சொகுசு மட்டும் காரணமில்லை பணக்காரர்கள் பிஸ்னஸ் வகுப்பில் பயணிக்க இப்படி ஒரு காரணம் கூட இருக்குதா?

விமானத்தில் பயணிக்கும் தொழிலதிபர்கள் பலர் பிஸ்னஸ் வகுப்பிலேயே பயணிக்கிறார்கள். ஆனால் லாபம் மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்கள் குறைந்த விலை டிக்கெட்டை விட்டுவிட்டு அதிக விலை டிக்கெட்டில் பயணிக்கிறார்களே என்ன காரணம் தெரியுமா? முழு விபரம் இதோ.

சொகுசு மட்டும் காரணமில்லை பணக்காரர்கள் பிஸ்னஸ் வகுப்பில் பயணிக்க இப்படி ஒரு காரணம் கூட இருக்குதா ?

நாம் எல்லோரும் ஒரு முறையாவது விமானத்தில் பயணித்திருப்போம். விமானத்தில் நீங்கள் பயணிக்க டிக்கெட் புக் செய்யும் போது ஒரே விமானத்தில் பல வகையாக கிளாஸ்களில் டிக்கெட் இருப்பதை கவனித்திருப்பீர்கள். விமானங்களில் ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு வசதிகள் இருப்பதை அதில் குறிப்பிட்டிருப்பார்கள்.

சொகுசு மட்டும் காரணமில்லை பணக்காரர்கள் பிஸ்னஸ் வகுப்பில் பயணிக்க இப்படி ஒரு காரணம் கூட இருக்குதா ?

பெரும்பாலும் பலர் எகனாமிக் வகுப்பில் பயணித்திருப்பீர்கள். சிலர் பிஸ்னஸ் கிளாசில் பயணித்திருப்போம். பிஸ்னஸ் வகுப்பில் டிக்கெட் எகனாமிக் வகுப்பை விட மிக அதிக விலையில் இருக்கும். பெரிய பெரிய பணக்காரர்கள், செல்வந்தர்கள், தொழிலதிபர்கள் தான் இதில் பயணிப்பதைப் பார்த்திருப்போம்.

சொகுசு மட்டும் காரணமில்லை பணக்காரர்கள் பிஸ்னஸ் வகுப்பில் பயணிக்க இப்படி ஒரு காரணம் கூட இருக்குதா ?

ஆனால் பலருக்கு இந்த வகுப்பைப் பார்த்ததும் ஒரு சந்தேகம் வந்திருக்கும். ஒரு தொழிலில் முக்கியமான விஷயம் தேவையில்லாத செலவுகளைக் குறைக்க வேண்டும் அப்பொழுது தான் லாபம் பெருகும். ஒரு தொழிலின் வெற்றியே சிக்கனத்தில் தான் இருக்கிறது. குறைந்த விலையில் டிக்கெட் புக் செய்தால்தான் தொழிலதிபர்கள் லாபம் சம்பாதிக்க முடியும். அதையும் மீறி ஏன் அதிக விலையில் உள்ள பிஸ்னஸ் வகுப்பில் தொழிலதிபர்கள் டிக்கெட் புக் செய்கிறார்கள் என் சந்தேகம் பலருக்கு ஏற்படும். இதைப் பற்றித் தெளிவாக விளக்குவதே இந்த பதிவு.

சொகுசு மட்டும் காரணமில்லை பணக்காரர்கள் பிஸ்னஸ் வகுப்பில் பயணிக்க இப்படி ஒரு காரணம் கூட இருக்குதா ?

பொதுவாக ஒரு விமானத்தை உருவாக்கும் போது பெரும் பகுதியிலான இடம் எகனாமிக் வகுப்பிற்கே வழங்கப்படுகிறது. சிறிய அளவிலான இடம் பிஸ்னஸ் வகுப்பிற்கு வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு தொழிலதிபர் பிஸ்னஸ் வகுப்பில் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கி செல்கிறார் என்றால் அதில் காரணம் இல்லாமல் இருக்காது.

சொகுசு மட்டும் காரணமில்லை பணக்காரர்கள் பிஸ்னஸ் வகுப்பில் பயணிக்க இப்படி ஒரு காரணம் கூட இருக்குதா ?

பொதுவாகத் தொழிலதிபர்கள் ஒரு நாளுக்கு 24 மணி நேரம் பத்தாது என்ற ரீதியில் தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருப்பவர்கள். இவர்கள் பெரும்பாலும் விமான பயணத்தில் தான் தாங்கள் முடிக்க வேண்டிய வேலைகள் அல்லது சந்திப்புகளை நடத்த விரும்புவார்கள். இப்படியாகச் சந்திப்புகள் அல்லது வேலைளை செய்ய எகனாமிக் வகுப்பு வசதியாக இருக்காது. ஆனால் பிஸ்னஸ் வகுப்பில் தனிமையில் இருக்கலாம், சந்திப்புகளை வசதியாக நடத்தலாம். இதன் காரணமாக விலை அதிகமாக இருந்தாலும் பிஸ்னஸ் வகுப்பைப் பயணத்திற்காகத் தேர்வு செய்கிறார்கள்.

