முன்னாடியே தெரியாம போச்சே... சொகுசு கார் வாங்கினால் எங்கயோ போயிரலாம்... இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என ஆசைப்படுபவர்களில் நீங்களும் ஒருவரா? அப்போ உடனே ஒரு சொகுசு கார் வாங்குங்க. ஏன்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முன்னாடியே தெரியாம போச்சே... சொகுசு கார் வாங்கினால் எங்கயோ போயிரலாம்... இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

இந்திய சந்தையில் ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் சொகுசு கார்களை விற்பனை செய்து வருகின்றன. அவற்றை ஏன் பலரும் வாங்குகின்றனர் என்று நீங்கள் என்றைக்காவது யோசித்தது உண்டா? பணம் இருக்கிறது. அதனால் வாங்குகிறார்கள் என பதில் அளித்து விட்டு இந்த கேள்வியை கடந்து சென்று விட முடியாது.

முன்னாடியே தெரியாம போச்சே... சொகுசு கார் வாங்கினால் எங்கயோ போயிரலாம்... இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஒருவர் சொகுசு காரை வாங்குகிறார் என்றால், அதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதில் நிறைய காரணங்கள் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. எனவே விலை உயர்ந்த சொகுசு கார்களை மக்கள் ஏன் வாங்குகின்றனர்? என்பதற்கான முக்கிய காரணங்களை இந்த செய்தியில் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

முன்னாடியே தெரியாம போச்சே... சொகுசு கார் வாங்கினால் எங்கயோ போயிரலாம்... இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

மரியாதை

சொகுசு கார்களை வைத்திருப்பவர்களுக்கு நாங்கள் என்ன பேச போகிறோம்? என்பது தெரியும். உங்களிடம் சொகுசு கார் இல்லாவிட்டாலும் கூட மரியாதை என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை புரிந்திருப்பீர்கள் என நம்புகிறோம். ரோல்ஸ் ராய்ஸ் போன்ற மிகவும் விலை உயர்ந்த கார்கள் சாலையில் சென்றால், அதில் பயணிப்பவர்கள் மற்றவர்களின் கவனத்தை எளிதாக ஈர்த்து விடுவார்கள்.

முன்னாடியே தெரியாம போச்சே... சொகுசு கார் வாங்கினால் எங்கயோ போயிரலாம்... இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

சொகுசு கார்கள் நிறுத்தப்பட்டிருந்தால், அதனுடன் போட்டோ எடுத்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டுவது இந்தியாவிற்கு புதிய காட்சிகள் கிடையாது. அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றாலும், சாதாரண கார்களை வைத்திருப்பவர்களை காட்டிலும் சொகுசு கார்களை சொந்தமாக வைத்திருப்பவர்களுக்குதான் இங்கு கூடுதல் மரியாதை கிடைக்கிறது.

முன்னாடியே தெரியாம போச்சே... சொகுசு கார் வாங்கினால் எங்கயோ போயிரலாம்... இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

தொழில் வளர்ச்சி

ஆம், இது உண்மைதான். தொழில் சம்பந்தமாக நீங்கள் யாராவது ஒருவரை சந்திக்க சென்றால், அவர் மனதில் உங்களை பற்றி நல்ல அபிப்ராயம் ஏற்படுவதற்கு, உங்கள் கார் முக்கியமான காரணமாக இருக்கிறது. அதுவே நீங்கள் சொகுசு கார் வைத்திருந்தால், உங்களை வெற்றிகரமான நபராக கருதுவார்கள். வெற்றிகரமான நபர்களுடன் தங்களை இணைத்து கொள்வதுதான் அனைவரின் விருப்பமாகவும் இருக்கும்.

முன்னாடியே தெரியாம போச்சே... சொகுசு கார் வாங்கினால் எங்கயோ போயிரலாம்... இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

எனவே உங்களுடைய தொழில் வளர்ச்சிக்கும் சொகுசு கார்கள் ஒரு வகையில் உதவி செய்கின்றன என்பதை நிச்சயம் மறுக்க முடியாது. தாங்கள் எந்த துறையை சேர்ந்தவர்களோ, அதற்கு ஏற்ப காரின் நிறத்தை தேர்வு செய்பவர்களும் கூட இங்கே உள்ளனர். தொழில் வளர்ச்சியை மனதில் வைத்துதான், அவர்களது இந்த நடவடிக்கை அமைகிறது.

முன்னாடியே தெரியாம போச்சே... சொகுசு கார் வாங்கினால் எங்கயோ போயிரலாம்... இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

நற்பெயர்

இது உங்களுக்கு செயற்கையாக தோன்றலாம். ஆனால் இந்த விஷயம் நிச்சயம் உண்மை. சொகுசு கார்கள் நிச்சயமாக உங்கள் சமூக வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். உங்களிடம் சொகுசு கார்கள் இருந்தால், உங்கள் அக்கம் பக்கத்தினர் உங்களை மிகவும் சக்தி வாய்ந்த நபராக கருதுவார்கள். சொகுசு கார் வைத்திருப்பவர்களை நீங்களும் கூட அப்படி கருதியிருக்க வாய்ப்புகள் உண்டு.

முன்னாடியே தெரியாம போச்சே... சொகுசு கார் வாங்கினால் எங்கயோ போயிரலாம்... இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

குறிப்பாக சொகுசு கார் வைத்திருப்பவர்களுக்கு மற்றவர்கள் மத்தியில் நிச்சயமாக நற்பெயர் கிடைக்கும். ஆனால் நடத்தை சரியில்லாத ஒருவர், எவ்வளவு பெரிய காரை வைத்திருந்தாலும், இந்த பிம்பத்தை நீண்ட நாட்களுக்கு கட்டமைக்க முடியாது. சொகுசு கார் என்பது முதல் பார்வையிலேயே மற்றவர்களை கவர்வதற்கான ஒரு கருவி மட்டுமே.

