தமிழகத்தில் ஆட்டோக்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன்? உங்கள் நீண்ட நாள் சந்தேகத்திற்கு விடை இதுதான்

இன்றைய நவீன கால கட்டத்தில் ஓலா மற்றும் உபேர் போன்ற 'கேப்' நிறுவனங்கள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி விட்டாலும் கூட, தமிழகத்தில் ஆட்டோக்கள் அதற்கு சற்றும் சளைக்காமல் கடுமையான சவாலை அளித்து வருகின்றன. தமிழகத்திற்கும், ஆட்டோக்களுக்கும் எப்போதும் மிக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது.

தமிழகத்தில் ஆட்டோக்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன்? உங்கள் நீண்ட நாள் சந்தேகத்திற்கு விடை இதுதான்

'நான் ஆட்டோக்காரன்' பாடலை முணுமுணுக்காத உதடுகள் தமிழ் நாட்டில் இருக்க வாய்ப்பே இல்லை என்று கூட சொல்லலாம். பாட்ஷாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி வேட்டைக்காரனில் இளைய தளபதி விஜய் வரை தமிழ் சினிமாவின் பல முன்னணி கதாநாயகர்களும் ஏற்று நடித்த கெத்தான ரோல் ஆட்டோ டிரைவர்!

தமிழகத்தில் ஆட்டோக்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன்? உங்கள் நீண்ட நாள் சந்தேகத்திற்கு விடை இதுதான்

அதுவும் பாட்ஷா ரிலீஸ் செய்யப்பட்ட சமயத்தில், ஆட்டோ டிரைவர் ஆக வேண்டும் என சில இளைஞர்கள் வெறி கொண்டு சுற்றிக்கொண்டிருந்ததாக செய்தி. டாக்டர், ஐஏஎஸ் வரிசையில் ஆட்டோ டிரைவர் என்ற லட்சியமும் அப்போது சேர்ந்திருந்தது. ஆனால் தமிழகத்தில் தற்போது உள்ள ஆட்டோ டிரைவர்கள் பெரும்பாலானோர் கதாநாயகர்களாக இருப்பதில்லை.

தமிழகத்தில் ஆட்டோக்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன்? உங்கள் நீண்ட நாள் சந்தேகத்திற்கு விடை இதுதான்

பணப்பையை அதன் உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைத்த ஆட்டோ டிரைவரால் நெகிழ்ச்சி என்பது போன்ற செய்திகளை நாம் அவ்வப்போது பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இத்தகைய செய்திகள் மிக அரிதாகதான் வருகின்றன. அதே நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் பொதுமக்களிடம் இருந்து பணம் கறக்கும் வில்லன்களாகவே இருக்கின்றனர்.

தமிழகத்தில் ஆட்டோக்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன்? உங்கள் நீண்ட நாள் சந்தேகத்திற்கு விடை இதுதான்

ஆட்டோக்கள் என்பவை தமிழகத்தின் மிக முக்கியமான போக்குவரத்து முறைகளில் ஒன்றாக திகழ்கின்றன. இங்கு ஆட்டோக்களில் பயணம் செய்யாதவர்கள் எவரும் இருக்கவே முடியாது. நீங்கள் எந்த ஊரில் சென்று இறங்கினாலும், முதலில் உங்களை அரவணைப்பது என்னவோ ஆட்டோ டிரைவர்கள்தான். ஆனால் அவர் அரவணைத்தாரா? இல்லையா? என்பது அவர் கட்டணத்தை சொன்ன பிறகுதான் தெரியும்.

தமிழகத்தில் ஆட்டோக்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன்? உங்கள் நீண்ட நாள் சந்தேகத்திற்கு விடை இதுதான்

நீங்கள் ஆட்டோவில் பயணம் செய்துள்ளீர்களா? என கேட்டால் அனைவரும் கோரஸாக 'ஆம்' என்றுதான் சொல்வீர்கள். அதுவே மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோவில் என கேட்டால்? அமைதி நிலவுவதை உணர முடிகிறது. ஆம், தமிழகத்தில் மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோக்களை பார்ப்பது என்பது அரிதான ஒரு விஷயமாக மாறி விட்டது.

