ராணுவ ஹெலிகாப்டர்களில் மட்டும் ஏன் ஈட்டி போன்ற ராடு இருக்கு தெரியுமா? இதுல இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

ராணுவ ஹெலிகாப்டர்களின் முன் பகுதியில் மட்டும் ஈட்டி போன்ற கம்பி இருக்கும். இதற்கு பின்னால் மறைந்துள்ள ரகசியங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராணுவ ஹெலிகாப்டர்களில் மட்டும் ஏன் ஈட்டி போன்ற கம்பி இருக்கு தெரியுமா? இதுல இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

உலகில் பல்வேறு வகையான ஹெலிகாப்டர்கள் (Helicopters) பயன்பாட்டில் இருக்கின்றன. ஆனால் ஒரு சில ஹெலிகாப்டர்களின் முன் பகுதியில் மட்டும் ஈட்டி போன்ற உலோக ராடு (Rod) நீட்டி கொண்டிருக்கும். அப்படி ஈட்டி போன்ற உலோக ராடு நீட்டி கொண்டிருக்கும் ஹெலிகாப்டர்கள், பெரும்பாலும் ராணுவ ஹெலிகாப்டர்களாக (Military Helicopters) இருக்கலாம்.

ராணுவ ஹெலிகாப்டர்களில் மட்டும் ஏன் ஈட்டி போன்ற கம்பி இருக்கு தெரியுமா? இதுல இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

பொதுவாக ராணுவ ஹெலிகாப்டர்கள்தான் இப்படி வித்தியாசமான முறையில் டிசைன் செய்யப்பட்டிருக்கும். ஹெலிகாப்டர்கள் குறித்த அரிய தகவல்களை தெரிந்து கொள்வதில் நீங்கள் ஆர்வம் உடையவர் என்றால், ராணுவ ஹெலிகாப்டர்களின் முன் பகுதியில் மட்டும் ஏன் ஈட்டி போன்ற கம்பி நீட்டி கொண்டிருக்கிறது? என்கிற சந்தேகம் உங்களுக்கு வந்திருக்கும்.

ராணுவ ஹெலிகாப்டர்களில் மட்டும் ஏன் ஈட்டி போன்ற கம்பி இருக்கு தெரியுமா? இதுல இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

உங்களின் இந்த சந்தேகத்தை இந்த செய்தியின் மூலம் நிவர்த்தி செய்கிறோம். ராணுவ ஹெலிகாப்டர்களின் முன் பகுதியில் ஈட்டி போன்று நீட்டி கொண்டுள்ள கம்பி, வானிலேயே எரிபொருள் நிரப்ப பயன்படுகிறது. அவசரமாக எரிபொருள் தேவைப்பட்டால், இந்த ஈட்டி போன்ற கம்பியின் மூலமாக, வானிலேயே ராணுவ ஹெலிகாப்டர்களால் எரிபொருள் நிரப்பி கொள்ள முடியும்.

ராணுவ ஹெலிகாப்டர்களில் மட்டும் ஏன் ஈட்டி போன்ற கம்பி இருக்கு தெரியுமா? இதுல இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

பெரும்பாலான நேரங்களில் ராணுவ ஹெலிகாப்டர்கள் அவசர பணிகளில்தான் ஈடுபட்டு கொண்டிருக்கும். பயணிகள் பயணம் செய்யும் ஹெலிகாப்டர்களை காட்டிலும், ராணுவ ஹெலிகாப்டர்களின் பணி மிகவும் வித்தியாசமானது. பயணிகள் ஹெலிகாப்டர்கள் பெரும்பாலும் திட்டமிட்டபடிதான் பயணிக்கும். எனவே அவற்றுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்ப வேண்டிய தேவை அவ்வளவு எளிதில் ஏற்படாது.

ராணுவ ஹெலிகாப்டர்களில் மட்டும் ஏன் ஈட்டி போன்ற கம்பி இருக்கு தெரியுமா? இதுல இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

எனவேதான் பயணிகள் ஹெலிகாப்டர்களின் முன் பகுதியில் வானிலேயே எரிபொருள் நிரப்ப பயன்படும் ஈட்டி போன்ற கம்பி இடம்பெறுவதில்லை. ஆனால் ராணுவ ஹெலிகாப்டர்களின் கதை வித்தியாசமானது. போர்க்களங்களில் அவை பணியில் ஈடுபடுகின்றன. அத்துடன் மழை, வெள்ளம், புயல், பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர் சமயங்களிலும், அவை மக்களை மீட்கும் பணியையும் செய்கின்றன.

