விமானம் டேக்-ஆஃப், லேண்ட் ஆகும்போது ஏன் ஜன்னலை திறந்து வைக்க சொல்றாங்க தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே...

விமானம் டேக்-ஆஃப் மற்றும் லேண்ட் ஆகும்போது ஏன் ஜன்னலை திறந்து வைக்க வேண்டும்? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானம் டேக்-ஆஃப், லேண்ட் ஆகும்போது ஏன் ஜன்னலை திறந்து வைக்க சொல்றாங்க தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே...

விமானத்தில் நீங்கள் பயணம் செய்துள்ளீர்களா? அப்படியானால் ஜன்னல் மறைப்பை திறந்து வைக்கும்படி விமான பணிப்பெண்கள் வலியுறுத்துவார்கள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். குறிப்பாக விமானம் டேக்-ஆஃப் செய்யப்படும்போதும், லேண்ட் ஆகும்போதும் ஜன்னல் மறைப்பை திறந்து வைக்கும்படி பணிப்பெண்கள் அறிவுறுத்துவார்கள்.

விமானம் டேக்-ஆஃப், லேண்ட் ஆகும்போது ஏன் ஜன்னலை திறந்து வைக்க சொல்றாங்க தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே...

ஆனால் இதற்கு என்ன காரணம்? என்பது பலருக்கும் தெரியாது. இந்த செய்தியில் அதற்கான காரணங்களை தொகுத்து வழங்கியுள்ளோம். உங்களுடைய பாதுகாப்புதான் முதல் காரணம். விமான பயணத்திலேயே டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் ஆகிய இரண்டும்தான் மிகவும் ஆபத்தானது என்பது நம் அனைவருக்குமே தெரிந்திருக்கும்.

விமானம் டேக்-ஆஃப், லேண்ட் ஆகும்போது ஏன் ஜன்னலை திறந்து வைக்க சொல்றாங்க தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே...

விமானம் டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் செய்யப்படும்போது விபத்துக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே இந்த நேரத்தில் ஜன்னலை திறந்து வைப்பதன் மூலமாக, பகல் அல்லது இரவு என்று எந்த நேரமானாலும், விமானத்திற்கு வெளியே உள்ள வெளிச்சத்திற்கு உங்கள் கண்கள் பழகி விடும். எனவே ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், உங்களால் விரைவாக செயலாற்ற முடியும்.

விமானம் டேக்-ஆஃப், லேண்ட் ஆகும்போது ஏன் ஜன்னலை திறந்து வைக்க சொல்றாங்க தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே...

ஜன்னலை திறந்து வைப்பதற்கு மற்றொரு காரணம், விமான இறக்கைகள் போன்ற பகுதிகளில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், விமான ஊழியர்களால் மிக எளிதாக பார்க்க முடியும் என்பதுதான். ஒருவேளை விமானத்தில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டால், அனைவரும் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு எந்த பக்கம் பாதுகாப்பானது என்பதையும் இதன் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விமானம் டேக்-ஆஃப், லேண்ட் ஆகும்போது ஏன் ஜன்னலை திறந்து வைக்க சொல்றாங்க தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே...

இந்த வரிசையில் ஜன்னலை திறந்து வைப்பதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உள்ளது. ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தால், விமானத்திற்கு உள்ளே என்ன நடக்கிறது? என்பதை வெளியே இருப்பவர்களால் காண முடியாது. கேபினில் தீ எரிந்து கொண்டிருந்தாலும் அல்லது புகை வந்து கொண்டிருந்தாலும், ஜன்னல் மூடப்பட்டிருந்தால் வெளியே இருப்பவர்களால் காண முடியாது.

விமானம் டேக்-ஆஃப், லேண்ட் ஆகும்போது ஏன் ஜன்னலை திறந்து வைக்க சொல்றாங்க தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே...

ஆனால் ஜன்னல்கள் திறந்து வைக்கப்பட்டிருந்தால், அவர்களால் விமானத்தின் உள்ளே என்ன நடக்கிறது? என்பதை தெளிவாக பார்க்க முடியும். விமானம் டேக்-ஆஃப் செய்யப்படும்போதும், லேண்ட் ஆகும்போதும் ஜன்னல் திறந்து வைப்பது எவ்வளவு முக்கியமானது? என்பது தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறோம்.

விமானம் டேக்-ஆஃப், லேண்ட் ஆகும்போது ஏன் ஜன்னலை திறந்து வைக்க சொல்றாங்க தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே...

எனவே விமானத்தில் பயணிக்கும்போது ஜன்னலை திறந்து வைக்க மறக்க வேண்டாம். இதில், உங்களுடைய பாதுகாப்பு மட்டுமின்றி மற்ற பயணிகளின் பாதுகாப்பும் அடங்கியுள்ளது என்பது மனதில் கொள்ளுங்கள். அதே நேரத்தில் ஜன்னலை திறந்து வைப்பதால் உங்களுக்கு நல்லதொரு அனுபவம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விமானம் டேக்-ஆஃப், லேண்ட் ஆகும்போது ஏன் ஜன்னலை திறந்து வைக்க சொல்றாங்க தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே...

ஆம், ஜன்னலை திறந்து வைப்பதன் மூலமாக வானத்தின் அழகை நீங்கள் ரசித்து கொண்டே பயணிக்கலாம். எனவே விமானத்தில் பறக்கும்போது ஜன்னலை திறந்து வைக்க எப்போதும் மறக்காதீர்கள். இந்த தகவல்கள் உங்களுக்கு பயன் அளிப்பதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடனும் மற்றும் தெரிந்தவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why Do Airplane Window Shades Have To Be Open During Take-off And Landing? Important Reasons. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X