தமிழகத்தில் ஆட்டோக்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன்? உங்கள் நீண்ட நாள் சந்தேகத்திற்கு விடை இதுதான்

மீட்டர் இல்லாத ஆட்டோவில் பயணித்தால், அதன் டிரைவர் கேட்கும் கட்டணத்தை நீங்கள் கொடுத்துதான் ஆக வேண்டும். இது எழுதப்படாத விதி. கட்டணத்தை கேட்டு உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. ஆனால் இதற்கு விதிவிலக்காக மீட்டர் இல்லாவிட்டாலும் கூட நியாயமான கட்டணம் வசூலிக்கும் ஒரு சில நல்ல ஆட்டோ டிரைவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

தமிழகத்தில் ஆட்டோக்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன்? உங்கள் நீண்ட நாள் சந்தேகத்திற்கு விடை இதுதான்

மற்றொரு விஷயத்தையும் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோக்களும் கூட தமிழகத்தில் இயங்கி கொண்டுதான் உள்ளன. ஆம், உண்மைதான். மலைக்கோட்டை மாநகராம் திருச்சியில் 'உங்கள் மீட்டர் ஆட்டோ' என்ற பெயரில், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் ஆட்டோக்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன்? உங்கள் நீண்ட நாள் சந்தேகத்திற்கு விடை இதுதான்

திருச்சி மாநகர் முழுவதும் 'உங்கள் மீட்டர் ஆட்டோ' குழு 127 ஆட்டோக்களை இயக்கி வருகிறது. நியாயமான கட்டணம் வசூலிப்பதால், பொதுமக்கள் மத்தியில் 'உங்கள் மீட்டர் ஆட்டோவிற்கு' அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட பொறாமையில் மீட்டர் பொருத்தாத ஆட்டோ டிரைவர்கள் வயித்தெரிச்சலில் உள்ளதாக தகவல்.

தமிழகத்தில் ஆட்டோக்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன்? உங்கள் நீண்ட நாள் சந்தேகத்திற்கு விடை இதுதான்

இந்த சூழலில் 'உங்கள் மீட்டர் ஆட்டோ' குழுவிற்கு, மீட்டர் பொருத்தாத ஆட்டோ டிரைவர்கள் தற்போது தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளனர். மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோக்களில் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது. நியாயமான கட்டணம் என்பதால், அவர்களுக்கு பொதுமக்களின் ஆதரவும் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் ஆட்டோக்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன்? உங்கள் நீண்ட நாள் சந்தேகத்திற்கு விடை இதுதான்

ஆனால் மீட்டர் பொருத்தாத ஆட்டோ டிரைவர்கள் சிலர், அவர்களின் டிரிப்களுக்கு தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளனர். மீட்டர் ஆட்டோ குழுவின் தலைவர் சுந்தரபாண்டியன் இதுகுறித்து கூறுகையில், ''மீட்டர் பொருத்தி கட்டணம் வசூலிப்பதால், ஸ்ரீரங்கம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட ஸ்டேண்டுகளில், எங்கள் டிரைவர்களுக்கு மீட்டர் இல்லாத ஆட்டோ டிரைவர்களால் தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஆட்டோக்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன்? உங்கள் நீண்ட நாள் சந்தேகத்திற்கு விடை இதுதான்

பயணிகளை ஏற்றும்போது எங்களுக்கு அச்சுறுதலை கொடுக்கின்றனர். குறைவான கட்டணம் என்பதால், பொதுமக்கள் எங்களுக்குதான் முன்னுரிமை அளிக்கின்றனர். ஆனால் மீட்டர் இல்லாத ஆட்டோ டிரைவர்கள், எங்கள் டிரைவர்களின் சாவிகளை பிடுங்கி கொள்வது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன'' என்றார்.