முன்னாடியே தெரியாம போச்சே... சொகுசு கார் வாங்கினால் எங்கயோ போயிரலாம்... இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

தனித்துவம்

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை இங்கே உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம். மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் பலராலும் வாங்கப்படுகிறது. எனவே சாலையில் ஸ்விஃப்ட் கார்களை அதிகமாக பார்க்க முடியும். அதுவே ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் என்றால், சாலையில் அதனை பார்ப்பதே அரிதான விஷயம். இந்த தனித்துவத்திற்காகவும் சொகுசு கார்களை பலர் வாங்குகின்றனர்.

முன்னாடியே தெரியாம போச்சே... சொகுசு கார் வாங்கினால் எங்கயோ போயிரலாம்... இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஒரு நகரம் அல்லது பிராந்தியத்தில் ஒரு சில கார்கள் ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கும். சம்பந்தப்பட்ட நபருக்கு இது புகழை ஏற்படுத்தும். இதற்காகவும் தனித்துவமான கார்களை வாங்குபவர்கள் இங்கே இருக்கின்றனர். அவர்கள் வைத்துள்ள கார் மூலமாக கூட அவர்களை மற்றவர்கள் அடையாளப்படுத்துவார்கள். இந்த புகழ் போதைக்கு பலர் அடிமை.

முன்னாடியே தெரியாம போச்சே... சொகுசு கார் வாங்கினால் எங்கயோ போயிரலாம்... இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

கட்டுமான தரம்

சாதாரண கார்களை காட்டிலும் சொகுசு கார்களின் கட்டுமான தரம் மிகவும் சிறப்பாக இருக்கும். சொகுசு கார்களின் விலை மிகவும் அதிகம் என்பதால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் இதனை சாத்தியப்படுத்த முடிகிறது. அத்துடன் தரமான மெட்டீரியல்களை பயன்படுத்துவதுடன், அதிநவீன வசதிகளையும் அவர்களால் வழங்க முடிகிறது.

முன்னாடியே தெரியாம போச்சே... சொகுசு கார் வாங்கினால் எங்கயோ போயிரலாம்... இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால் சாதாரண கார்களில் இந்த விஷயங்கள் அனைத்தும் அப்படியே தலைகீழாக இருக்கும். சாதாரண கார்களின் கட்டுமான தரம் அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பதுடன், அதிநவீன வசதிகளுக்கும் பற்றாக்குறை இருக்கும். இதன் காரணமாகவும் சொகுசு கார் நிறுவனங்களின் பக்கம் நிறைய பேர் சாய்கின்றனர்.

முன்னாடியே தெரியாம போச்சே... சொகுசு கார் வாங்கினால் எங்கயோ போயிரலாம்... இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

கவனிப்பு

சொகுசு கார் நிறுவனங்களும், டீலர்ஷிப்களும் வாடிக்கையாளர்களை நன்றாக கவனித்து கொள்கின்றன. அவர்கள் அதிக பணம் கொடுப்பதால் விழுந்து விழுந்து கவனிக்கப்படுகிறார்கள். நீங்கள் சொகுசு காரை வாங்குவதாக இருந்தால், ஆரம்பம் முதல் இறுதி வரை உங்களுக்கான கவனிப்பு சிறப்பாக இருக்கும். சாதாரண கார்களை வாங்கும்போது இந்த கவனிப்பு கிடைப்பது சிரமம்தான்.

முன்னாடியே தெரியாம போச்சே... சொகுசு கார் வாங்கினால் எங்கயோ போயிரலாம்... இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

சாதாரண கார்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் டீலர்ஷிப்பில் அவமரியாதை, சர்வீஸ் செய்வதில் பிரச்னை என ஏகப்பட்ட சவால்களை சந்திக்கின்றனர். ஆனால் சொகுசு கார் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை நடத்தும் விதமே வேறு. எனவே வாடிக்கையாளர்கள் திருப்தியில் சாதாரண நிறுவனங்களை விட சொகுசு கார் நிறுவனங்கள் தலை சிறந்து விளங்குகின்றன.

முன்னாடியே தெரியாம போச்சே... சொகுசு கார் வாங்கினால் எங்கயோ போயிரலாம்... இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

கனவு

நம்மில் பலருக்கும் வாழ்க்கையில் ஒரு சொகுசு காரையாவது வாங்கி விட வேண்டும் என்ற கனவு நிச்சயமாக இருக்கும். ஒரு சிலரோ இந்த காரைதான் வாங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பார்கள். அவர்கள் செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தை சேர்ந்தவர் என்றால், கனவு காரை எளிதாக வாங்கி வீட்டில் நிறுத்தி விடலாம்.

முன்னாடியே தெரியாம போச்சே... சொகுசு கார் வாங்கினால் எங்கயோ போயிரலாம்... இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

மறுபக்கம் இன்னும் சிலரோ கனவு காரை வாங்குவதற்காக மிகவும் கடுமையாக உழைக்கின்றனர். இறுதியில் அந்த கனவை அவர்கள் நிறைவேற்றியும் விடுகின்றனர். எனவே பணம் இருக்கிறது என்பதற்காக மட்டும் ஒருவர் சொகுசு காரை வாங்குகிறார் என கூறுவதை முழுமையாக ஏற்க முடியாது. தங்களுடைய கனவை நிறைவேற்றவும் பலர் சொகுசு கார்களை வாங்குகின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why Do People Buy A Expensive Luxury Car: Important Reasons And Benefits. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X