விமான பணிப்பெண்கள் ஏன் சிகப்பு கலர் லிப்ஸ்டிக் போட்றாங்க தெரியுமா? இந்த மேக்-அப் கூட நம்ம பாதுகாப்புக்குத்தான்

விமான பணிப்பெண்கள் ஏன் பிரகாசமான சிகப்பு நிறத்தில் லிப்ஸ்டிக் பூசி கொள்கிறார்கள்? என்பதற்கான உண்மை காரணத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமான பணிப்பெண்கள் ஏன் சிகப்பு கலர் லிப்ஸ்டிக் போட்றாங்க தெரியுமா? இந்த மேக்-அப் கூட நம்ம பாதுகாப்புக்குத்தான்!

விமானங்கள் பற்றிய ஒவ்வொரு விஷயமும் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும். விமானங்களை பற்றிய விஷயங்கள் மட்டுமல்லாது, விமான பணிப்பெண்கள் பற்றிய விஷயங்களும் கூட நம்மை மிகவும் ஆச்சரியப்படுத்த கூடியவைதான். இதில் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றிதான் நாம் இன்று இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

விமான பணிப்பெண்கள் ஏன் சிகப்பு கலர் லிப்ஸ்டிக் போட்றாங்க தெரியுமா? இந்த மேக்-அப் கூட நம்ம பாதுகாப்புக்குத்தான்!

முழுக்க முழுக்க பாதுகாப்பு என்பதை அடிப்படையாக வைத்துதான் விமானங்கள் கட்டமைக்கப்படுகின்றன. விமானங்களை பற்றிய எந்தவொரு விஷயத்தை ஆராய்ந்தாலும், அதற்கு பின்னால் ஏதாவது ஒரு பாதுகாப்பு காரணம் அடங்கியிருக்கும். இந்த வகையில் விமான பணிப்பெண்கள் உதட்டில் பூசும் லிப் ஸ்டிக்கிற்கு பின்னால் கூட முக்கியமான பாதுகாப்பு காரணம் ஒன்று இருக்கிறது.

விமான பணிப்பெண்கள் ஏன் சிகப்பு கலர் லிப்ஸ்டிக் போட்றாங்க தெரியுமா? இந்த மேக்-அப் கூட நம்ம பாதுகாப்புக்குத்தான்!

இந்த விஷயத்தை கேட்ட உடனே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? நம்புவதற்கு கடினமாக கூட இருக்கலாம். ஆனால் இது உண்மைதான். பொதுவாக விமான பணிப்பெண்கள் பணி நேரத்தில் எப்போதும் முகத்தில் ஒப்பனையுடன், அதாவது மேக்-அப் (Make-up) உடன்தான் காட்சியளிப்பார்கள். விமான பணிப்பெண்கள் என்றாலே, அவர்களது மேக்-அப்தான் நமக்கு முதலில் நினைவிற்கு வரும்.

விமான பணிப்பெண்கள் ஏன் சிகப்பு கலர் லிப்ஸ்டிக் போட்றாங்க தெரியுமா? இந்த மேக்-அப் கூட நம்ம பாதுகாப்புக்குத்தான்!

அந்த அளவிற்கு அவர்களின் மேக்-அப் நமது மனதில் ஆழமாக பதிந்து விட்டது. விமானங்களில் சிறிது நேரம் பயணம் செய்தாலே நம் முகம் வாடி விடும். ஆனால் மிக நீண்ட நேரம் பறக்கும் தொலைதூர விமானங்களில் கூட, விமான பணிப்பெண்கள் மேக்-அப் உடன் புத்துணர்ச்சியாக இருப்பார்கள். அவர்களின் மேக்-அப் கலையாமல் அப்படியே இருக்கும்.

விமான பணிப்பெண்கள் ஏன் சிகப்பு கலர் லிப்ஸ்டிக் போட்றாங்க தெரியுமா? இந்த மேக்-அப் கூட நம்ம பாதுகாப்புக்குத்தான்!

பயணிகளை கையாள வேண்டியிருப்பதால், விமான பணிப்பெண்கள் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று விமான நிறுவனங்கள் விரும்புகின்றன. எனவே மேக்-அப் மிக அதிக முக்கியத்துவம் பெறுகிறது. விமான பணிப்பெண்களின் மேக்-அப்பில் லிப்ஸ்டிக்குகளுக்கு (Lipstick) முக்கிய இடம் உண்டு. அவர்கள் தங்களுடைய உதட்டில் எப்போதும் பிரகாசமாக லிப்ஸ்டிக் பூசியிருப்பார்கள்.

