ஆம்புலன்ஸ் போன்ற எமர்ஜென்ஸி வாகனங்களில் சிகப்பு-நீல லைட்கள் இருப்பதற்கு காரணம் இதுதான்... என்னனு தெரியுமா?

ஆம்புலன்ஸ் போன்ற எமர்ஜென்ஸி வாகனங்களில் சிகப்பு-நீல நிற விளக்குகள் ஏன் பயன்படுத்தப்படுகின்றன? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆம்புலன்ஸ் போன்ற எமர்ஜென்ஸி வாகனங்களில் சிகப்பு-நீல லைட்கள் இருப்பதற்கு காரணம் இதுதான்... என்னனு தெரியுமா?

உலகம் முழுவதும் பல்வேறு வகையான எமர்ஜென்ஸி வாகனங்கள் இருக்கின்றன. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் காவல் துறை வாகனங்கள் என இதற்கு ஏராளமான உதாரணங்களை கூறலாம். இந்த வாகனங்களின் மேல் பகுதியில் எமர்ஜென்ஸி லைட்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எமர்ஜென்ஸி லைட்களின் நிறம் நாட்டிற்கு நாடு மாறுபடலாம்.

ஆம்புலன்ஸ் போன்ற எமர்ஜென்ஸி வாகனங்களில் சிகப்பு-நீல லைட்கள் இருப்பதற்கு காரணம் இதுதான்... என்னனு தெரியுமா?

அவ்வளவு ஏன்? ஒரு நாட்டிற்கு உள்ளே மாநிலத்திற்கு மாநிலம் மற்றும் நகரத்திற்கு நகரம் இந்த எமர்ஜென்ஸி லைட்களின் நிறம் மாறுபட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் பொதுவாக பார்த்தால், உலகின் பல்வேறு பகுதிகளிலும், பல்வேறு வகையான எமர்ஜென்ஸி வாகனங்களில், சிகப்பு மற்றும் நீல நிறங்களை கொண்ட எமர்ஜென்ஸி லைட்கள்தான் பயன்படுத்தப்படுகிறது.

ஆம்புலன்ஸ் போன்ற எமர்ஜென்ஸி வாகனங்களில் சிகப்பு-நீல லைட்கள் இருப்பதற்கு காரணம் இதுதான்... என்னனு தெரியுமா?

சிகப்பு மற்றும் நீல வண்ண கலவையில் எமர்ஜென்ஸி லைட்களை பயன்படுத்துவதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன. சிகப்பு வண்ணம் நிறுத்தம் மற்றும் எச்சரிக்கை ஆகியவற்றுடன் தொடர்புடையது. இதன் காரணமாகதான் எமர்ஜென்ஸி வாகனங்களில் சிகப்பு வண்ண லைட்களை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆம்புலன்ஸ் போன்ற எமர்ஜென்ஸி வாகனங்களில் சிகப்பு-நீல லைட்கள் இருப்பதற்கு காரணம் இதுதான்... என்னனு தெரியுமா?

ஆனால் அதிக போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் சிகப்பு வண்ணம் மற்ற வாகன ஓட்டுனர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான வாய்ப்புகள் சற்று குறைவு. ஏனெனில் பெரும்பாலான வாகனங்களின் டெயில் லைட்கள் சிகப்பு வண்ணத்தில்தான் இருக்கும். இதுபோன்ற சூழல்களில் நீல வண்ணம் தனித்து தெரியும். இதன் மூலம் மற்ற வாகனங்களின் ஓட்டுனர்கள் எச்சரிக்கப்படுவார்கள்.

ஆம்புலன்ஸ் போன்ற எமர்ஜென்ஸி வாகனங்களில் சிகப்பு-நீல லைட்கள் இருப்பதற்கு காரணம் இதுதான்... என்னனு தெரியுமா?

சிகப்பு மற்றும் நீல வண்ண கலவையை எமர்ஜென்ஸி லைட்களில் பயன்படுத்துவதற்கு இதுவே முக்கியமான காரணம். ஆனால் இதேபோல் இன்னும் பல்வேறு காரணங்கள் உள்ளன. இதன்படி சிகப்பு வண்ணம் பகல் நேரத்திலும், நீல வண்ணம் இரவு நேரத்திலும் பார்வைக்கு எளிதாக புலப்படும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆம்புலன்ஸ் போன்ற எமர்ஜென்ஸி வாகனங்களில் சிகப்பு-நீல லைட்கள் இருப்பதற்கு காரணம் இதுதான்... என்னனு தெரியுமா?

எனவே சிகப்பு மற்றும் நீல வண்ண கலவையை பயன்படுத்துவதன் மூலம் ஒரு நாளின் பகல், இரவு என எந்த நேரமானாலும், மற்ற வாகன ஓட்டுனர்களை எச்சரிக்க முடியும். அத்துடன் நிறக்குருடு (Colorblind) உள்ள டிரைவர்கள் தொடர்புடைய பிரச்னைகளையும், சிகப்பு மற்றும் நீல வண்ண கலவை குறைக்கிறது என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆம்புலன்ஸ் போன்ற எமர்ஜென்ஸி வாகனங்களில் சிகப்பு-நீல லைட்கள் இருப்பதற்கு காரணம் இதுதான்... என்னனு தெரியுமா?

நிறக்குருடு பிரச்னையால் பாதிக்கப்பட்ட நபர்களால், நிறங்களுக்கு இடையேயான வேறுபாட்டை உணர முடியாது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது சிலருக்கு சிகப்பு வண்ணத்தை உணர்வதில் சில பிரச்னைகள் இருக்கும். ஆனால் நீல வண்ணத்தை உணர்வதில் அவர்களுக்கு எவ்வித பிரச்னைகளும் இருக்காது.

ஆம்புலன்ஸ் போன்ற எமர்ஜென்ஸி வாகனங்களில் சிகப்பு-நீல லைட்கள் இருப்பதற்கு காரணம் இதுதான்... என்னனு தெரியுமா?

அதேபோல் சிலரால் சிகப்பு வண்ணத்தை நன்றாக பார்க்க முடியும். ஆனால் அவர்களால் நீல வண்ணத்தை பார்க்க முடியாது. எனவே சிகப்பு மற்றும் நீல வண்ண கலவையை பயன்படுத்துவதன் மூலம், நிறக்குருடு பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட அனைத்து ஓட்டுனர்களையும் எச்சரிக்கை செய்ய முடியும். எனவேதான் சிகப்பு மற்றும் நீல வண்ண கலவைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why Are Emergency Lights Red And Blue? Read More To Find Out. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X