சொகுசு மட்டும் காரணமில்லை பணக்காரர்கள் பிஸ்னஸ் வகுப்பில் பயணிக்க இப்படி ஒரு காரணம் கூட இருக்குதா ?

இது ஒரு காரணம் என்றால் மற்றொரு காரணமும் இருக்கிறது. பொதுவாக விமானங்களில் எகனாமிக் வகுப்பில் டிக்கெட்டை துரிதமாக விற்பனை செய்ய விமான நிறுவனம் முயற்சி செய்யும் இதற்காகப் பல யுக்திகளைச் செய்யும். எப்படியாவது அனைத்து டிக்கெட்களையும் விற்பனை செய்யும் நோக்கில் இருக்கும் இது பெரும்பாலான நேரங்களில் நடந்தும் விடும்.

சொகுசு மட்டும் காரணமில்லை பணக்காரர்கள் பிஸ்னஸ் வகுப்பில் பயணிக்க இப்படி ஒரு காரணம் கூட இருக்குதா ?

இப்படியாக சில நேரங்களில் குறிப்பிட்ட விமானத்தில் அவசரமாகக் கடைசி நேரத்தில் பயணிக்க வேண்டும் என்றால் டிக்கெட் இல்லாமல் போகும். ஆனால் விமானத்தின் பிஸ்னஸ் வகுப்பு டிக்கெட்கள் எல்லாம் அவ்வளவு எளிதாக காலியாகாது அதனால் கடைசி நேரத்தில் கூட டிக்கெட் எடுக்க முடியும். தொழிலதிபர்கள் அவசரக் காலத்தில் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றால் அதிக லாபம் கிடைக்கும் .

சொகுசு மட்டும் காரணமில்லை பணக்காரர்கள் பிஸ்னஸ் வகுப்பில் பயணிக்க இப்படி ஒரு காரணம் கூட இருக்குதா ?

இதைக் கருதி அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கத் தயங்க மாட்டார்கள். விமானம் கிளம்புவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு கூட இந்த டிக்கெட்டை வாங்க முடியும். கடைசி நேர அவசர பயணம் செய்பவர்களுக்கு இந்த பிஸ்னஸ் கிளாஸ் டிக்கெட் பயனுள்ளதாக இருக்கும். இது தான் ஒரு பிஸ்னஸ் கிளாஸ் டிக்கெட்டை தொழிலதிபர்கள் தேர்வு செய்வதற்கான முக்கியமான காரணம்.

சொகுசு மட்டும் காரணமில்லை பணக்காரர்கள் பிஸ்னஸ் வகுப்பில் பயணிக்க இப்படி ஒரு காரணம் கூட இருக்குதா ?

அடுத்தாக இந்த பிஸ்னஸ் கிளாஸ் டிக்கெட்களை தொழிலதிபர்கள் மட்டுமல்ல பிரபலங்களும் அதிகமாக இந்த வகுப்பு டிக்கெட்டில் தான் பயணம் செய்வார்கள். இதற்குக் காரணம் தனிமை, எகனாமிக் வகுப்பில் ஏராளமான மனிதர்கள் பயணிப்பார்கள். இதில் பிரபலங்கள் பயணித்தால் தேவையில்லாத குழப்பம் ஏற்படும் என்பதால் இந்த வகுப்பில் பயணிப்பார்கள்.

சொகுசு மட்டும் காரணமில்லை பணக்காரர்கள் பிஸ்னஸ் வகுப்பில் பயணிக்க இப்படி ஒரு காரணம் கூட இருக்குதா ?

விமானத்தின் எமிஷன் குறித்த ஒரு தகவலும் இருக்கிறது. பொதுவாக விமானத்தின் எடையை பொறுத்துத்தான் அதன் எமிஷன் இருக்கும். விமானத்தின் எடை என்பது எகனாமிக் வகுப்பில் கூடும் எகனாமிக் வகுப்பில் 3 சீட்கள் அமைக்கப்படும் இடத்தில் பிஸ்னஸ் வகுப்பில் ஒரு சீட் அமைக்கப்படும். எகனாமிக் வகுப்பில் 3 பயணிகளின் எடை, முற்றும் அவர்களின் லக்கேஜை கணக்கிட்டால் பிஸ்னஸ் வகுப்பில் ஒரு பயணி, அவருக்கான சொகுசான சீட், மற்றும் அவரது லக்கேஜ் என 3 பயணிகளின் பாதி தான் இதில் இருக்கும். அதனால் எமிஷனை பொருத்தவரை பிஸ்னஸ் கிளாசில் பயணிப்பதுதான் எமிசன் குறைவாக ஏற்படும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why Businessman choose the business class to fly on airplane
Story first published: Monday, August 8, 2022, 18:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X