யாரும் நுழைய முடியாத காக்பிட் ரகசியம்! பைலட்கள் இருக்கையில் செம்மறியாட்டு தோலை ஏன் போர்த்துகின்றனர் தெரியுமா?

பைலட்களின் இருக்கைகளில் ஏன் செம்மறியாட்டு தோலை போர்த்துகின்றனர்? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

யாரும் நுழைய முடியாத காக்பிட் ரகசியம்! பைலட்கள் இருக்கையில் செம்மறியாட்டு தோலை ஏன் போர்த்துகின்றனர் தெரியுமா?

விமானங்களில் பைலட்கள் அமரும் காக்பிட்டிற்குள் சென்றுள்ளீர்களா? நம்மில் பெரும்பாலானோருக்கு அந்த அரிய வாய்ப்பு கிடைத்திருக்காது. ஆனால் ஒரு சிலர் சென்றிருக்கலாம். அப்படி விமானங்களின் காக்பிட் பகுதிக்குள் சென்றுள்ளவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், பைலட்களின் இருக்கையை நீங்கள் கவனித்திருக்க கூடும்.

யாரும் நுழைய முடியாத காக்பிட் ரகசியம்! பைலட்கள் இருக்கையில் செம்மறியாட்டு தோலை ஏன் போர்த்துகின்றனர் தெரியுமா?

பெரும்பாலான விமானங்களில் பைலட்களின் இருக்கை செம்மறியாட்டு தோலால் போர்த்தப்பட்டிருக்கும். அந்த இருக்கைகள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் பஞ்சு போன்று இருக்கும். விமானங்களின் காக்பிட்டிற்குள் இதுவரை செல்லாதவர்கள் திரைப்படங்களிலோ அல்லது புகைப்படங்களிலோ பைலட்களுடைய இருக்கைகளை பார்த்திருக்கலாம்.

யாரும் நுழைய முடியாத காக்பிட் ரகசியம்! பைலட்கள் இருக்கையில் செம்மறியாட்டு தோலை ஏன் போர்த்துகின்றனர் தெரியுமா?

இப்படி ஏதேனும் ஒரு வழியில் பைலட்களின் இருக்கையை பார்த்துள்ளவர்களுக்கு, ஏன் அதில் செம்மறியாட்டு தோல் வழங்கப்பட்டுள்ளது? என்ற சந்தேகம் எழுந்திருக்கலாம். அந்த சந்தேகத்திற்கு இந்த செய்தியில் பதில் வழங்கியுள்ளோம். பைலட்களின் இருக்கையில் செம்மறியாட்டு தோல் பயன்படுத்தப்படுவதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன.

யாரும் நுழைய முடியாத காக்பிட் ரகசியம்! பைலட்கள் இருக்கையில் செம்மறியாட்டு தோலை ஏன் போர்த்துகின்றனர் தெரியுமா?

காக்பிட்டின் டெம்ப்ரேச்சர் என்னவாக இருந்தாலும், பைலட்களுக்கு கோடைகாலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் செம்மறியாட்டு தோல்களை இருக்கைகளில் பயன்படுத்துவதற்கு முதல் காரணம். மேலும் அவை ஹைப்போஅலெர்ஜெனிக் (Hypoallergenic) என்பதும் கூடுதல் சிறப்பம்சம்.

யாரும் நுழைய முடியாத காக்பிட் ரகசியம்! பைலட்கள் இருக்கையில் செம்மறியாட்டு தோலை ஏன் போர்த்துகின்றனர் தெரியுமா?

அவை தோல்களுக்கு எரிச்சலூட்டாது என்பதுடன், எந்தவிதமான அலர்ஜிகளையும் ஏற்படுத்தாது. அத்துடன் விமான இருக்கைகளுக்கு மிகவும் ஏற்ற சீட் கவராக செம்மறியாட்டு தோல்கள் இருப்பதற்கு மற்றொரு மிக முக்கிய காரணம் அவை எளிதில் தீப்பற்றாது என்பதுதான். விமான சான்றிதழ் நடைமுறைகளிலும், இது அவசியமான தேவையாக உள்ளது.

யாரும் நுழைய முடியாத காக்பிட் ரகசியம்! பைலட்கள் இருக்கையில் செம்மறியாட்டு தோலை ஏன் போர்த்துகின்றனர் தெரியுமா?

தனது இயற்கையான அதிக நைட்ரஜன் மற்றும் நீர் மூலக்கூறு காரணமாகவே செம்மறியாட்டு தோல் எளிதில் தீப்பற்றாத ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக எரிய வேண்டுமென்றால், சுற்றுப்புற சூழலில் அதிக அளவு ஆக்ஸிஜன் தேவைப்படும். செம்மறியாட்டு தோலின் இந்த பண்பும், பைலட்களின் இருக்கைகளில் பயன்படுத்தப்படுவதற்கு முக்கியமான காரணமாக உள்ளது.

யாரும் நுழைய முடியாத காக்பிட் ரகசியம்! பைலட்கள் இருக்கையில் செம்மறியாட்டு தோலை ஏன் போர்த்துகின்றனர் தெரியுமா?

மேலும் செம்மறியாட்டு தோல் நீடித்து உழைக்கும் என்பதாலும், பைலட்களின் இருக்கைகளில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் விமான காக்பிட்களில் பைலட்கள் இருக்கைகளில் மட்டுமே செம்மறியாட்டு தோல் பயன்படுத்தப்படும் என்பது கிடையாது. கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களின் இருக்கைகளை கவர் செய்வதற்கும், சிலர் செம்மறியாட்டு தோலை பயன்படுத்துகின்றனர்.

யாரும் நுழைய முடியாத காக்பிட் ரகசியம்! பைலட்கள் இருக்கையில் செம்மறியாட்டு தோலை ஏன் போர்த்துகின்றனர் தெரியுமா?

உங்கள் அப்பா அல்லது தாத்தாவின் கார் அல்லது இரு சக்கர வாகனத்தில், செம்மறியாட்டு தோலை நீங்கள் பார்த்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பஞ்சு போன்ற அந்த இருக்கையை பார்த்து நீங்கள் ஒருவேளை சிரித்திருக்கலாம். ஆனால் செம்மறியாட்டு தோலின் மகத்துவம் தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறோம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why Do Airplane Pilot Seats Have Sheepskin Covers? Important Reasons. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X