பெருமாளே நெனச்சாலும் திருப்பதி கோயில் மீது விமானங்களால் பறக்க முடியாது! காரணம் என்னனு தெரியுமா?
உலகின் மற்ற பெரும்பாலான நாடுகளை போலவே, இந்தியாவிலும் ஒரு சில 'நோ-ஃப்ளையிங் ஜோன்கள்' (No-Flying Zones) உள்ளன. அதாவது 'நோ-ஃப்ளையிங் ஜோன்' என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் விமானங்கள், ஹெலிகாப்டர்களால் பறக்க முடியாது. அப்பகுதிகளில் அவற்றை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும். விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மட்டுமல்லாது, ட்ரோன்களை கூட, 'நோ-ஃப்ளையிங் ஜோன்' என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இயக்க முடியாது.
இந்தியாவில் உள்ள மிக முக்கியமான அரசு கட்டிடங்கள், அறிவியல் ஆராய்ச்சி மையங்கள் மற்றும் கோயில்கள் போன்றவை 'நோ-ஃப்ளையிங் ஜோன்' என வரையறுக்கப்பட்டுள்ளன. அப்படி 'நோ-ஃப்ளையிங் ஜோன்' என வரையறுக்கப்பட்டுள்ள இந்தியாவின் 5 மிக முக்கியமான பகுதிகளை இந்த செய்தியில் பார்க்கலாம். நியூஸ் 18 வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகை, புது டெல்லி (Rashtrapati Bhavan, New Delhi): குடியரசு தலைவரின் (President) இல்லம் என்பதால், இது இந்தியாவில் உள்ள மிகவும் முக்கியமான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. எனவே ஜனாதிபதி மாளிகைக்கு மேலே, விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் பறப்பதற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கட்டிட பகுதி, புது டெல்லி (Parliament House Area, New Delhi): நாடாளுமன்ற கட்டிட பகுதியானது, மத்திய டெல்லியில் அமைந்துள்ளது. இதில், நாடாளுமன்றம், பிரதமரின் இல்லம், அமைச்சரவை அலுவலகங்கள் மற்றும் மிகவும் முக்கியமான அரசு அலுவலகங்கள் உள்ளன. எனவே இதுவும் இந்தியாவின் மிகவும் முக்கியமான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இதுவும் 'நோ-ஃப்ளையிங் ஜோன்' என வரையறுக்கப்பட்டுள்ளது.

பாபா அணு ஆராய்ச்சி மையம், மும்பை (Bhabha Atomic Research Centre, Mumbai): இந்தியாவின் மிகவும் முக்கியமான அணு ஆராய்ச்சி மையம் என்பதால், இது உச்சகட்ட பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. தேச பாதுகாப்புடன் தொடர்புடைய மிகவும் முக்கியமான பணிகள் இங்கு நடைபெறுவதால், இதுவும் 'நோ-ஃப்ளையிங் ஜோன்' என வரையறுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் (Tirupati Venkateswara Temple): உலகின் பணக்கார கோயில் என இது வர்ணிக்கப்படுகிறது. உலகம் முழுவதிலும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள், திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு வந்து செல்கின்றனர். அவர்களின் பாதுகாப்பு கருதி, திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் பகுதி, 'நோ-ஃப்ளையிங் ஜோன்' என வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களால் இங்கு பறக்க முடியாது.
தாஜ்மஹால், உத்தர பிரதேசம் (Taj Mahal, Uttar Pradesh): யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் (UNESCO World Heritage Site) ஒன்றாக தாஜ்மஹால் உள்ளது. அதிர்வுகள் மற்றும் மாசுபாடுகள் ஏற்படுவதை தடுப்பதற்காக தாஜ்மஹால் 'நோ-ஃப்ளையிங் ஜோன்' என வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கு விபத்துக்கள் நிகழ்ந்து விட கூடாது என்பதும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றுதான்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பாதுகாப்பு கருதியே இந்தியாவின் மிக முக்கியமான பகுதிகள் 'நோ-ஃப்ளையிங் ஜோன்' என வரையறுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் நாட்டின் மிக முக்கியமான பொறுப்புகளை வகிப்பவர்களை பாதுகாப்பதுதான், 'நோ-ஃப்ளையிங் ஜோன்' என ஒரு சில பகுதிகளை வரையறுப்பதற்கு மிகவும் முக்கியமான காரணம் ஆகும்.


Click it and Unblock the Notifications








