ரயிலில் ஃபேன், பல்ப்களை திருடர்களே திருட மாட்டாங்க! ஏன் தெரியுமா? இதுக்குள்ள இப்படி ஒரு அறிவியல் இருக்குதா?
இந்திய ரயில்களில் பொருத்தப்பட்டுள்ள ஃபேன், லைட் மற்றும் சார்ஜ் ஏற்றப்படும் பாயிண்டுகள் எல்லாம் 110 வோல்ட் கரண்டில் இயங்கக் கூடியதாக இருக்கிறது ஏன் தெரியுமா? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் என்றால் நம் வீட்டில் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களும் 230 வோல்ட் கரெண்டில் இயங்கக்கூடிய சாதனங்களாக இருக்கும். இதனால் அனைத்து வீடுகளுக்கும் 230 வோல்ட் கரெண்ட் சப்ளையே தான் மின்சார வாரியம் வழங்குகிறது. இது உலகம் முழுவதும் உள்ள ஒரு பொதுவான விஷயமாக இருக்கிறது.

ஆனால் இந்தியாவில் நீங்கள் ரயில்களில் ஏறும்போது உங்கள் செல்போனையோ லேப்டாப்பையோ சார்ஜ் போட முயற்சித்தால் சார்ஜ் போடும் பிளக் பகுதியில் 110 வோல்ட் என குறிப்பிடப்பட்டு இருப்பதை உங்களால் காண முடியும். நாம் வீடுகளில் பயன்படுத்தப்படும் சாதனங்கள் எல்லாம் 230 வோல்ட் கரெண்டில் இயக்கப்படும்போது ரயில்களில் ஏன் 110 வோல்ட் பவரை மட்டுமே தருகிறார்கள். இதனால் ரயில்வே நிர்வாகத்திற்கு என்ன கிடைக்கும் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.
ரயில்களில் பேட்டரி மூலம் தான் அனைத்து கோட்ச்களுக்கும் பவர் செலுத்தப்படுகிறது. டிசிகரெண்டை ஏசிகரெண்டாக மாற்றி ரயிலில் உள்ள ஃபேன், பல்ப் மற்றும் சார்ஜ் ஏற்றக்கூடிய பிளக் பாயிண்ட்களுக்கெல்லாம் பவர் அனுப்பப்படுகிறது. ரயில் என்பது ஒரு பொதுவான வாகனம் அதேநேரம் மிகப்பெரிய வாகனம் என்பதால் இதில் அதிகமான பயணிகள் பயணிக்கக்கூடும். இதில் சிலர் திருடர்களாகவும் இருக்கக்கூடும். அவர்கள் ரயிலில் உள்ள ஃபேன் பல்பு உள்ளிட்ட கருவிகளை திருடிக் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது.

இந்தத் திருட்டை தடுப்பதற்காக தான் இப்படியாக 110 வோல்ட் கருவிகளை ரயில்களில் பயன்படுத்துகிறார்கள். ரயில்களில் உள்ள ஃபேன் பல்பு போன்ற கருவிகளை திருடிக் கொண்டு சென்றாலும் வெளியில் எங்கேயும் அதை வைத்து பயன்படுத்த முடியாது. அது முழுவதும் 110 வோல்ட் கரெண்டில் இயங்கும் கருவிகள் தான் அதை ரயில் மற்றும் ரயில்வே சார்ந்த விஷயங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
அதேநேரம் இந்த 110 வோல்ட் பவர் கொண்ட சார்ஜர்களில் சார்ஜ் ஏற்றுவது என்பது சற்று சிரமம் தான். ஆனால் ரயில் பயணிகளுக்கு இது செல்போன் லேப்டாப் ஆகியவற்றை அவசர தேவைக்காக சார்ஜ் ஏற்ற மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த சாக்கெட்டில் சார்ஜ் ஏற்றினால் வீட்டில் நாம் சார்ஜ் ஏற்றுவதை விட மெதுவாக தான் சார்ஜ் ஏறும்.

இன்று மக்கள் பயன்படுத்தும் செல்போன் லேப்டாப் போன்ற சாதனங்களின் சார்ஜர்கள் பெரும்பாலும் குறைந்தபட்சம் 100 வோல்ட் பவர் இருந்தாலே போதுமானது என அந்த சார்ஜர்களில் குறிப்பிடப்பட்டிருப்பதை நம்மால் காண தற்போது முடிகிறது. அதனால் பெரும்பாலான செல்போன் சார்ஜர்கள் ரயிலில் வேலை செய்யும்.
ரயிலில் நான் வீட்டில் பயன்படுத்தும் மிக்ஸி கிரைண்டர் போன்ற பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்லும்போது அதை இயக்க வைக்க சார்ஜ் ஏற்றும் சாக்கெட்டை பயன்படுத்தினால் அது இயங்காமல் போக கூட வாய்ப்பு இருக்கிறது. இன்று பயன்படுத்தும் பல மிக்ஸி கிரைண்டர்கள் குறைந்தபட்சம் 210 வோல்ட் பவர் இருந்தால்தான் இயங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.

ரயில்வே நிர்வாகம் 230 வோல்ட்க்கு பதிலாக 110 வோல்ட் வழங்க முக்கியமான காரணம் அதிக மின் செலவாக கூடாது என்பதை விட இதில் உள்ள ஃபேன் பல்ப் ஆகியவற்றை யாரும் திருடி விடக்கூடாது என்பதற்காக தான். இந்த விஷயம் பல திருடர்களுக்கு ஏற்கனவே தெரியும். அதனால் திருடர்கள் யாரும் ரயிலில் உள்ள ஃபேன் பல்ப் ஆகியவற்றை திருடி நேரத்தை வீணடிக்க மாட்டார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரயில்வே நெட்வொர்க் என்பது மிகப்பெரிய நெட்வொர்க்காக இருக்கிறது. இதில் உள்ள ரயில் பெட்டிகளுக்கு எல்லாம் பாதுகாப்பு வழங்குவது என்பது சிரமமான விஷயம்தான். அதற்காக ரயிலில் உள்ள மின்விசிறிகள் மற்றும் லைட்டுகளுக்கு திருடாமல் போவதை தடுக்க ரயில்வே நிர்வாகம் இப்படியான யுத்தியை பயன்படுத்தி உள்ளது நிச்சயம் பாராட்டத்தக்கது தான்.


Click it and Unblock the Notifications









