இந்த வாசனை வரணும்! கார், பைக்குகளை நாய்கள் ஏன் துரத்துகின்றன தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ விஷயம் இருக்கா!

கார், பைக்குகளை நாய்கள் ஏன் துரத்துகின்றன? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த வாசனை வரணும்! கார், பைக்குகளை நாய்கள் ஏன் துரத்துகின்றன தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ விஷயம் இருக்கா!

இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும்போது, நாய்கள் துரத்திய அனுபவம் நம் அனைவருக்கும் நிச்சயம் இருக்கும். கார்கள் மற்றும் டூவீலர்கள் என அனைத்து வகையான வாகனங்களையும் துரத்துவதை நாய்கள் தங்கள் வழக்கமாக வைத்துள்ளன. நாய்கள் துரத்துவதால், ஏராளமான வாகன ஓட்டிகள் சாலை விபத்துக்களில் சிக்கி வருகின்றனர்.

இந்த வாசனை வரணும்! கார், பைக்குகளை நாய்கள் ஏன் துரத்துகின்றன தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ விஷயம் இருக்கா!

நாய்கள் கூட்டமாக துரத்தும்போது, வாகன ஓட்டிகள் அச்சத்தில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்களில் சிக்கி கொள்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. கிராமங்கள் மற்றும் நகரங்கள் என பாகுபாடு இன்றி அனைத்து பகுதிகளிலும் இந்த பிரச்னையை காண முடிகிறது. இந்த பிரச்னைக்கு உரிய தீர்வை காண அரசு முயற்சி செய்வதை போல் தெரியவில்லை.

இந்த வாசனை வரணும்! கார், பைக்குகளை நாய்கள் ஏன் துரத்துகின்றன தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ விஷயம் இருக்கா!

சரி, நாய்கள் ஏன் இப்படி வாகனங்களை துரத்தி வருகின்றன? என்ற சந்தேகம் நீண்ட நாட்களாக இருக்கிறது என்றால், உங்களுக்குதான் இந்த செய்தி. வாகனங்களை கூட்டமாகவோ அல்லது தனியாகவோ துரத்தி செல்வதை நாய்கள் வழக்கமாக வைத்திருப்பதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த வாசனை வரணும்! கார், பைக்குகளை நாய்கள் ஏன் துரத்துகின்றன தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ விஷயம் இருக்கா!

உங்கள் வீட்டிற்கு புதிதாக ஒரு நபர் வருகிறார் என்றால், அவரை பார்த்து நாய்கள் குரைக்கும். அதற்கு என்ன காரணமோ, அதே காரணத்திற்காகதான் வாகனங்களையும் நாய்கள் குரைத்து கொண்டே துரத்துகின்றன. அதாவது உங்கள் வீட்டிற்கு வரும் புதிய நபர்களை நாய்கள் அந்நியர்களாக கருதும். அவர்களை நாய்கள் நம்பாது.

இந்த வாசனை வரணும்! கார், பைக்குகளை நாய்கள் ஏன் துரத்துகின்றன தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ விஷயம் இருக்கா!

அதேபோன்று தங்கள் வாழ்விடத்திற்குள் வரும் அறிமுகம் இல்லாத புதிய வாகனங்களையும் குரைத்து கொண்டே துரத்துவதை நாய்கள் வழக்கமாக வைத்துள்ளன. தாங்கள் வசிக்கும் பகுதிகளில் இருக்கும் வாகனங்கள் மீது நாய்கள் சிறுநீர் கழிக்கும். இதன் மூலம் தங்கள் வசிப்பிடத்திற்கு சொந்தமில்லாத வாகனங்கள் தங்களை நெருங்கும்போது, அவை மிக எளிதாக அடையாளம் கண்டு கொள்ளும்.

இந்த வாசனை வரணும்! கார், பைக்குகளை நாய்கள் ஏன் துரத்துகின்றன தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ விஷயம் இருக்கா!

