Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அறிவிப்பு வந்ததும் நடுங்கும் பயணிகள்... தரையிறங்குவதற்கு முன் விமானம் வானில் வட்டமடிப்பதற்கு காரணம் இதுதான்...
சில சமயங்களில் தரையிறங்குவதற்கு முன்னர் விமானங்கள் ஏன் வானில் வட்டமடிக்கின்றன? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

வானில் பறக்கும் விமானங்கள் என்றால், இன்னமும் கூட பலருக்கும் ஆச்சரியம்தான். அந்த விமானங்களை பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை, டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. இதன் மூலம் விமானங்கள் குறித்து வாசகர்களுக்கு இருக்கும் பல்வேறு சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படுகின்றன.

இந்த வரிசையில் சில சமயங்களில் தரையிறங்குவதற்கு முன்பாக விமானங்கள் வானில் வட்டமடிப்பது ஏன்? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். சில சமயங்களில் நீங்கள் பயணிக்கும் விமானம் அடுத்த 10 நிமிடங்களில் தரையிறங்க இருக்கும். எனவே நீங்களும் புறப்படுவதற்கு தயாராகியிருப்பீர்கள்.

ஆனால் அப்போது திடீரென விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்படலாம் என்பது குறித்த அறிவிப்பு கேப்டனிடம் இருந்து வரும். அதன்பின்பு விமான நிலையத்திற்கு மேலாக விமானம் வானில் வட்டமடிக்க தொடங்கும். அடிக்கடி விமான பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு இதற்கான காரணங்கள் நன்றாக தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனினும் முதல் முறையாக பயணம் செய்பவர்களுக்கு இந்த நிகழ்வுகள் ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தி விடும். விமானம் ஏன் தரையிறங்காமல் வானில் வட்டமடித்து கொண்டிருக்கிறது? விமானத்தில் ஏதேனும் பிரச்னையா? பாதுகாப்பாக தரையிறங்கி விடுவோமா? என்பது போன்ற பல்வேறு சந்தேகங்கள் அவர்களுடைய மனதில் அப்போது எழும்.

ஆனால் இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பதுதான் உண்மை. இது வழக்கமான ஒரு நடைமுறைதான். தரையிறங்குவதற்கு முன்னால் விமானம் வானில் வட்டமடிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, விமான ஓடுபாதையில் விபத்தை ஏற்படுத்தக்கூடிய ஏதேனும் ஒரு பொருளோ அல்லது விலங்கோ இருக்கலாம்.

இதுபோன்ற சூழல்களில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள், விமானத்தை சிறிது நேரம் வானில் வட்டமடிக்கும்படி உத்தரவு பிறப்பித்து விட்டு, விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். இதுதவிர பக்கவாட்டு பகுதியில் காற்று பலமாக வீசினாலும், விமானம் வானில் சிறிது நேரம் வட்டமடிக்கும் சூழல் ஏற்படும்.

மேலும் வேறு ஏதேனும் ஒரு விமானம் மிகவும் அவசரமாக தரையிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படும். இதன் காரணமாகவும் உங்கள் விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்படலாம். எனவே தரையிறங்குவதற்கு முன்னால் விமானம் வானில் வட்டமடித்தால் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை.

எனினும் தரையிறங்க தயாராகி இருக்கும் சூழலில், விமானம் மீண்டும் உயர பறந்து வானில் வட்டமடிக்கும் நிகழ்வுகளால் பயணிகள் அச்சமும், கவலையும் கொள்கின்றனர். இதுபோன்ற சமயங்களில், நிலைமை முழுக்க முழுக்க கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கும் என்பதை விமான பயணிகள் மனதில் வைத்து கொண்டால் வீண் மன உளைச்சலை தவிர்க்கலாம்.

குறிப்பாக மிகவும் பரபரப்பாக இயங்கும் பிஸியான விமான நிலையங்களில் தரையிறங்குவதற்கு முன்னர் வானில் வட்டமடிக்கும் சூழலை பல்வேறு விமானங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சில நிமிடங்கள் முன்கூட்டியே வந்து விட்டாலோ அல்லது சில நிமிடங்கள் தாமதமாக வந்தாலோ இத்தகைய சூழல் உருவாகும்.

அதாவது எத்தனை மணிக்கு விமான நிலையத்திற்கு வர வேண்டும்? என்ற துல்லியமான நேரத்தை விமான நிலையங்கள் சில சமயங்களில் முன்கூட்டியே பைலட்களுக்கு தெரிவித்து விடும். அந்த நேரத்தில் இன்னும் பல்வேறு விமானங்கள் அங்கு தரையிறங்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கும். எனவே சில நிமிடங்கள் முன்கூட்டியோ அல்லது தாமதமாக வந்தாலோ குழப்பம் ஏற்படும்.

இதுபோன்று நடக்கும்பட்சத்தில், உங்கள் விமானம் உடனடியாக தரையிறங்குவதற்கு பதிலாக, வானில் சிறிது நேரம் வட்டமடிக்கும். ஒரு விமானம் என்ன வேகத்தில் வந்து கொண்டுள்ளது? எப்போது விமான நிலையத்தை வந்தடையும்? என்பதை, தரையில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் பார்ப்பதற்கான வசதிகள் உள்ளன.

இதன் மூலம் ஒரு விமானம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே வந்து விடும் என்பது தெரிந்தால், அந்த விமானத்தின் பைலட்களை தொடர்பு கொண்டு வேகத்தை குறைக்கும்படி, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தகவல் தெரிவிப்பார்கள். எனவே அந்த விமானம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு விமான நிலையத்தை அடைந்து உடனடியாக தரையிறங்கும்.

ஏதேனும் குழப்பங்களால் இது நடக்காதபட்சத்தில், தரையிறங்குவதற்கு முன்பு விமானம் வானில் வட்டமடிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இவை எல்லாம் தவிர சில சமயங்களில் மோசமான வானிலையும் விமானம் தரையிறங்குவதில் பாதிப்பை ஏற்படுத்தும். வானிலை மிகவும் மோசமாக இருக்கும்பட்சத்தில், அருகே இருக்கும் விமான நிலையத்தில் தரையிறக்க வேண்டிய சூழலும் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.