விமானத்தில் ஏறியதும் நிறைய பேர் தக்காளி ஜூஸ் குடிப்பாங்க! ஏன்? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் மறஞ்சிருக்கா

விமானத்தில் ஏறியதும் நிறைய பேர் தக்காளி ஜூஸ் குடிப்பார்கள். இதற்கு பின்னால் மறைந்துள்ள ரகசியங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானத்தில் ஏறியதும் நிறைய பேர் தக்காளி ஜூஸ் குடிப்பாங்க! ஏன்? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் மறஞ்சிருக்கா

விமானங்களில் பயணிகள் அதிகமாக ஆர்டர் செய்யும் பானங்களில் ஒன்று தக்காளி ஜூஸ். விமானங்களில் நீங்கள் பயணம் செய்திருந்தால், நிறைய பயணிகள் தக்காளி ஜூஸ் ஆர்டர் செய்வதை பார்த்திருக்கலாம். பயணிகள் மத்தியில் தக்காளி ஜூஸ் எவ்வளவு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்ற விஷயத்தை ஜெர்மனியை சேர்ந்த லூஃப்தான்சா விமான நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.

விமானத்தில் ஏறியதும் நிறைய பேர் தக்காளி ஜூஸ் குடிப்பாங்க! ஏன்? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் மறஞ்சிருக்கா

லூப்தான்சா நிறுவனத்தின் விமானங்களில், கடந்த 2015ம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 15 லட்சம் லிட்டர் தக்காளி ஜூஸை பயணிகள் குடித்துள்ளனர்! இது ஒரு நிறுவனத்தின் விமானங்களில், ஒரு ஆண்டில் மட்டும் பயணிகளால் குடிக்கப்பட்ட தக்காளி ஜூஸின் அளவாகும். எனவே அனைத்து நிறுவனங்களையும் கணக்கிட்டால், இந்த அளவு பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.

விமானத்தில் ஏறியதும் நிறைய பேர் தக்காளி ஜூஸ் குடிப்பாங்க! ஏன்? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் மறஞ்சிருக்கா

உலகில் தக்காளி ஜூஸ் அதிகமாக குடிக்கப்படும் இடங்களில் விமானமும் ஒன்று என உறுதியாக சொல்ல முடியும். விமானங்களில் பயணிகள் பலரும் ஏன் தக்காளி ஜூஸை வாங்கி வாங்கி குடிக்கின்றனர்? என்ற சந்தேகம் தற்போது உங்களுக்கு எழுந்திருக்கும். அந்த சந்தேகத்தை இந்த செய்தி தொகுப்பு நிவர்த்தி செய்கிறது.

விமானத்தில் ஏறியதும் நிறைய பேர் தக்காளி ஜூஸ் குடிப்பாங்க! ஏன்? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் மறஞ்சிருக்கா

பொதுவாக விமானங்களில் பயணிக்கும்போது, உணவின் சுவை நன்றாக இருக்காது. இதற்கான விமான நிறுவனங்கள் காரணம் அல்ல. மிகவும் உயரமான இடத்தில், நமது நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் வித்தியாசமாக செயல்படுவதுதான் இதற்கான காரணம். விமானங்களின் கேபினில் இருக்கும் காற்று வறண்டதாக இருக்கும்.

விமானத்தில் ஏறியதும் நிறைய பேர் தக்காளி ஜூஸ் குடிப்பாங்க! ஏன்? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் மறஞ்சிருக்கா

அத்துடன் விமானத்தில் பறக்கும்போது காற்றின் அழுத்தத்திலும் மாற்றங்கள் ஏற்படும். இதன் காரணமாக நமது ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு குறைந்து விடும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து நமது வாசனை மற்றும் சுவையை உணரும் திறன்களில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. எனவேதான் விமானங்களில் உணவு சுவையில்லாமல் இருக்கிறது.

விமானத்தில் ஏறியதும் நிறைய பேர் தக்காளி ஜூஸ் குடிப்பாங்க! ஏன்? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் மறஞ்சிருக்கா

விமானங்கள் எழுப்பும் சத்தம் கூட, மனிதர்களின் சுவையை உணரும் திறன்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற காரணங்களால் விமானங்களில் பெரும்பாலான உணவுகள் சுவையாக இருக்காது. ஆனால் தக்காளி ஜூஸின் கதையே வேறு. எனவேதான் நிறைய பேர் விமானங்களில் தக்காளி ஜூஸை விரும்பி குடிக்கின்றனர்.

