பழைய கார்களுக்கு ஏன் மவுசு அதிகமாக இருக்கிறது? கோடி ரூபாய் கூட செலவு செய்கிறார்களே ஏன்?
இன்று பலர் பழைய கார்களை அதிக விலைகொடுத்து வாங்குகிறார்கள். எந்தெந்த அம்சங்கள் கொண்ட கார்களை எல்லாம் மக்கள் வாங்குவார்கள் தெரியுமா? வாருங்கள் விரிவாகக் காணலாம்

இன்று உலகில் ஏராளமான மக்கள் பழைய கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதை நம்மால் பார்க்க முடியும், இந்தியாவில் அம்பாசிட்டர், பிரிமியர் பத்மினி போன்ற கார்களை மக்கள் பத்திரமாகப் பாதுகாத்து வருவதை நாம் பார்த்திருப்போம். சிலர் இப்படியாக கார்கள் விலைக்கு வந்தால் எவ்வளவு லட்சம் ஏன் கோடிகளில் பணம் கொடுத்துக் கூட இந்த கார்களை வாங்க ஆட்கள் இருப்பார்கள்.

புதுக்கார்களை விட சில நேரம் பழைய கார்கள் விலை அதிகமாக இருக்கும். ஆனால் எல்லா பழைய கார்களுக்கும் இந்த விலை கிடைக்காது. சில கார்களுக்கு மட்டுமே இந்த க்ரேஷ் மக்கள் மத்தியில் இருக்கும். ஏன் க்ரேஷ் எனக் காரணம் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைத் தருவார்கள். ஆனால் பழைய கார்களுக்கு க்ரேஷ் இருக்கும் என்பது மட்டும் உண்மை

இதில் ஒரு முக்கியமான விஷயம் ஒரு சில வாகனங்களுக்கு மட்டும் க்ரேஷ் இருக்கிறது சில வாகனங்களுக்கு இல்லை. இப்படியாகப் பழைய கார்களில் நல்ல விலைக்கு ஒரு கார் விற்பனையாக வேண்டும் என்றால் என்னென்ன விஷயங்களை வைத்து முடிவு செய்கிறார்கள் என்பதைத் தான் இங்குக் காணப்போகிறோம். அதற்கு முன்னர் பழைய கிளாசிக் கார்கள் என்றால் என்ன எனக் காணலாம்

ஒரு காருக்கு 25 வயதைத் தாண்டி விட்டால் அது பழைய கிளாசிக் கார் பட்டியலில் வரும். இப்படியாகப் பழைய கார்களில் சில அம்சங்கள் உள்ள கார்களுக்கு தான் மார்கெட்டில் நல்ல விலை கிடைக்கும் அப்படியான அம்சங்கள் என்றால் 4 விஷயம் தான் முக்கியம் அதன் பட்டியலை கீழே காணலாம்
1. நாஸ்டாலஜியா
2. எக்ஸ்க்ளுசிவ்
3.இன்வெஸ்ட்மெண்ட்
4. பழைய இன்ஜினியரிங்

நாஸ்டாலஜியா
பொதுவாக பழைய கார்களுக்கு முக்கியம் அதன் லுக், பழைய கார்கள் அது தயாரிக்கப்பட்ட போது என்ன லுக்கில் இருக்கிறதோ அதே லுக்கில் இப்பொழுதும் இருக்க வேண்டும். உதாரணமாகச் சிலர் பழைய புல்லட் பைக்கின் இன்ஜினை புதிய பைக்கில் பொருத்துவார்கள். அது பழைய வாகன லுக்கிலேயே இருக்கும் மதிப்பை விட குறைவான மதிப்பைப் பெறும். பழைய லுக்கிலேயே ஒரு வாகனம் இருந்தால் அதற்கு ஒரு நல்ல விலை இருக்கும்.

எக்ஸ்க்ளுசிவ்
பழைய வாகனமாக இருந்தாலும் எக்ஸ்க்ளுசிவ் வாகன இருந்தால் அதற்கும் மதிப்பு அதிகம். எக்ஸ்க்ளுசிவ் என்றால் குறிப்பிட்ட வாகனம் தயாரிக்கப்படும் போதே குறைவான எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு அந்த வாகனம் இத்தனை ஆண்டுகள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தால் அதே போல இன்று ஒரு வாகனத்தைத் தயாரிக்கவோ வாங்கவோ முடியாமல் இருந்தால் அது எக்ஸ்க்ளுசிவ் வாகனமாகக் கருதப்படும். இது ஒட்டு மொத்த வாகனமாகத் தான் இருக்க வேண்டும் என இல்லை வாகனத்தின் குறிப்பிட்ட ஒன்று அல்லது சில அம்சங்கள் எக்ஸ்க்ளுசிவாக இருந்தால் அதற்கு மார்கெட்டில் விலை அதிகமாகும்

முதலீடு
சில வாகனத்தில் ஒரு சில தொழிற்நுட்பங்கள் இருக்கும் அது இன்று மார்கெட்டில் கிடைக்காத அல்லது விரைவில் நிறுத்தப்படும் போகும் தொழிற்நுட்பம் கொண்ட வாகனங்கள் தற்போது வாங்கினால் எதிர்காலத்தில் நல்ல விலைக்கு விற்கலாம் என்ற ரீதியிலான வாகனங்களுக்கு நல்ல மவுசு இருக்கும். இது தொழிற்நுட்பத்திற்கு மட்டுமல்ல டிசைன், அம்சங்கள், நிறம், பயன்படுத்தப்பட்ட உதிரிப்பாகங்கள், பாடி கட்டமைப்பு இப்படியாக எந்த விஷயமாக இருந்தாலும் தற்போது இது உருவாக்க முடியும் ஆனால் விரைவில் அழிந்து போகும் நிலை இருந்தால் அதற்கு நல்ல விலை கிடைக்கும்.

பழைய இன்ஜினியரிங்
ஆட்டோமொபைல் என்றாலோ ஆண்டிற்கு ஆண்டு இன்ஜினியரிங் மேம்பட்டுக்கொண்டே இருக்கும். அப்படியாக நாம் வைத்திருக்கும் பழைய காரில் மிக அரிய வகை அல்லது மிகவும் பழைய தற்போது பயன்பாட்டில் இல்லாத அல்லது தற்போது உருவாக்க முடியாத இன்ஜியரிங் விஷயங்களைக் கொண்ட வாகனங்களுக்கு மார்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

மேலே சொன்ன 4 விஷயங்களில் ஏதாவது ஒன்று உங்கள் வாகனத்திற்கு இருந்தாலும் இன்று அந்த வாகனத்தைப் பல லட்சம் கொடுத்து வாங்க இன்று பலர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த 4 விஷயங்களுமே உள்ள ஒரு வாகனத்திற்கு விலை கோடியில் தான் இருக்கிறது. புதிய காருக்கு கூட கிடைக்காத விலை இந்த காருக்கு கிடைக்கும். இவ்வளவு விலை கொடுத்து இந்த கார்களை ஏன் வாங்குகிறார்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம் உண்மையில் இதற்குக் காரணம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும் சிலருக்குப் பெருமை, சிலருக்கு ஹாபி இப்படி இது தனிப்பட்ட மனிதனின் விஷயமாகிறது. நீங்கள் பயன்படுத்தும் வாகனம் என்னது? அது எவ்வளவு பழையது? கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








