மனைவியை விட கார்தான் பாஸ் எப்பவும் பெஸ்ட்... இந்த விஷயம் முன்னாடியே தெரியாம போச்சே கடவுளே...
உங்கள் மனைவியை விட உங்கள் கார்தான் பாஸ் எப்பவும் பெஸ்ட். அது ஏன்? என்பதற்கான காரணங்களை இங்கே வழங்கியுள்ளோம். (பி.கு: இது வேடிக்கையான பதிவு மட்டுமே. யாரும் காண்டாகி விட வேண்டாம்).

1. நீங்கள் உங்கள் காரை அடித்தால், அது கண்டிப்பாக உங்களை திருப்பி அடிக்காது. ஸோ, பயப்படாம தைரியமா அடிக்கலாம்.
2. உங்கள் காரை நீங்கள் அடிக்கும்பட்சத்தில், அது கோபித்து கொண்டு அப்பா வீட்டிற்கும் செல்லாது.
3. உங்கள் வீட்டிற்கு வரும் அம்மாவுடன் உங்கள் கார் நிச்சயமாக சண்டை போடவே போடாது.

4. நீங்கள் என்ன சொன்னாலும் உங்கள் கார் நம்பும். மனைவி அப்படியா? எவ்ளோ க்ராஸ் கொஸ்டீன்.
5. 'நான்தான் அப்பவே சொன்னனே' என சொல்லி உங்கள் கார் ஒருபோதும் உங்களை குத்தி காட்டாது.
6. 'நீங்க எங்க இருக்கீங்க?' என அடிக்கடி கேட்டு உங்கள் கார் உங்களை ஒருபோதும் நச்சரிக்காது.

7. உங்கள் காரின் முன்னிலையில் நீங்கள் மற்றொரு காரை உற்று உற்று பார்த்தாலும் அதைப்பற்றி உங்கள் கார் கவலைப்படாது.
8. உங்கள் காரை நீங்கள் உங்கள் கண்ட்ரோலில் வைத்திருக்கலாம். ஆனால் மனைவியிடம் நீங்கள்தான் கண்ட்ரோலில் இருக்க வேண்டும்.
9. எப்படி கையாள வேண்டும் என்ற மேனுவலுடன் வருவது கார்களின் தனிச்சிறப்பு. ஆனால் மனைவியை எப்படி கையாள்வது? என்பது இன்னும் பலருக்கும் புரியாத புதிர்.

10. உங்கள் கார் எப்போதும் கணிக்ககூடியதான் இருக்கும். உங்கள் மனைவி?
11. உங்கள் காரின் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க முடியும். மனைவியின் பிரச்னைகளை?
12. நீங்கள் குடித்து விட்டு வந்தால், உங்கள் கார் உங்களுடன் சண்டை போடாது.

13. உங்கள் கார் உங்களிடம் எப்போதும் விலை உயர்ந்த நகை, புடவைகளை கேட்கவே கேட்காது.
14. உங்கள் தொப்பையை பார்த்து உங்கள் கார் ஒருபோதும் சிரிக்காது.
15. உங்கள் கார் தூக்கத்தில் குறட்டை விடாது.

16. முரண்பாடான மெசேஜ்களை அனுப்பி உங்கள் கார் உங்களை ஒருபோதும் எரிச்சலூட்டாது.
17. உங்கள் காரால் எப்போதும் இளமையாகவே இருக்க முடியும்.
18. உங்கள் கார் எப்போதும் குண்டாகாது.

19. உங்கள் கார் உங்களிடம் எப்போதும் பொய் சொல்லாது.
20. உங்கள் காருக்கு குறைவான பராமரிப்புதான் தேவைப்படும்.
21. உங்களின் இசை ரசனைகளை உங்கள் கார் ஒருபோதும் கிண்டல் அடிக்காது.

22. நீங்கள் புதிய மாடலை வாங்கினால், உங்கள் கார் பொறாமைப்படாது.
23. உங்கள் காரை உங்களால் பிணையாக பயன்படுத்த முடியும்.
24. உங்கள் ரகசியங்களை உங்கள் கார் ஒருபோதும் யாரிடமும் சொல்லாது.

மனைவியை விட கார்தான் பெஸ்ட் என்பதற்கு உங்களிடம் இதுபோல் ஏதேனும் காரணங்கள் இருந்தால், கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் மூலமாக தெரியப்படுத்துங்கள். அட, தைரியமா சொல்லுங்க பாஸ். என்ன பண்றாங்கனு பாத்துக்கலாம்!!


Click it and Unblock the Notifications








