கோடிக் கணக்கில் பணம் இருந்தாலும் சரி, பெரும் பணக்காரர்கள் எல்லாம் காரை கடனில் தான் வாங்குவார்கள் ஏன் தெரியுமா?

இந்தியாவில் உள்ள பெரும்பாலான அதிக விலை கார்களை பெரும் பணக்காரர்களே வாங்குகின்றனர். அவர்கள் பெரும்பாலும் அந்த காரை வாங்குவதற்கான பணத்தைக் கையில் வைத்திருந்தாலும் அந்த காரை வங்கிக் கடனில் தான் வாங்குகின்றனர். இது ஏன்? இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? விரிவாகக் காணலாம் வாருங்கள்.

கோடிக் கணக்கில் பணம் இருந்தாலும் சரி, பெரும் பணக்காரர்கள் எல்லாம் காரை கடனில் தான் வாங்குவார்கள் ஏன் தெரியுமா . . .

நாம் எல்லோரும் பெரும் பணக்காரர்களால் மட்டும் வாங்க முடிந்த பல கார்களை பார்த்திருப்போம். இந்த கார்களை வாங்குவதை விடுங்கள், இந்த கார்களில் ஒரு நாளாவது பயணித்துவிட மாட்டோமா என நமக்கு எண்ணம் தோன்றும். இந்த கார்களின் விலைகள் எல்லாம் கோடிகளில் இருக்கும், இதில் இரண்டு வகையான கார்கள் இருக்கிறது, ஒன்று லக்ஷ்சரி சொகுசு கார்கள் மற்றொன்று வேகமாகச் செல்லக்கூடிய சூப்பர் கார்கள். இந்த இரண்டு கார்களும் விலை மிக அதிகம் பெரும் பணக்காரர்களால் மட்டுமே வாங்க முடிந்த கார்கள் இவை.

கோடிக் கணக்கில் பணம் இருந்தாலும் சரி, பெரும் பணக்காரர்கள் எல்லாம் காரை கடனில் தான் வாங்குவார்கள் ஏன் தெரியுமா . . .

ஆனால் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? பெரும் பணக்காரர்கள் கூட தாங்கள் வாங்கும் விலை உயர்ந்த காரை கடனில் தான் வாங்குகிறார்கள். அவர்களிடம் அந்த காரை வாங்க போதுமான பணம் இருந்தாலும் சரி அவர்கள் வங்கியில் கடன் வாங்கி தான் அந்த காரை வாங்குவார்கள். நாம் எல்லாம் ஒரு டூவீலர் வாங்க லோன் வாங்குகிறோம் என்றால் அந்த டூவீலரை வாங்குவதற்கான மொத்த பணமும் நம்மிடம் இருக்காது. அந்த பணத்தை நாம் நமக்குக் கிடைக்கும் மாத சம்பளத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டலாம் என்பதால் கடன் வாங்குவோம்.

கோடிக் கணக்கில் பணம் இருந்தாலும் சரி, பெரும் பணக்காரர்கள் எல்லாம் காரை கடனில் தான் வாங்குவார்கள் ஏன் தெரியுமா . . .

கார் வாங்குபவர்களும் அதனால் தான் கார்களை வாங்குவார்கள். ஆனால் பெரும் பணக்காரர்கள் கோடிக் கணக்கான மதிப்பில் உள்ள கார்களை வாங்க வேண்டும் என்றால் தன்னிடம் அதற்கான பணம் இருந்தாலும் கடன் வாங்கித்தான் வாங்குவார்கள். இந்த செய்தி பலருக்குப் புதிதாக இருக்கும். சிலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். ஆனால் பலருக்கு அது ஏன் என்ற உண்மையான காரணம் தெரியாது.

கோடிக் கணக்கில் பணம் இருந்தாலும் சரி, பெரும் பணக்காரர்கள் எல்லாம் காரை கடனில் தான் வாங்குவார்கள் ஏன் தெரியுமா . . .