விமான பணிப்பெண்கள் ஏன் சிகப்பு கலர் லிப்ஸ்டிக் போட்றாங்க தெரியுமா? இந்த மேக்-அப் கூட நம்ம பாதுகாப்புக்குத்தான்!

சிகப்பு (Red) நிறத்திலோ அல்லது பிங்க் எனப்படுகின்ற இளஞ்சிவப்பு (Pink) நிறத்திலோ அவர்களின் லிப்ஸ்டிக் இருக்கும். விமான பணிப்பெண்கள் அழகிற்காக மட்டும்தான் பிரகாசமான நிறத்தில் லிப்ஸ்டிக் பூசுகிறார்கள் என இதுநாள் வரையில் நீங்கள் நினைத்து கொண்டிருந்திருக்கலாம். ஆனால் அவர்களது பிரகாசமான லிப்ஸ்டிக்கிற்கு பின்னால் பாதுகாப்பும் அடங்கியுள்ளது.

விமான பணிப்பெண்கள் ஏன் சிகப்பு கலர் லிப்ஸ்டிக் போட்றாங்க தெரியுமா? இந்த மேக்-அப் கூட நம்ம பாதுகாப்புக்குத்தான்!

விமான பயணத்தின்போது விமான பணிப்பெண்கள் நமக்கு பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை வழங்குவார்கள். இந்த அறிவுரைகளை நாம் மிகவும் கவனமாக கேட்டு, அவற்றை அப்படியே பின்பற்றுவது அவசியம். ஆனால் காது கேட்காத நபர்களால், விமான பணிப்பெண்கள் கூறும் அறிவுரைகளை கேட்க முடியாது.

விமான பணிப்பெண்கள் ஏன் சிகப்பு கலர் லிப்ஸ்டிக் போட்றாங்க தெரியுமா? இந்த மேக்-அப் கூட நம்ம பாதுகாப்புக்குத்தான்!

இந்த பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்காகவே உதட்டில் பிரகாசமான நிறத்தில் லிப்ஸ்டிக் பூசுவதாக விமான பணிப்பெண்கள் கூறுகிறார்கள். அதாவது லிப்ஸ்டிக் பூசுவதன் மூலம் உதடு மிகவும் பிரகாசமாக இருக்கும் என்பதால், உதடுகளின் அசைவுகளை வைத்தே, விமான பணிப்பெண்கள் என்ன பேசுகிறார்கள்? என்பதை காது கேட்காதவர்களால் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

விமான பணிப்பெண்கள் ஏன் சிகப்பு கலர் லிப்ஸ்டிக் போட்றாங்க தெரியுமா? இந்த மேக்-அப் கூட நம்ம பாதுகாப்புக்குத்தான்!

பிரகாசமான நிறத்தில் லிப்ஸ்டிக் அணிவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று விமான பணிப்பெண்கள் தெரிவிக்கின்றனர். இதை நம்புவதற்கு கடினமாக இருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால், மிகவும் பிரகாசமான லிப்ஸ்டிக், உதடுகளின் வடிவத்தை தெளிவாக காட்டும். எனவே காது கேட்காத நபர்களால், விமான பணிப்பெண்களின் உச்சரிப்பை எளிதாக உணர்ந்து கொள்ள இயலும்.

விமான பணிப்பெண்கள் ஏன் சிகப்பு கலர் லிப்ஸ்டிக் போட்றாங்க தெரியுமா? இந்த மேக்-அப் கூட நம்ம பாதுகாப்புக்குத்தான்!

குறிப்பாக அவசர சூழல்களில், விமான பணிப்பெண்கள் வழங்க கூடிய அறிவுறுத்தல்கள் வேகமாகவும் மற்றும் எளிதாகவும் அனைவரையும் சென்றடைய வேண்டும். அப்போதுதான் பாதிப்புகளை தவிர்க்கவோ அல்லது குறைக்கவோ முடியும். எனவே விமான பணிப்பெண்களின் உச்சரிப்பு, அனைவரையும் தெளிவாக சென்றடைவது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

விமான பணிப்பெண்கள் ஏன் சிகப்பு கலர் லிப்ஸ்டிக் போட்றாங்க தெரியுமா? இந்த மேக்-அப் கூட நம்ம பாதுகாப்புக்குத்தான்!

விமானங்களில் எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம்தான். எனவேதான் லிப்ஸ்டிக் போன்று நாம் சாதாரணமாக நினைக்கும் சிறிய விஷயத்தில் கூட விமான நிறுவனங்களும், விமான பணிப்பெண்களும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் சிந்தித்து செயல்படுகின்றனர்.

Article Published On: Monday, July 18, 2022, 14:19 [IST]
English summary
Why do flight attendants wear bright lipstick the reason will surprise you
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+