உல்லாச கப்பல்களில் 13- வது தளம் இருப்பதில்லை... ஏன் தெரியுமா?

உல்லாச கப்பல்களில் 13வது தளம் தவிர்க்கப்படுவதற்கான காரணங்களை இந்த செய்தியில் காணலாம்.

மூடநம்பிக்கைகள் ஏதோ நம்மூர் கிராமத்திலும், படிக்காதவர்கள் மத்தியிலும் இருக்கும் விஷயம் என்று எண்ணிவிட வேண்டாம். அரசியல்வாதிகள், முன்னணி நடிகர்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை இந்த மூட நம்பிக்கை ஆட்டி வைக்கிறது.

உல்லாச கப்பல்களில் 13வது தளம் இருப்பதில்லை... ஏன் தெரியுமா?

அந்த வகையில், உலகிலேயே மிகப்பெரிய விலை கொண்ட பொருட்களில் ஒன்றாக கருதப்படும் உல்லாச கப்பல்களில் 13ம் எண் கொண்ட தளம் இருப்பதில்லை. இதற்கான காரணங்கள் குறித்து பார்க்கலாம்.

உல்லாச கப்பல்களில் 13வது தளம் இருப்பதில்லை... ஏன் தெரியுமா?

பொதுவாகவே, கப்பல்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சில வித்தியாசமான பழக்க வழக்கங்களும், மூட நம்பிக்கைகளும் உண்டு. அதேபோன்று, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய கப்பல்களை வைத்திருக்கும் முதலாளிகள் முதல் பயணிகள் வரை நடுங்கும் ஒரு விஷயம் 13 என்ற எண்தான்.

உல்லாச கப்பல்களில் 13வது தளம் இருப்பதில்லை... ஏன் தெரியுமா?

13ந் தேதிகளில் நடக்கும் பெரும் துயரச் சம்பவங்களே இதற்கு காரணம். இப்போது கூட பலர் 8 மற்றும் 13 ஆகிய எண் கொண்ட வீடுகளை தவிர்ப்பதுண்டு. அதுபோலவே, உல்லாச கப்பல்களில் 13ம் எண் கொண்ட தளம் இருப்பதில்லை.

உல்லாச கப்பல்களில் 13வது தளம் இருப்பதில்லை... ஏன் தெரியுமா?

12ம் எண் தளத்திற்கு அடுத்து 14ம் எண் கொண்ட தளமே கொடுக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் அடுக்கப்படுகின்றன. 13ம் எண் கொண்ட தளத்தில் உள்ள அறைகளை பயணிகள் முன்பதிவு செய்வதில்லை. அதனை துரதிருஷ்டவசமாக கருதுவதும், மரண பீதியுமே காரணம்.

உல்லாச கப்பல்களில் 13வது தளம் இருப்பதில்லை... ஏன் தெரியுமா?

13ம் எண் ராசியில்லாதது என்று உலகம் முழுவதும் உள்ள மூட நம்பிக்கையே இதற்கு காரணம். பிரான்ஸ் நாட்டில் 1307ம் ஆண்டு ஏசு கிறித்துவின் தேவாலய புனித வீரர்கள் என்று குறிப்பிடப்பட்ட கிறித்தவ மதத்தின் பாதுகாப்புப் படை பிரிவை சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் நான்காம் பிலிப் மன்னனால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.

அவர்கள் 1307ம் ஆண்டு அக்டோபர் 3ந் தேதி கைது செய்யப்பட்டதால், அந்த தினத்தின் மீது கிறித்தவ மதத்தினருக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டது. மேலும், அந்த தினம் ராசியில்லாதது என்றும் தவிர்க்க துவங்கினர்.

உல்லாச கப்பல்களில் 13வது தளம் இருப்பதில்லை... ஏன் தெரியுமா?

மற்றொரு கூற்றுபடி, ஓர் ஆண்டு 12 மாதங்களுடன் முழுமையடைகிறது. கடிகாரத்தில் 12 மணி என்பதும் பகல், இரவு நேரத்தை முழுமையடைச் செய்கிறது. அதுபோன்றே, பன்னிரெண்டு ராசிகளும் கணக்கிடப்படுகிறது.

உல்லாச கப்பல்களில் 13வது தளம் இருப்பதில்லை... ஏன் தெரியுமா?

எனவே, 12 என்பதே முழுமையடைவதாகவும், 13 என்பது முழுமையற்ற எண்ணாகவும் மக்கள் கருதியதும் 13ம் எண் மீதான அதிருப்தி அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் 13ம் எண் சூனியக்காரர்களுக்கான எண்ணாகவும் கருதப்படுகிறது. மேலும், அது மரணத்திற்கான எண்ணாகவும் நம்பப்படுகிறது.

உல்லாச கப்பல்களில் 13வது தளம் இருப்பதில்லை... ஏன் தெரியுமா?

உல்லாச கப்பல்களில் மட்டுமில்ல, நட்சத்திர ஓட்டல்களில் கூட 13ம் எண் தளம் அல்லது அந்த எண் கொண்ட அறைகள் தவிர்க்கப்படுகின்றன. மேலும், ஒரு பயணத்தை துவங்கும்போது மாதத்தின் 13ம் நாள் துவங்குவதையும் கப்பல் நிறுவனங்களும், சுற்றுலா ஏற்பாட்டாளர்களும் தவிர்த்து வருகின்றனர்.

உல்லாச கப்பல்களில் 13வது தளம் இருப்பதில்லை... ஏன் தெரியுமா?

ராயல் கரீபியன் நிறுவனத்தின் ஆலூர் ஆஃப் தி சீஸ், ஓசிஸ் ஆஃப் தி சீஸ் உள்ளிட்ட உலகின் மிக பிரம்மாண்டமான கப்பல்களில் கூட 13வது தள எண் தவிர்க்கப்பட்டுள்ளது என்பது ஆச்சரியம்தான்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Why do cruise ships have no 13 number deck?.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X