தமிழகத்தில் ஆட்டோக்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன்? உங்கள் நீண்ட நாள் சந்தேகத்திற்கு விடை இதுதான்

மீட்டர் இல்லாத ஆட்டோக்களுடன் ஒப்பிடுகையில், மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோக்களில் வசூலிக்கப்படும் கட்டணம் 30 முதல் 50 சதவீதம் வரை குறைவாக உள்ளது. எனவேதான் மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோக்களை மக்கள் விரும்புகின்றனர். ஆனால் இப்படி ஒரு பிரச்னை நடந்து கொண்டிருக்கும் சமயத்திலும், ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் கண்டும், காணாமல் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் ஆட்டோக்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன்? உங்கள் நீண்ட நாள் சந்தேகத்திற்கு விடை இதுதான்

ஆட்டோக்களில் மீட்டர்கள் பொருத்தப்படுவதை ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளுக்கு உள்ளது. ஆனால் பொதுமக்களை நேரடியாக பாதிக்கக்கூடிய இந்த விஷயத்தில், அவர்கள் அமைதியாக இருப்பது ஏன் என தெரியவில்லை என்று மீட்டர் பொருத்தி ஆட்டோக்களை இயக்குபவர்கள் புலம்புகின்றனர்.

தமிழகத்தில் ஆட்டோக்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன்? உங்கள் நீண்ட நாள் சந்தேகத்திற்கு விடை இதுதான்

இதுகுறித்து ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ''மீட்டர் பொருத்துவதை வலியுறுத்துவதற்காக அனைத்து ஆட்டோ டிரைவர்களையும் அழைத்து கூட்டம் நடத்தப்படும். இந்த பிரச்னை விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும்'' என்றனர். விரைவில் முடிவிற்கு வந்தால் அது மக்களுக்கு நல்லது.

தமிழகத்தில் ஆட்டோக்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன்? உங்கள் நீண்ட நாள் சந்தேகத்திற்கு விடை இதுதான்

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ டிரைவர்கள் மீது உங்களுக்கு வெறுப்பு இருக்கலாம். ஆனால் தமிழகத்தை சேர்ந்த ஒரு சில ஆட்டோ டிரைவர்களின் திறமை உங்களுக்கு மெய் சிலிர்ப்பை ஏற்படுத்தும். ஆம், தமிழ்நாட்டில் ஆட்டோக்களில் ஸ்டண்ட் செய்யும் ஏராளமான டிரைவர்கள் நிறைந்துள்ளனர். அப்படி ஒருவர் ஸ்டண்ட் செய்யும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

அது சரி, தமிழ்நாட்டில் ஆட்டோக்கள் ஏன் மஞ்சள் நிறத்தில் உள்ளது என எப்போதாவது யோசித்துள்ளீர்களா? நிச்சயம் ஒரு முறையாவது யோசித்திருப்பீர்கள். சிலருக்கு அது நீண்ட நாள் சந்தேகமோக கூட இருக்கலாம். அதற்கு இனி விடை காணலாம். தமிழகம் மட்டுமல்ல. ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் கூட ஆட்டோக்களின் நிறம் மஞ்சள்தான்.

தமிழகத்தில் ஆட்டோக்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன்? உங்கள் நீண்ட நாள் சந்தேகத்திற்கு விடை இதுதான்

இது தொடர்பான சட்டங்கள் உருவாக்கப்பட்டபோது ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் (கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆந்திரா, தெலங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்டது) தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தது. அதன் கட்சி கொடியில் மஞ்சள் நிறம் இருக்கும். அதேபோல் தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தது.

தமிழகத்தில் ஆட்டோக்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன்? உங்கள் நீண்ட நாள் சந்தேகத்திற்கு விடை இதுதான்

திமுகவிற்கும், மஞ்சள் நிறத்திற்கும் உள்ள தொடர்பை தமிழகத்தில் யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. திமுக மஞ்சள் நிறத்தை அதிகம் பயன்படுத்தும். அதன் தலைவராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கூட மஞ்சள் சால்வையை பயன்படுத்தும் வழக்கத்தை கொண்டிருந்தார். இங்கு ஆட்டோக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்க இதுவே காரணம் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். அதே சமயம் சிஎன்ஜி மூலம் இயங்கும் ஆட்டோக்கள் பசுமையை உணர்த்தும் விதத்தில், பச்சை நிறத்தில் இருக்கும்.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 6, 2019, 18:37 [IST]
English summary
Why Autos Are Yellow In Colour In Tamil Nadu. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+