விமானங்களின் வெள்ளை நிற ரகசியம்... வேறு வண்ணத்தில் பெயிண்ட் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?

விமானங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்படுகின்றன? என்பது குறித்து சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானங்களின் வெள்ளை நிற ரகசியம்... வேறு வண்ணத்தில் பெயிண்ட் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?

விமானங்களும், விமான பயணங்களும் என்றைக்குமே ஆச்சரியம் நிறைந்தவைதான். விமானங்கள் வானில் பறக்கும் சப்தத்தை கேட்டால், உயராத தலைகள் நிச்சயமாக இருக்கவே முடியாது. விமானங்கள் மற்றும் விமான பயணங்கள் தொடர்பான தகவல்களும் கூட நமக்கு பல்வேறு ஆச்சரியங்களை கொடுக்கின்றன. ஆனால் விமானங்களை பற்றிய ஒரு தகவல் அனேகமாக உங்களுக்கு தெரிந்திருக்காது.

விமானங்களின் வெள்ளை நிற ரகசியம்... வேறு வண்ணத்தில் பெயிண்ட் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?

உலகில் தற்போது செயல்பாட்டில் உள்ள பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். பிரிட்டீஷ் ஏர்வேஸ் ஆகட்டும் அல்லது ஏர் இந்தியா ஆகட்டும் ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களின் விமானங்களும் வெள்ளை நிறத்தில்தான் காட்சியளிக்கின்றன. அது ஏன்? விமானங்களுக்கு என வேறு வண்ணமே கிடைக்கவில்லையா என என்றாவது நீங்கள் யோசித்துள்ளீர்களா?

விமானங்களின் வெள்ளை நிற ரகசியம்... வேறு வண்ணத்தில் பெயிண்ட் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?

யோசித்திருந்தால் நல்லது. உங்களின் சந்தேகத்திற்கு இந்த பதிவு விடை அளிக்கிறது. விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு உண்மையில் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. விமானங்களில் எண்ணெய் கசிவு, விரிசல் போன்று ஏதேனும் இருந்தால் அதை எளிதாக கண்டறிய வெள்ளை நிறம்தான் உதவி செய்கிறது. ஒரு விமானத்தில் இருந்து மற்றொரு விமான நிலையத்திற்கு இதன் மூலம் நீங்கள் எளிதான பயணிக்கலாம்.

விமானங்களின் வெள்ளை நிற ரகசியம்... வேறு வண்ணத்தில் பெயிண்ட் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?

வெள்ளை நிறம் விமானங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும். விமானங்கள் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்படுவதற்கு இதுவே மிக முக்கியமான காரணம். வெள்ளையை தவிர வேறு ஏதேனும் வண்ணத்தில் விமானங்களை பெயிண்ட் செய்தால், அது சூரிய ஒளியை அதிகம் உறிஞ்சி சூட்டை கிளப்பி விட்டு விடும். இதை நீங்கள் விரும்புவீர்களா?

விமானங்களின் வெள்ளை நிற ரகசியம்... வேறு வண்ணத்தில் பெயிண்ட் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?

எனவேதான் விமானங்கள் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்படுகின்றன. வெப்பத்தை குறைப்பதுடன் மட்டுமல்லாது சூரிய கதிர்வீச்சுகளால் சேதாரம் உண்டாகும் வாய்ப்புகளையும் வெள்ளை நிறம் குறைத்து விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விமானங்களுக்கு வெள்ளை நிறம் அடிக்க மற்றொரு முக்கியமான காரணம் சிக்கனம்.

விமானங்களின் வெள்ளை நிற ரகசியம்... வேறு வண்ணத்தில் பெயிண்ட் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?

அதாவது கூடுதல் வண்ணங்களை பயன்படுத்துவதால் விமானத்தின் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. உண்மைதான். பெயிண்ட் காரணமாக ஒரு விமானத்தின் எடையானது 273 முதல் 544 கிலோகிராம் வரை அதிகரிக்கிறது. இது உலகப்புகழ் பெற்ற போயிங் நிறுவனத்தினுடைய அதிகாரி ஒருவர் தெரிவித்த தகவல் ஆகும்.

விமானங்களின் வெள்ளை நிற ரகசியம்... வேறு வண்ணத்தில் பெயிண்ட் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?

விமானத்தின் எடை கூடுதலாக இருந்தால் அதிகப்படியான எரிபொருள் தேவைப்படும். 544 கிலோ என்பது 8 பயணிகளுக்கு சமமானது. ஆனால் வெள்ளை நிறம் மூலம் இந்த பிரச்னைகளை ஓரளவிற்கு சமாளிக்கலாம். எனவே சிக்கனம் காரணமாகவும் விமான நிறுவனங்கள் வெள்ளை நிறத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.

விமானங்களின் வெள்ளை நிற ரகசியம்... வேறு வண்ணத்தில் பெயிண்ட் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?

ஒரு வேளை சொந்தமாக ஒரு விமானம் வைத்திருக்கும் அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைத்தால், எக்காரணத்தை கொண்டும் அதற்கு பிரகாசமான வண்ணத்தை பூசி விடாதீர்கள். ஏனெனில் விமானத்தை விற்கும் சூழ்நிலை ஏற்பட்டால், நீங்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். விமான நிறுவனங்கள் வெள்ளை நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதே இதற்கு காரணம்.

விமானங்களின் வெள்ளை நிற ரகசியம்... வேறு வண்ணத்தில் பெயிண்ட் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?

விமானங்களை வைத்து பராமரிப்பதற்கு அதிக செலவு ஆகும். ஏதேனும் ஒரு நிறுவனம், உங்களிடம் இருந்து விமானத்தை வாங்கினால் அதற்கு மீண்டும் வெள்ளை நிறத்தை பெயிண்ட் செய்ய வேண்டும். இதற்கு தனியாக செலவு செய்ய வேண்டுமே என நினைத்து உங்களது பிரகாசமான வண்ண விமானத்தை வாங்குவதை விமான நிறுவனங்கள் தவிர்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
The Reasons Why Planes Are Always Painted White Colour. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X