காமல் பண்ணணும்... முன்னாடியே தெரியாம போச்சே!

விமானம் திடீரென நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டால், ஆர்ம்ரெஸ்ட்கள் படுகாயங்களை ஏற்படுத்தும் என்பதால்தான், டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங்கின்போது, அவற்றை கீழே இறக்கும்படி விமான பணிப்பெண்கள் அறிவுறுத்துகின்றனர். விமான பயணத்தின்போது, பயணிகளின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்.

ஏரோப்ளேன் டேக்-ஆஃப், லேண்டிங் ஆகும்போது இந்த சின்ன விஷயத்தை மறக்காமல் பண்ணணும்... முன்னாடியே தெரியாம போச்சே!

இதன் காரணமாக ஒவ்வொரு சிறிய விஷயமும் உன்னிப்பாக கவனிக்கப்படும். அப்படிப்பட்ட விதிமுறைகளில் ஒன்றுதான் இது. டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங்கின்போது விமானம் திடீரென நிறுத்தப்பட்டால், உயர்ந்த நிலையில் இருக்கும் ஆர்ம்ரெஸ்ட் கீழே வந்து படுகாயங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளன.

ஏரோப்ளேன் டேக்-ஆஃப், லேண்டிங் ஆகும்போது இந்த சின்ன விஷயத்தை மறக்காமல் பண்ணணும்... முன்னாடியே தெரியாம போச்சே!

ஆனால் ஆர்ம்ரெஸ்ட் ஏற்கனவே கீழே இறக்கப்பட்ட நிலையில் இருந்தால், பயணிகளுக்கு காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங்கிற்கு விமானங்கள் பொதுவாக 135-155 நாட்கள் (Knots) வேகத்தில் பயணிக்கும் என விமான துறையை சேர்ந்த வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது 250-287 கிலோ மீட்டர்கள்.

ஏரோப்ளேன் டேக்-ஆஃப், லேண்டிங் ஆகும்போது இந்த சின்ன விஷயத்தை மறக்காமல் பண்ணணும்... முன்னாடியே தெரியாம போச்சே!

இவ்வளவு அதிகமான வேகத்தில் செல்லும்போது, விமானத்தை திடீரென நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், ஆர்ம்ரெஸ்ட் காரணமாக பயணிகளுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவேதான் டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங்கின்போது, ஆர்ம்ரெஸ்ட்களை கீழே இறக்கும்படி விமானத்தில் அறிவுறுத்துகின்றனர்.

ஏரோப்ளேன் டேக்-ஆஃப், லேண்டிங் ஆகும்போது இந்த சின்ன விஷயத்தை மறக்காமல் பண்ணணும்... முன்னாடியே தெரியாம போச்சே!

இதேபோல் விமானம் டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் ஆகும்போது, ஜன்னலை திறந்து வைக்கும்படியும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படும். நாங்கள் ஏற்கனவே கூறியபடி இந்த விதிமுறையும் கேட்பதற்கு சாதாரணமாக தோன்றலாம். ஆனால் இந்த விதிமுறைக்கு பின்னாலும் மிக முக்கியமான பாதுகாப்பு காரணங்கள் அடங்கியுள்ளன.

ஏரோப்ளேன் டேக்-ஆஃப், லேண்டிங் ஆகும்போது இந்த சின்ன விஷயத்தை மறக்காமல் பண்ணணும்... முன்னாடியே தெரியாம போச்சே!

டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங்கின்போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், ஜன்னல்கள் திறந்திருந்தால் மட்டுமே விமான ஊழியர்களால் வெளிப்புற சூழ்நிலையை உடனடியாக காண முடியும். பயணிகள் அனைவரையும் எப்படி பாதுகாப்பாக வெளியேற்றலாம்? என்பதை விமான ஊழியர்கள் திட்டமிடுவதற்கு இது உதவி செய்யும்.

ஏரோப்ளேன் டேக்-ஆஃப், லேண்டிங் ஆகும்போது இந்த சின்ன விஷயத்தை மறக்காமல் பண்ணணும்... முன்னாடியே தெரியாம போச்சே!

எனவே டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங்கின்போது விமான ஊழியர்களால் வழங்கப்படும் அனைத்து அறிவுறுத்தல்களுக்கு பின்னாலும் பாதுகாப்பு காரணங்கள் அடங்கியுள்ளன. மிகவும் சாதாரணமான விஷயம் என அவற்றை அலட்சியம் செய்ய வேண்டாம். விமானத்தில் திடீரென அவசர சூழல் ஏற்பட்டால் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது. ஒவ்வொரு சிறிய விஷயமும் முக்கியமானது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, April 22, 2022, 14:41 [IST]
English summary
Why airplane seat armrest need to be down during takeoff and landing here is the answer
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+