கூடுதல் எரிபொருளுடன் சந்திரயான் 3 விண்ணில் பாய்வது ஏன்? என்ன நடந்தாலும் இந்த தடவை மிஸ் ஆகாது!
வரும் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ள சந்திரயான்-3 நிலவில் தரையிறங்குவதில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க சந்திரயான்-2 விலிருந்துசந்திரயான்-3 யில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சந்திரயான்-3 தேவையான அளவைவிட அதிகமான எரிபொருட்களை எடுத்துச் செல்வது ஏன்? இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ வரும் 14ஆம் தேதி நிலவிற்குச் சந்திரயான்-3 என்ற விண்கலத்தை அனுப்புகிறது. ஏற்கனவே சந்திரயான்-2 என்ற விண்கலம் விண்ணில் அனுப்பப்பட்டு அது நிலவில் சரியாக லேண்ட் ஆகாமல் நிலவில் மோதியது. இந்நிலையில் சந்திரயான்-3 எந்த வித பிரச்சனையும் ஏற்படாமல் சரியாகத் திட்டமிடப்பட்டு நாளை மறுநாள் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்நிலையில் சந்திரயான்-2 மூலம் கற்ற பாடங்களை வைத்து சந்திரயான்-3 யை விண்ணிற்கு அனுப்பும்போது என்னென்ன மாற்றங்களைச் செய்துள்ளன? இதனால் எந்த பாதிப்பும் இல்லாமல் சந்திரயான்-3 எப்படி உறுதியாகத் தரையிறங்கும் என்பது குறித்து இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் சமீபத்தில் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
சந்திரயான்-2 வின் லேண்டரான விக்ரம் லேண்டெர் நிலவில் தரையிறங்கும் போது அது சுமார் 500க்கு 500 மீட்டர் அளவுள்ள ஒரு பகுதியைத் தேர்வு செய்து அந்தப் பகுதியில் ஒரு மையப் பகுதியைத் தேர்வு செய்து அதில் லேண்ட் செய்ய வேண்டும் என புரோகிராம் செய்யப்பட்டிருந்தது. இதில் விக்ரம் லேண்டர் நிலவில் விழும்போது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நிலவில் மோதியது.

இந்நிலையில் சந்திரயான்-3 தற்போது தனது லேண்டிங் நிலப்பரப்பை அதிகமாக வைத்துத் தரையிறங்கும்படி தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 4 கி.மீ 2.5 கி.மீ என்ற பரப்பளவை எடுத்து அந்த பரப்பளவில் ஒரு மையப்பகுதியை எடுத்து அங்கு இந்த லேண்டரை லேண்ட் இஸ்ரோ செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் திட்டமிட்டபடி அங்கு லேண்ட் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டாலும் உடனடியாக அந்த லேண்டரே அதை உணர்ந்து கொண்டு வழங்கப்பட்டுள்ள சதுர பரப்பளவில் எங்கு வேண்டுமானாலும் லேண்ட் செய்யும்படி தன்னை தானே மாற்றி புரோகிராம் செய்து கொண்டு தனது லேண்டிங் இடத்தை மாற்றிக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக லேண்டரில் தேவைக்கு அதிகமாகவே எரிபொருள் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளதாகவும், இதைப் பயன்படுத்தி டார்கெட்டை விட அதிக தொலைவில் லேண்டரில் பயணிக்க வேண்டியது இருந்தால் அங்கு லேண்டார் தானகவே தனது புரோகிராமை மாற்றியமைத்து பயணித்துக் கொள்ள முடியும் என்றும் இஸ்ரோவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும் போது இந்த முறை எந்த விதமான பெயிலியர்களும் ஏற்படாதபடி இந்த லேண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். லேண்டிங் நிகழும் போது சென்சார் ஃபெயிலியர், இன்ஜின் ஃபெயிலியர், அல்ஹாரிதம் ஃபெயிலியர், கால்குலேஷன் ஃபெயிலியர், பல்வேறு வகையான ஃபெயிலியர்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. இப்படியான எது நடந்தாலும் அது லேண்டிங்கில் எந்த பிரச்சினையும் ஏற்படுத்தாமல், இருக்கும் தகவலை வைத்து தேவையான வேகத்தில் லேண்டிங் ஆகிவிடும் படி டிசைன் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த லேண்டரில் கூடுதலாக சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும். இது லேண்டர் ஒரு வேளை கிராஷ் லேண்டிங் ஆனாலும் அதற்குப் பவர் கொடுக்க சூரியனிலிருந்து மின்சக்தியை எடுத்து அதன் மூலம் இந்த லேண்டரிலிருந்து ரோவரை வெளியேற்றும் தனது பணியைத் துவங்கிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த லேண்டரை பூமியிலேயே பல்வேறு விதமான சூழ்நிலைகளில் லேண்ட் செய்து டெஸ்ட் செய்துள்ளனர். குறிப்பாக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியும், கிரேன்களை பயன்படுத்தியும் இந்த லேண்டரை லேண்ட் செய்து டெஸ்ட் செய்துள்ளனர். இதற்காகக் கடந்த சந்திரயான்-2 லேண்டரில் டெஸ்ட் செய்ததை விட அதிகமான டெஸ்ட்களை இந்த சந்திரயான்-3 லேண்டரில் டெஸ்ட் செய்துள்ளனர். எந்த காரணத்தைக் கொண்டும் தோல்விகள் நிகழக்கூடாது என இது திட்டமிடப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் மற்ற நாடுகளை விட இஸ்ரோ மிக குறைந்த செலவிலேயே இந்த திட்டத்தை செய்து வருகிறது. இந்த திட்டத்திற்கு இஸ்ரா விஞ்ஞானிகளின் உழைப்பும் திறமையுமே முழுமையான காரணம். இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனை இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் விதமாக அமைப்போகிறது என்பது மட்டும் உறுதி


Click it and Unblock the Notifications