ராணுவ ஹெலிகாப்டர்களில் மட்டும் ஏன் ஈட்டி போன்ற கம்பி இருக்கு தெரியுமா? இதுல இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

எனவே ராணுவ ஹெலிகாப்டர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் திடீரென எரிபொருள் தேவைப்படலாம். எரிபொருள் நிரப்புவதற்காக ராணுவ ஹெலிகாப்டர்கள் தரையிறங்கி கொண்டிருந்தால், தேவையில்லாமல் காலதாமதம் ஏற்படும். இந்த காலதாமதம் ராணுவ ஹெலிகாப்டர்களின் பணியில் மிகப்பெரிய தொய்வை ஏற்படுத்தும்.

ராணுவ ஹெலிகாப்டர்களில் மட்டும் ஏன் ஈட்டி போன்ற கம்பி இருக்கு தெரியுமா? இதுல இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

அத்துடன் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கினால், தேவையில்லாமல் கூடுதல் எரிபொருளும் செலவு ஆகும். இதுபோன்ற காரணங்களால்தான், ராணுவ ஹெலிகாப்டர்களில் வானிலேயே எரிபொருள் நிரப்பி கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம், ராணுவ ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து கொண்டிருக்கும்போதே தங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்று கொள்ள முடியும்.

ராணுவ ஹெலிகாப்டர்களில் மட்டும் ஏன் ஈட்டி போன்ற கம்பி இருக்கு தெரியுமா? இதுல இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

வானில் பறந்து கொண்டிருக்க கூடிய மற்றொரு விமானத்திடம் இருந்து ராணுவ ஹெலிகாப்டர்கள் தங்களுக்கு எரிபொருளை பெறும். இதற்காகதான் ராணுவ ஹெலிகாப்டர்களின் முன் பகுதியில் ஈட்டி போன்ற கம்பி வழங்கப்படுகிறது. முதலில் எரிபொருள் தேவைப்படும் ராணுவ ஹெலிகாப்டரையும், எரிபொருள் வழங்கக்கூடிய விமானத்தையும் அருகருகே கொண்டு வந்து விடுவார்கள்.

ராணுவ ஹெலிகாப்டர்களில் மட்டும் ஏன் ஈட்டி போன்ற கம்பி இருக்கு தெரியுமா? இதுல இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

குறிப்பிட்ட இடைவெளியில் அவை இரண்டும் வானில் மிதந்து கொண்டிருக்கும். இதன் பின்னர் எரிபொருளை வழங்க கூடிய விமானத்தில் இருந்து ஒரு குழாய் (Hose) வெளியே நீட்டப்படும். இதன் நுனியில் எரிபொருள் நிரப்பும் கூடை (Refueling Basket) இருக்கும். ராணுவ ஹெலிகாப்டரின் முன்னால் உள்ள ஈட்டி போன்ற கம்பியை, இந்த எரிபொருள் நிரப்பும் கூடைக்குள் கச்சிதமாக சொருக வேண்டும்.

ராணுவ ஹெலிகாப்டர்களில் மட்டும் ஏன் ஈட்டி போன்ற கம்பி இருக்கு தெரியுமா? இதுல இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

இதன் மூலமாக விமானத்தில் இருந்து, ராணுவ ஹெலிகாப்டருக்கு எரிபொருள் பரிமாற்றம் நடக்கும். இந்த செய்தியில் வழங்கப்பட்டுள்ள புகைப்படங்கள் மூலமாக எரிபொருள் பரிமாற்றம் எப்படி நடைபெறுகிறது? என்பதை நீங்கள் இன்னும் மிக தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இப்படி வானிலேயே எரிபொருளை பெற்ற பின்னர், ராணுவ ஹெலிகாப்டர்கள் தங்களின் பணியை தங்கு தடையின்றி தொடர்ந்து மேற்கொள்ளும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why do military helicopters have metal rod
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X