சிறுநீர் வாசனையின் மூலம், அவை தங்கள் வசிப்பிடத்திற்கு சொந்தமில்லாத வாகனங்கள் என்பதை நாய்கள் உணர்ந்து கொள்கின்றன. எனவே அந்த வாகனங்களை அச்சுறுத்தலாக கருதி, நாய்கள் குரைத்து கொண்டே துரத்துகின்றன. வீட்டிற்கு வரும் புதிய மனிதர்களை அச்சுறுத்தலாக கருதுவதால்தான் நாய்கள் குரைக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்த வாசனை வரணும்! கார், பைக்குகளை நாய்கள் ஏன் துரத்துகின்றன தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ விஷயம் இருக்கா!

ஆனால் வாகனங்களை நாய்கள் துரத்தி செல்வதற்கு இது ஒரு காரணம் மட்டும்தான். இதேபோன்று இன்னும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சில சமயங்களில் 'டைம் பாஸ்' செய்வதற்காகவும் கூட வாகனங்களை, நாய்கள் துரத்துகின்றன. நாய்கள் தனிமையை உணர்ந்தாலோ அல்லது 'போர்' அடிப்பது போன்ற உணர்வு அவைகளுக்கு ஏற்பட்டாலோ வாகனங்களை துரத்தி 'டைம் பாஸ்' செய்து கொள்ளும்.

இந்த வாசனை வரணும்! கார், பைக்குகளை நாய்கள் ஏன் துரத்துகின்றன தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ விஷயம் இருக்கா!

இதன் மூலம் சலிப்பு நீங்கி, நாய்கள் மகிழ்ச்சியாக காணப்படும். அதிகமான சத்தத்தை நாய்கள் விரும்பாது என்பது, அவை வாகனங்களை துரத்துவதற்கான மற்றொரு காரணம். வாகனங்கள் அதிகமான சத்தத்துடன் இயங்கும்போது, நாய்கள் அச்சமடையும். இந்த அச்ச உணர்வு, வாகனங்களை துரத்துவதற்கு நாய்களை தூண்டுகின்றன.

இந்த வாசனை வரணும்! கார், பைக்குகளை நாய்கள் ஏன் துரத்துகின்றன தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ விஷயம் இருக்கா!

சாதாரண மனிதர்களால் கேட்க முடியாத சத்தத்தை கூட, நாய்களால் மிகவும் துல்லியமாக கேட்க முடியும். அந்த அளவிற்கு அவை உணர்திறன் மிக்கவை. எனவே வாகனங்களின் மூலமாக வழக்கத்திற்கு மாறான சத்தத்தை கேட்கும்போது, நாய்கள் குரைத்து கொண்டே துரத்த தொடங்கி விடுகின்றன. அத்துடன் சில சமயங்களில் வாகனங்களின் டயர்கள் சுற்றுவதும் கூட நாய்கள் துரத்த காரணமாக அமைகிறது.

இந்த வாசனை வரணும்! கார், பைக்குகளை நாய்கள் ஏன் துரத்துகின்றன தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ விஷயம் இருக்கா!

வாகனங்களின் டயர்கள் வேகமாக சுற்றும்போது, நாய்கள் கவரப்படுகின்றன. அப்படிப்பட்ட காட்சியை காணும் சமயங்களில் எல்லாம், அதனை விளையாடுவதற்கான நேரமாக நாய்கள் கருதி கொள்கின்றன. அப்போது வாகனங்களை துரத்துவது என்பது, நாய்களை பொறுத்தவரையில் பந்துகள் அல்லது பொம்மைகளுடன் விளையாடுவதை போன்றது.

இந்த வாசனை வரணும்! கார், பைக்குகளை நாய்கள் ஏன் துரத்துகின்றன தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ விஷயம் இருக்கா!

ஆனால் நாங்கள் ஏற்கனவே கூறியபடி, நாய்கள் வாகனங்களை துரத்துவது என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சாலை விபத்துக்களில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. எனவே நாய்களிடம், குறிப்பாக இரவு நேரங்களில் நாய்களிடம் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்வது நல்லது.

More from DriveSpark

Article Published On: Monday, October 31, 2022, 15:36 [IST]
English summary
Why do dogs chase vehicles
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+