இந்தியாவில் சூப்பர் கார்களை விற்பனை செய்யும் முக்கியமான நிறுவனம் லாம்போர்கினி இந்தியா, இந்நிறுவனம் இந்திய சிஇஓ ஷாரத் அகர்வால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டார். அந்நிறுவனம் விற்பனை செய்துள்ள ஒட்டு மொத்த காரில் 60-65 சதவீதமான கார்கள் பைனான்ஸ் மூலமே வாங்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டிருந்தார்.

கோடிக் கணக்கில் பணம் இருந்தாலும் சரி, பெரும் பணக்காரர்கள் எல்லாம் காரை கடனில் தான் வாங்குவார்கள் ஏன் தெரியுமா . . .

இது மட்டுமல்ல இவர் மற்றொரு முக்கியமான தகவலையும் வெளியிட்டார். அந்நிறுவனத்தின் கார்களை வாங்குபவர்கள் பெரும்பாலும் பெரும் தொழிற்முதலாளிகள் தான் வாங்குகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் லாம்போர்கினி காரை வாங்குவது மிகவும் அரிது. ஆனால் ஒரு பெரும் நிறுவனத்தை நடத்தி வரும் முதலாளிகள் லாம்போர்கினி கார்களை வாங்குகின்றனர். எனக் குறிப்பிட்டுள்ளார்.

கோடிக் கணக்கில் பணம் இருந்தாலும் சரி, பெரும் பணக்காரர்கள் எல்லாம் காரை கடனில் தான் வாங்குவார்கள் ஏன் தெரியுமா . . .

இந்த போக்கு இந்தியாவில் தான் இருக்கிறது. வெளிநாடுகளில் ஒரு பெரும் நிறுவனத்தின் சிஇஓக்களும் லாம்போர்கினி கார்களை வாங்குகின்றனர். ஆனால் இந்தியாவில் பெரும் முதலாளிகள் கார்களை வாங்கினாலும் 60-65 சதவீதம் பேர் அதைக் கடனில் வாங்குவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பலர் இதை வரிச்சலுகை பெற அல்லது, கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற என்று எல்லாம் சொல்லுவார்கள். ஆனால் அது எதுவும் உண்மை கிடையாது.

கோடிக் கணக்கில் பணம் இருந்தாலும் சரி, பெரும் பணக்காரர்கள் எல்லாம் காரை கடனில் தான் வாங்குவார்கள் ஏன் தெரியுமா . . .

சொல்லப்போனால் மொத்தமாகக் காசு கொடுத்து வாங்குவதை விடக் கடனில் வாங்கினால் தான் அதிகப் பணம் செலவாகும், இப்படியாக கார்களை வாங்குவது மூலம் கருப்புப் பணத்தை வெள்ளை பணமாக மாற்றெல்லாம் முடியும். அதுவும் கடனில் வாங்குவதால் அது சாத்தியமே இல்லை. அவர் காருக்காக கட்டும் பணம் முழுவதும் அரசு கணக்கில் எடுத்துக்கொள்ளும். அதனால் உண்மையான காரணம் இது எல்லாம் இல்லை.

கோடிக் கணக்கில் பணம் இருந்தாலும் சரி, பெரும் பணக்காரர்கள் எல்லாம் காரை கடனில் தான் வாங்குவார்கள் ஏன் தெரியுமா . . .

பெரும் தொழிலதிபர்களுக்குப் பணத்தின் மதிப்பு தெரியும். ஒரு பணத்தை எதில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை அவர்கள் விரல் நுனியில் வைத்திருப்பார்கள். இப்பொழுது ரூ5 கோடி செலவு செய்து ஒரு சூப்பர் காரை ஒருவர் வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம் அவர் அந்த காருக்காக கொடுத்த 5 கோடி அந்த காரில் முடங்கி விடுகிறது. அந்த 5 கோடி அடுத்து அவருக்கு எந்த வித சம்பாத்தியத்தையும் கொடுக்கப்போவதில்லை. மாறாக அந்த காரின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டு தான் போகும்.