விமானத்தில் ஏறியதும் நிறைய பேர் தக்காளி ஜூஸ் குடிப்பாங்க! ஏன்? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் மறஞ்சிருக்கா

விமானங்களில் பறப்பதன் காரணமாக, நமது நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் பல்வேறு ஃப்ளேவர்களை (Flavors), அதாவது சுவைகளை, 'டேஸ்ட்' செய்யும் திறனை இழந்து விடுகின்றன. ஆனால் ஒரு ஃப்ளேவர் மட்டும், நாக்கின் சுவை மொட்டுக்களால் நன்றாக உணரப்படும். அது உமாமி (Umami). உமாமி என்பது இனிப்பு, கசப்பு ஆகியவற்றை போன்று ஒரு சுவை ஆகும்.

விமானத்தில் ஏறியதும் நிறைய பேர் தக்காளி ஜூஸ் குடிப்பாங்க! ஏன்? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் மறஞ்சிருக்கா

இந்த உமாமி சுவைக்காகதான் தக்காளி ஜூஸ் அறியப்படுகிறது. அதாவது தக்காளி ஜூஸில் நிறைய உமாமி உள்ளது. எனவே விமானங்களிலும் தக்காளி ஜூஸ் மிகவும் சுவையாக இருக்கும். விமானங்களில் பயணம் செய்யும்போது, மற்ற பல்வேறு பானங்களை விட, தக்காளி ஜூஸின் சுவையை நம்மால் நன்றாக உணர முடியும்.

விமானத்தில் ஏறியதும் நிறைய பேர் தக்காளி ஜூஸ் குடிப்பாங்க! ஏன்? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் மறஞ்சிருக்கா

எனவேதான் விமானங்களில் தக்காளி ஜூஸிற்கு அதிக 'டிமாண்ட்' காணப்படுகிறது. விமானங்களில் தக்காளி ஜூஸை நிறைய பேர் குடிப்பதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உள்ளது. அது உடல்நலன் சார்ந்த பலன்கள் ஆகும். ஆம், விமானத்தில் பயணம் செய்யும்போது தக்காளி ஜூஸை குடித்தால், நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

விமானத்தில் ஏறியதும் நிறைய பேர் தக்காளி ஜூஸ் குடிப்பாங்க! ஏன்? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் மறஞ்சிருக்கா

நாங்கள் ஏற்கனவே கூறியபடி விமானங்களின் கேபினில் இருக்கும் காற்று மிகவும் வறண்டதாக இருக்கும். இது நம் உடலுக்கு நல்லதல்ல. விமானங்களில் பயணம் செய்யும்போது, நம் உடல் நீரிழப்பு பிரச்னையை எதிர்கொள்ளும். இதன் காரணமாக உடலுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம். இந்த பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு தக்காளி ஜூஸ் உதவி செய்கிறது.

விமானத்தில் ஏறியதும் நிறைய பேர் தக்காளி ஜூஸ் குடிப்பாங்க! ஏன்? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் மறஞ்சிருக்கா

அதாவது தக்காளி ஜூஸ் மூலம் நம் உடலுக்கு தேவையான எலெக்ட்ரோலைட்களை (Electrolytes) பெற்று கொள்ளலாம். எலெக்ட்ரோலைட்கள் என்பவை, சோடியம், பொட்டாஷியம் ஆகியவற்றை போன்ற மினரல் ஆகும். நம் உடலின் இயக்கத்திற்கு எலெக்ட்ரோலைட்கள் மிகவும் அவசியமானது. உடலில் நீரிழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு எலெக்ட்ரோலைட்கள் உதவி செய்கின்றன.

விமானத்தில் ஏறியதும் நிறைய பேர் தக்காளி ஜூஸ் குடிப்பாங்க! ஏன்? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் மறஞ்சிருக்கா

எலெக்ட்ரோலைட்களை பெற உதவி செய்வதாலும், விமானத்தில் பயணிகள் விரும்பும் பானங்களில் தக்காளி ஜூஸ் மிகவும் முக்கியமானதாக உள்ளது. அத்துடன் விமானங்களில் தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் தக்காளி ஜூஸ் குறைக்கிறது. பொதுவாக விமானங்கள் மிகவும் நெருக்கடியான இருக்கைகளை கொண்டிருக்கும்.

விமானத்தில் ஏறியதும் நிறைய பேர் தக்காளி ஜூஸ் குடிப்பாங்க! ஏன்? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் மறஞ்சிருக்கா

அதில் நிறைய பேர் பயணம் செய்வதால், தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால் தக்காளி ஜூஸ் நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி, தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. தக்காளி ஜூஸில் விட்டமின்-சி அதிகமாக இருப்பதுதான் இதற்கு காரணம். எனவே இனி விமானத்தில் செல்லும்போது நீங்களும் தக்காளி ஜூஸ் குடியுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why do passengers drink so much tomato juice on airplanes
Story first published: Thursday, August 11, 2022, 14:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X