கோடிக் கணக்கில் பணம் இருந்தாலும் சரி, பெரும் பணக்காரர்கள் எல்லாம் காரை கடனில் தான் வாங்குவார்கள் ஏன் தெரியுமா . . .

இப்பொழுது தன் ஆசைக்காக ஒரு சூப்பர் காரையும் வாங்க வேண்டும். தன்னுடைய பணமும் மொத்தமும் வீணாகிவிட கூடாது என்ற சூழ்நிலை இருக்கும். இந்த இடத்தில் ஒரு தொழிலதிபர் எப்படி யோசிப்பார் என்றால் இந்த ரூ5 கோடியை வங்கியில் டெப்பாசிட் செய்தாலே ஆண்டிற்கு ரூ30 லட்சம் வரை வட்டி கிடைக்கும், வேறு எதில் முதலீடு செய்தால் அதிகமான பணம் ரிட்டர்ன் கிடைக்கும் என யோசிப்பார்.

கோடிக் கணக்கில் பணம் இருந்தாலும் சரி, பெரும் பணக்காரர்கள் எல்லாம் காரை கடனில் தான் வாங்குவார்கள் ஏன் தெரியுமா . . .

அவரிடம் ஏற்கனவே அதற்கான பல யோசனைகள் இருக்கும், இப்பொழுது காரை வங்கியில் கடன் வாங்கி வாங்குவதற்காகப் பேசுவார். அவர் வங்கியில் கடனை அடைக்க மாதம் இவ்வளவு தவணை கட்ட வேண்டும் எனக் கூறுவார்கள். இந்த பணத்தை எந்த தொழிலில் முதலீடு செய்தால் அந்த மாத தவணைக்குச் சரியாகவோ அல்லது அதை விட அதிகமாகவோ ரிட்டன் கிடைக்கும் எனக் கணக்கிடுவார்.

கோடிக் கணக்கில் பணம் இருந்தாலும் சரி, பெரும் பணக்காரர்கள் எல்லாம் காரை கடனில் தான் வாங்குவார்கள் ஏன் தெரியுமா . . .

அவர் அந்த பணத்தை அதில் முதலீடு செய்துவிட்டு காரை கடனில் வாங்கிவிடுவார். அதன் பின் அந்த காருக்கான மாத தவணை அவர் முதலீடு செய்த இடத்திலிருந்து கிடைக்கும் வருவாயிருந்து எடுத்துக் கட்டி விடுவார். ஆக மொத்தம் அவர் காரை கிட்டத்தட்ட இலவசமாக வாங்கியது போல கணக்கு. ஒரு கட்டத்தில் காருக்கான மொத்த மாத தவணையும் முடிந்த பிறகும், இவர் முதலீடு செய்த இடத்திலிருந்து இவருக்கு லாபம் வந்து கொண்டே தான் இருக்கும்.

கோடிக் கணக்கில் பணம் இருந்தாலும் சரி, பெரும் பணக்காரர்கள் எல்லாம் காரை கடனில் தான் வாங்குவார்கள் ஏன் தெரியுமா . . .

ஒரு பெரும் தொழிலதிபர் இப்படி தான் யோசிப்பார். எப்படி ஒரு விஷயத்தைக் கையில் நஷ்டம் இல்லாமல் செலவு செய்து வருமானத்தைப் பெருக்குவது என யோசனை செய்வார். அதனால் தான் பெரும் பணக்காரர்கள் எல்லாம் கார்களில் நேரடியாக தங்கள் பணத்தை முதலீடு செய்யாமல்,கையில் காசு இருந்தாலும் அந்த காரை அவர் வங்கியில் கடன் வாங்கியே வாங்குகின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why are millionaires buying cars in loans even though they have enough cash
Story first published: Tuesday, October 4, 2022, 10:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X